ஒவ்வொருவருக்குமே ஏதாவது ஒரு நேரத்தில் அவர்களுடைய முகத்தில் முகப்பரு என்பது உருவாகும். அது ஒரு சிலருக்கு ஒன்று இரண்டு மட்டும் வந்து விட்டுப் போகும். இன்னும் சிலருக்கோ அதிக அளவில் வரும். அதே போல் அந்த முகப்பரு வந்து சென்ற பிறகு அது வந்ததற்குரிய அடையாளமாக அந்த இடத்தில் சற்று கருமையாக தோன்றும். இது நாளடைவில் முகம் முழுவதும் பரவி முகத்தின் அழகையே கெடுத்து விடும். அப்படிப்பட்ட பிரச்சனையை தீர்ப்பதற்கு அரிசி மட்டும் போதும். அரிசியை எப்படி பயன்படுத்தினால் முகத்தில் இருக்கக்கூடிய முகப்பருவும், முகப்பருவின் தழும்பும் நீங்கும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
பருக்களால் ஏற்பட்ட தழும்பு மறைய
பச்சரிசியாக இருந்தாலும் புழுங்கல் அரிசியாக இருந்தாலும் அரிசிக்கு அதிக அளவு சத்துக்கள் இருக்கிறது. அரிசியை நம்முடைய முகத்தில் நாம் பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய கருமை முற்றிலும் நீங்கும் என்று கூறி கேள்விப்பட்டு இருக்கிறோம். சூரிய ஒளி கதிர்களால் ஏற்படக்கூடிய கருமை மட்டும் அல்லாமல் கரும்புள்ளிகள், பருக்கள், பருக்களால் ஏற்படக்கூடிய வடுக்கள் என்று அனைத்தையுமே இந்த அரிசி நீக்கக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது.
இதற்கு அரை டம்ளர் அளவிற்கு பச்சரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருமுறை தண்ணீர் ஊற்றி அதை நன்றாக கழுவி ஊற்றிவிட்டு பிறகு 2 டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். இது குறைந்தது நான்கில் இருந்த 5 மணி நேரம் ஊறட்டும். அரிசி நன்றாக ஊறிய பிறகு இதை அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். நாம் ஊறவைத்திருந்த தண்ணீர் அனைத்தையும் ஊற்றி அரைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பொழுது இதை வடிகட்டியை பயன்படுத்தி ஒரு கிண்ணத்தில் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த கிண்ணத்தை ஒரு மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து பார்க்கும் பொழுது தண்ணீர் மட்டும் மேலே நிற்கும். அடியில் மாவு தங்கி இருக்கும். மேலே நிற்கக்கூடிய தண்ணீரை மட்டும் தனியாக இறுத்து விட்டு அடியில் இருக்கக்கூடிய மாவை தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவை தான் நாம் பயன்படுத்த போகிறோம்.
இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக முகத்தை ஒரு முறை சுத்தமாக கழுவி ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த மாவை எடுத்து எங்கெங்கெல்லாம் முகப்பருக்கள் இருக்கிறதோ? முகப்பருக்கள் ஏற்பட்ட தழும்புகள் இருக்கிறதோ? அங்கெல்லாம் வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் கண்களுக்கு கீழ் இருக்கக்கூடிய கருவளையத்திலும் இதை நாம் பயன்படுத்தலாம்.
இரவு அப்படியே படுத்து உறங்கி விட்டு மறுநாள் காலையில் எழுந்து முகத்தை கழுவி விடலாம். இரவில் இப்படி பயன்படுத்த விருப்பமில்லை என்பவர்கள் காலையில் எழுந்ததும் முகத்தில் இந்த மாவை தடவி அரை மணி நேரம் நன்றாக காயவிட்டு பிறகு எப்பொழுதும் போல் கழுவிக் கொள்ளலாம். இந்த மாவை ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து நாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே:பொடுகற்ற ஆரோக்கியமான கூந்தலை பெற
இந்த முறையில் தொடர்ச்சியாக ஒரு வாரம் இந்த மாவை நாம் பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய பருக்களும் மறைய ஆரம்பிக்கும், பருக்களால் ஏற்பட்ட தழும்புகளும் மறைய ஆரம்பிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.