இன்றைய காலத்தில் பலரும் சந்திக்கக்கூடிய ஒரு பிரச்சனை என்றால் அது முகப்பருதான். மேலும் இன்றைய காலத்தில் இருக்கக்கூடிய பெண்கள் பலரும் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். அதனால் அவர்களுடைய முகத்தில் அதிக அளவில் மாசுகள் படிந்து அதன் மூலம் முகம் கலை இழந்து காணப்படும். இவை அனைத்தையும் நீக்குவதற்கு ஒரே ஒரு மூலிகை இலை இருந்தால் போதும் என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா? ஆம் அந்த மூலிகை இலை என்ன என்றும் அதை எப்படி முகத்தில் பயன்படுத்த வேண்டும் என்றும் தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
பருக்கள் அற்ற அழகான முகத்தை பெற
இயற்கை நமக்கு கொடுத்த வரப் பிரசாதமாக திகழக்கூடியது தான் மூலிகைகள். இந்த மூலிகைகளை நாம் முறையாக பயன்படுத்தும் பொழுது நாம் என்றுமே ஆரோக்கியமாக இருப்போம். ஆரோக்கியமாக இருப்பதோடு மட்டும் அல்லாமல் அழகாகவும் இளமையாகவும் திகழ்வோம் என்று கூட கூறலாம். அதனால்தான் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் இந்த மூலிகைகளை பயன்படுத்தி என்றும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் திகழ்ந்தார்கள் என்று கூட கூறலாம். நாளடைவில் இந்த மூலிகைகளை பயன்படுத்துவதை நாம் தவிர்த்ததால் தான் விரைவிலேயே முதுமை ஏற்பட்டு ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கிறோம். நம்முடைய முகத்தில் ஏற்படக்கூடிய பலவிதமான பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய ஒரு மூலிகையை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
அந்த மூலிகை தான் துளசி இலை. துளசி இலை என்பது மருத்துவ குணம் மிகுந்த இலை. இந்த துளசி இலையை நாம் ஆன்மீகத்திற்கும் பயன்படுத்துவோம். துளசியிலையை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட துளசி இலையை நம்முடைய முகத்திற்கு நாம் பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய பருக்கள் முற்றிலும் நீங்கும். அதோடு மட்டுமல்லாமல் நம் முகத்தில் ஏற்பட்டிருக்க கூடிய கரும்புள்ளிகளும் மாசுகளும் நீங்கி சுத்தமான அழகான முகத்தை நம்மால் பெற முடியும்.
இதற்கு ஒரு கைப்பிடி அளவு துளசி இலையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு மட்டும் துளசி இலை அரைப்பதற்காக சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் அளவிற்கு தயிரை சேர்த்துக் கொள்ளுங்கள். தயிரை நம்முடைய முகத்தில் நாம் பயன்படுத்துவதன் மூலம் நம் முகத்தில் இருக்கக்கூடிய அழுக்குகள் அனைத்தும் நீங்கும். ஒரு வித பொலிவு உண்டாகும் என்று கூறப்படுகிறது.
இந்த தயிருடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு இதில் மூன்று ஸ்பூன் அளவிற்கு நாம் அரைத்து வைத்திருந்த துளசி இலையை சேர்க்க வேண்டும். இப்பொழுது இதை நன்றாக கலக்க வேண்டும். நம் முகத்தில் தடவ கூடிய ஃபேஸ் பேக் தயாராகிவிட்டது. இதை நம்முடைய முகம் கழுத்து போன்ற இடங்களில் நன்றாக தடவி 20 நிமிடம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பிறகு முகத்தை சுத்தம் செய்து கொள்ளலாம். இந்த முறையில் தினமும் நாம் பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய பருக்கள் முற்றிலும் நீங்கும். முக துவாரங்களில் இருக்கக்கூடிய அழுக்குகளும் விலகும். முகம் பளிச்சென்று பிரகாசமாக அழகாக சுத்தமான முகமாக தெரியும்.
இதையும் படிக்கலாமே:பொலிவற்ற முகத்தை அழகாக மாற்ற
நம்முடைய அழகை நாம் மேம்படுத்திக் கொள்வதற்கு இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தினால் தான் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாமல் நிரந்தரமான அழகை பெற முடியும் என்ற தகவலின் அடிப்படையில் இந்த மூலிகையை பயன்படுத்தி அழகான பருக்கள் அற்ற முகத்தை பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.