- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதைப்பூசம் ஆறு நாள் விரதம் இருக்கும் முறை

தைப்பூசம் ஆறு நாள் விரதம் இருக்கும் முறை

- Advertisement -

முருகப்பெருமானை ஆறுமுகன் என்று கூறுவது உண்டு. அவருக்கு ஆறுமுகங்கள் இருப்பதினால் அந்த பெயர் வந்தது. அதனாலேயே முருகப்பெருமானுக்கு ஆறு என்ற எண் மிகவும் உகந்த எண்ணாக கருதப்படுகிறது. மேலும் முருகப் பெருமானுக்குரிய விரத நாட்களாக கூறப்படக்கூடிய தைப்பூசம் நெருங்கி வருகிறது. இந்த தைப்பூசத்தை முன்னிட்டு பலரும் 48 நாட்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பழனிக்கு சென்று பழநி தண்டாயுதபாணியை வழிப்பாடு செய்வார்கள். 48 நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் கூட வெறும் ஆறே நாட்கள் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்தாலே முருகப் பெருமானின் அருளை பெற முடியும். அந்த விரத முறையை எப்படி கடைபிடிப்பது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தைப்பூசம் ஆறு நாள் விரதம்

விரதம் இருப்பது என்பது இறைவனின் அருளை பெறுவதற்குரிய வழிமுறை ஆகும். மேலும் இதன் மூலம் நம்முடைய உடலும் ஆரோக்கியமாக திகழும் என்று அறிவியல் ரீதியாக கூறப்படுகிறது. நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வேண்டுதல், ஆசைகள் என்று இருக்கும். அது நிறைவேற வேண்டும் என்னும் பட்சத்தில் இறைவனை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்வோம். அப்படி முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்வதற்கு உகந்த ஒரு நாளாக தான் தைப்பூசம் திகழ்கிறது. தைப் மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி திதியும் பூச நட்சத்திரமும் சேர்ந்து வரக்கூடிய நாளை தான் நாம் தைப்பூசம் என்று கூறுகிறோம்.

- Advertisement -

இந்த வருடம் தைப்பூசமானது பிப்ரவரி மாதம் 11-ம் தேதி வருகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு அனைத்து முருகன் ஆலயங்களிலும் கொடியேற்றம் என்பது நடைபெற்று தைப்பூச நாளன்று திருவிழா போல் கோலாகலமாக கொண்டாடப்படும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்த தைப்பூச நாளில் முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. இந்த விரதமுறையை பலரும் பல விதங்களில் மேற்கொள்வார்கள். 48 நாட்கள், 21 நாட்கள், 11 நாட்கள் அல்லது தைப்பூச நாளன்று மட்டும் விரதம் இருப்பது, அதேபோல் முருகப்பெருமானுக்கு உகந்த ஆறு நாட்கள் நாம் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்யலாம்.

இப்படி ஆறு நாட்கள் விரதம் இருக்கக்கூடியவர்கள் பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி விரதத்தை தொடங்க வேண்டும். அன்றைய தினம் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வருகிறது என்பதால் அது கூடுதல் பலனை தரும். அன்றைய தினம் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்து கொள்ளுங்கள். வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகனின் படத்தை சுத்தம் செய்து அவருக்கு வாசனை மிகுந்த மலர்களை சாற்றி அவருக்கு முன்பாக ஒரே ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு வாசனை மிகுந்த சாம்பிராணி, ஊதுபத்தி போன்றவற்றை காட்டி விட்டு தங்கள் வீட்டில் என்ன இருக்கிறதோ அதை முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.

- Advertisement -

பால், பழம், பேரிச்சம்பழம், கற்கண்டு, ஏலக்காய் இப்படி எது இருக்கிறதோ அதை வைத்து முருகப்பெருமானின் மந்திரமான “சரவணபவ” என்னும் மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். இதே போல் மாலை நேரத்திலும் தீபம் ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். இந்த ஆறு நாட்களும் உடல்நலம் சீராக இருப்பவர்கள் ஒருவேளை மட்டும் உணவை எடுத்துக்கொண்டு மீத நேரத்தில் விரதம் இருக்கலாம். சற்று உடல் நலத்தில் பாதிப்புகள் இருக்கிறது என்று நினைப்பவர்கள் ஒரு முறை மட்டும் சாப்பிடாமல் மீதம் இருக்கக்கூடிய இரண்டு வேளைகளும் எளிமையான உணவுகளை சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

இந்த விரத நாட்களில் முருகப்பெருமானின் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். யாரிடமும் கோபப்படக்கூடாது. எந்தவித கெட்ட வார்த்தைகளையும் உப யோகப்படுத்தக் கூடாது. பகலில் உறங்கக்கூடாது. அசைவம், மது, புகை என்று எதுவும் சாப்பிடக்கூடாது. தொலைக்காட்சியை பார்ப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது. கேளிக்கை விஷயங்களில் மனதை ஈடுபடுத்தாமல் ஆன்மீக ரீதியான விஷயங்களில் மனதை ஈடுபடுத்தி முருகப் பெருமானே தொடர்ச்சியாக நினைக்க வேண்டும். தைப்பூச நாள் வரை இந்த முறையில் விரதம் இருந்து முருகப்பெருமானிடம் வேண்டுதலை வைத்து வழிபாடு செய்வதன் மூலம் விரைவிலேயே முருகப்பெருமான் அந்த வேண்டுதலை நிறைவேற்றுவார்.

இதையும் படிக்கலாமே:ரத சப்தமி தீப வழிபாடு
அனைத்து முருகன் ஆலயங்களிலும் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு ஆறு நாட்கள் இந்த முறையில் எளிமையான விரதத்தை கையாண்டு முருகப்பெருமானின் அருளைப் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்