- Advertisement -

ரத சப்தமி தீப வழிபாடு

- Advertisement -

சூரிய பகவான் அவதரித்த தினத்தை சூரிய ஜெயந்தி என்று கூறுவோம். அதைத்தான் ரதசப்தமி என்றும் கூறுகிறோம். தை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சப்தமியை தான் நாம் ரதசப்தமி என்று கூறுகிறோம். அன்றைய தினத்தில் நாம் சூரிய பகவானை வழிபாடு செய்யும்பொழுது சூரிய பகவானின் பரிபூரணமான அருள் நமக்கு கிடைக்கும். சூரிய பகவானால் ஏற்படக்கூடிய நன்மைகள் அனைத்தும் கிடைக்கும். அப்படிப்பட்ட ஒரு சிறப்பு மிகுந்த ரதசப்தமி நாளன்று செய்ய வேண்டிய தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ரத சப்தமி தீப வழிபாடு

ஒருவருடைய ஜாதகத்தில் சூரிய பகவானின் ஆதிக்கம் என்பது சிறப்பாக இருந்தால் அவர் உயர் பதவியை அடைவார். மேலும் அதிகாரத் தன்மை என்பது அவருக்கு அதிகமாகவே இருக்கும். அரசாங்கம் அரசியல் தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஈடுபாடும் அதிகமாக இருக்கும். இதோடு மட்டுமல்லாமல் அவருக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கண் பார்வை தெளிவாக இருக்கும். அரசாங்க பதவியை அடைவார்கள். விரும்பிய வேலை கிடைக்கும். வேலையில் நல்ல பதவி உயர்வும் கிடைக்கும். இதோடு முக்கியமான அரசாங்க தேர்விற்காக தேர்வு எழுதுபவர்களுக்கு அதில் வெற்றி கிடைப்பதற்கும் சூரிய பகவானின் அருள் என்பது வேண்டும். இவ்வளவு பலன்களை தரக்கூடிய சூரிய பகவானின் அருளை பெறுவதற்கு ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

ரத சப்தமி நாளன்று சூரிய உதயம் ஆன பிறகு அதாவது காலை 6:34 மணிக்கு பிறகு நண்பகல் 12 மணிக்குள் இந்த தீபத்தை ஏற்றி விட வேண்டும். உச்சிப் பொழுது கழிந்த பிறகு தீபம் ஏற்றக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நமக்கு ஒரு கைப்பிடி அளவு கோதுமை வேண்டும். கோதுமை என்பது சூரிய பகவானின் தானியம் என்று அனைவருக்கும் தெரியும். முழு கோதுமையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதை தட்டில் பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சிவப்பு திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள்.

பிறகு சிவப்பு நிற மலர்களால் சூரிய பகவானின் பின்வரும் இந்த 12 நாமங்களை கூறி அந்த தீபத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி அர்ச்சனை செய்து முடித்துவிட்டு உங்களுக்கு எந்த காரியம் நடைபெற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை சூரிய பகவானை நினைத்தவாறு கூற வேண்டும். இந்த தீபம் கிழக்கு பார்த்து எரிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மறுநாள் காலையில் இந்த கோதுமையை எடுத்து பறவைகளுக்கு தானமாக தந்து விட வேண்டும். இயன்றவர்கள் கோதுமை மாவினால் ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை செய்து வைத்து இந்த வழிபாட்டை செய்தால் இன்னும் அதிக பலன் கிடைக்கும்.

- Advertisement -

சூரிய பகவானின் நாமங்கள்

ஸ்ரீ மித்ரா
ஸ்ரீ ரவி
ஸ்ரீ சூர்யா
ஸ்ரீ பானு
ஸ்ரீ காகா
ஸ்ரீ தேவ கார்யா
ஸ்ரீ ஹிரண்ய கர்பா
ஸ்ரீ அருணா
ஸ்ரீ சவிதா
ஸ்ரீ ஆதித்யா
ஸ்ரீ பாஸ்கரா
ஸ்ரீ அர்கா

இதையும் படிக்கலாமே:சகல பாவங்களை நீக்கும் ரதசப்தமி குளியல் பரிகாரம்
சூரிய பகவானின் பரிபூரணமான அருளை பெறுவதற்கு இந்த எளிமையான தீப வழிபாட்டை நண்பகல் 12 மணிக்குள் செய்பவர்களுக்கு சூரிய பகவானின் அருளால் அனைத்துவித நன்மைகளும் அவர்களுடைய வாழ்க்கையில் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்