பணம்தான் நம்முடைய வாழ்க்கையை வாழ்வதற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட பணத்தை சம்பாதிப்பதற்காக பலரும் பல விதங்களில் பாடு பட்டு கொண்டு இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவு ஏற்படாமல் பணக்கஷ்டத்தில் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இதுவே தான் கடன் பிரச்சினைக்கும் காரணமாக திகழ்கிறது. இப்படிப்பட்ட பணக்கஷ்டத்தை தீர்ப்பதற்குரிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பணக்கஷ்டம் தீர்க்கும் பரிகாரம்
பணம் தொடர்பான எந்த வேண்டுதலாக இருந்தாலும் அந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றால் நாம் மகாலட்சுமியையும் பெருமாளையும் வழிபாடு செய்ய வேண்டும். அப்படிப்பட்ட பெருமாளுக்குரிய திதியாக ஏகாதசி திதி திகழ்கிறது. அதுவும் இன்று சனிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய வளர்பிறை ஏகாதசி திதி என்பதால் இன்றைய நாளில் இந்த பரிகாரத்தை நாம் செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய பணக்கஷ்டம் முற்றிலும் நீங்கி நம்மை தேடி பணவரவு உண்டாகும். பணவரவை அதிகரிப்பதற்கு நாம் செய்யக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும் என்றே கூறலாம்.
இந்த பரிகாரத்தை இன்று இரவு 12 மணிக்குள் செய்துவிட வேண்டும். இதற்கு நமக்கு நல்ல பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய விதைகள் வெளியே தெரியாத ஏலக்காய் வேண்டும். ஏலக்காய் பெருமாளுக்கும் மகாலட்சுமிக்கும் உரிய ஒரு வாசனை பொருள் ஆகும். மூன்று ஏலக்காயை எடுத்து உங்களுடைய வலது கையில் வைத்துக் கொள்ளுங்கள். நேராக பூஜை அறைக்கு சென்று வடக்கு பார்த்தவாறு நின்று கொண்டு பெருமாளையும் மகாலட்சுமி தாயாரையும் முழுமனதோடு வணங்க வேண்டும்.
“ஓம் நமோ நாராயணாய, ஓம் லட்சுமி நாராயண நமோ நமஹ” என்னும் மந்திரத்தை தங்களால் இயன்ற எண்ணிக்கையில் கூற வேண்டும். பிறகு உங்களுடைய வலது கையில் இருக்கக்கூடிய ஏலக்காயை மூன்று முறை வலது புறமாக சுற்ற வேண்டும். உங்கள் தலையை சுற்றக் கூடாது. பூஜை அறையை சுற்ற வேண்டும். அதேபோல் உங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அறைக்கும் சென்று வடக்கு பார்த்தவாறு நின்று கொண்டு வலது புறமாக மூன்று முறை கையை சுற்ற வேண்டும். வீட்டிற்கு வெளியே செய்யக்கூடாது. அதேபோல் குளியலறை, கழிவறை போன்ற இடத்திலும் இதை செய்யக்கூடாது.
மற்ற அனைத்து இடங்களிலும் இதை செய்துவிட்டு நேராக பூஜை அறைக்கு வந்து ஒரு மஞ்சள் நிற துணியில் இந்த மூன்று ஏலக்காயையும் வைத்து மூட்டையாக கட்டி பெருமாளின் பாதத்திற்கு கீழே வைத்து விடுங்கள். 21 நாட்கள் இந்த மூட்டை அப்படியே இருக்கட்டும். 22 ஆவது நாள் காலையில் தீபம் ஏற்றி எப்பொழுதும் போல் வழிபாடு செய்து முடித்துவிட்டு இந்த மூட்டையை எடுத்து வீட்டில் வளர்க்கக்கூடிய மருதாணி செடி அல்லது துளசி செடியின் அடியில் புதைத்து விட வேண்டும். ஒருவேளை உங்கள் வீட்டில் மருதாணி செடியோ, துளசி செடியோ இல்லாத பட்சத்தில் கோவிலில் இருக்கக்கூடிய அரச மரத்தடியில் இதை புதைத்து விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே:வம்சம் விருத்தியாக கோ பூஜை
வளர்பிறையில் வரக்கூடிய இந்த ஏகாதசி நாளன்று இந்த முறையில் நாம் பரிகாரம் செய்வதன் மூலம் மகாலட்சுமி மற்றும் பெருமாளின் அருளால் நம்முடைய பண கஷ்டங்கள் நீங்குவதற்குரிய வழிகள் கிடைக்கும். பணவரவை ஏற்படுத்தக் கூடிய முயற்சிகளை தொடர்ந்து செய்து பெருமானின் அருளால் பணவரவை பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.