நாளைய தினம் தை கிருத்திகை. முருகனை வேண்டி என்ன வேண்டுதல் வைத்தாலும், அது நிச்சயம் பலிக்கும். உயர் பதவிகள் கிடைக்க, வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல, செல்வந்தர்களாக மாற, அரசியல், சினிமா துறைகளில் இருப்பவர்கள் வெற்றிக்காண, திருமண தடை விலக, குழந்தை பாக்கியம் கிடைக்க.
பிள்ளைகள் நன்றாக படிக்க, இப்படி எவ்வளவு பெரிய வேண்டுதலை வேண்டும் என்றாலும் முருகனிடம் நாளைய தினம் வைக்கலாம். 6.2.2025 ஆம் தேதி வியாழக்கிழமை முழுவதும் தை கிருத்திகை திதி இருக்கிறது. இந்த நாளில் முருகன் கோவிலில் செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
உயர்ந்த பதவி கிடைக்க முருகன் வழிபாடு
இந்த உயர்ந்த வேலை எனக்கு கிடைக்க வேண்டும். இந்த உயர்ந்த பதவி எனக்கு கிடைக்க வேண்டும் இந்த வேலையில் சேர்ந்து விட்டால் என்னுடைய வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிடும் என்றால் முருகன் கோவிலுக்கு நீங்கள் செவ்வாழைப்பழம் கொண்டு போய் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்களும் இந்த செவ்வாழை பழங்களை நாளை முருகன் கோவிலுக்கு தானமாக கொடுக்கலாம்.
சில இடங்களில் மேலதிகாரிகள் மேனேஜர்கள் ரொம்ப தொல்லை பண்ணுவாங்க. அவர்களிடமிருந்து தப்பிக்கவும் இந்த பரிகாரத்தை செய்யலாம். செவ்வாழைப்பழங்களின் கணக்கு என்பது உங்களுடைய விருப்பம் தான். உங்களுடைய நிதி நிலைமையை பொறுத்து, எத்தனை வாழை பழங்கள் வாங்க முடியுமோ, அதை வாங்கி எடுத்துச் செல்லுங்கள். 11 வாழைப்பழம், 21 வாழைப்பழம், குறைந்தபட்சம் 6 வாழைப்பழங்கள் வாங்கிக் கொண்டு போனாலும் சரி. 108 வாழைப்பழம் வாங்கி கொடுத்தாலும் சரிதான்.
முருகன் பாதத்தில் அந்த வாழைப்பழங்களை வைத்து, அர்ச்சனை செய்துவிட்டு, மீண்டும் அந்த வாழைப்பழங்களை வாங்கி அந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உங்கள் கையால் தானம் செய்து விட வேண்டும். இந்த தானம் நிச்சயம் நீங்கள் வேண்டிய வரத்தை, வேண்டிய வேலையை, வேண்டிய பதவியை, வேண்டிய சம்பளத்தை, உங்கள் கையில் கொடுத்து விடும்.
நம்பிக்கையோடு செய்யுங்கள். வழிபாட்டை முடித்து விட்டோ அல்லது இந்த வழிபாடு செய்வதற்கு முன்பாகவோ எப்போது வேண்டுமென்றாலும் சரி, தை கிருத்திகை அன்று முருகப்பெருமான் கோவிலில் உங்களுடைய வேண்டுதலை சொல்லி, 108 முறை வலம் வர வேண்டும். 108 முறை கிருத்திகை அன்று முருகன் கோவிலை வலம் வந்து, நீங்கள் என்ன வரத்தை கேட்டாலும் முருகப்பெருமான் உங்களுக்கு கொடுத்து விடுவான்.
வாழைப்பழத்தையும் தானம் கொடுத்து, 108 சுற்றுகளை முருகன் கோவிலை சுற்றி வரும்போது, நீங்கள் எண்ணிய காரியங்கள் எல்லாம் ஈடேறும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இந்த எளிமையான வழிபாடு உங்களை இந்த வருடம் முழுதும் நல் வழிபடுத்தி எடுத்துச் செல்லும்.
இதையும் படிக்கலாமே: வேண்டிய வரத்தை அருளும் தை கிருத்திகை வழிபாடு
அவ்வளவு சக்தி வாய்ந்த நாள் இந்த தை கருத்திகை, முருகனுக்கு உரிய நட்சத்திரம். இந்த தை மாதம் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல வழி பிறக்க வேண்டும் என்றால், இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்யுங்கள். நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.