நம்முடைய தலையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றாக திகழ்வதுதான் பொடுகு பிரச்சனை. இந்த பொடுகு பிரச்சனை தீர்வதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மறுபடியும் இந்த பொடுகு என்பது உண்டாகும். அதனால் பொடுகு எதனால் ஏற்படுகிறது என்பதை உணர்ந்து அதை வேருடன் நீக்கினால் தான் மறுபடியும் பொடுகு பிரச்சனை வராமல் தவிர்க்கப்படும். அந்த வழிமுறையை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
பொடுகற்ற கூந்தலை பெற
பொடுகை இரண்டு வகைகளில் நாம் பிரிக்கலாம். தலையில் இருக்கக்கூடிய சருமம் வறண்டு போவதால் ஏற்படக்கூடிய பொடுகு ஒரு புறம் இருந்தாலும் தலையில் அதிக அளவு பிசுபிசுப்பு தன்மை ஏற்படுவதால் உண்டாக கூடிய பொடுகு மற்றொரு வகையாக கருதப்படுகிறது. இவை இரண்டிற்கும் வேறு விதங்களில் தான் நாம் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பலரும் உணர்ந்து கொள்ளாமல் பொதுவான ஒரு வழிமுறையை பின்பற்றுகிறார்கள். அதனால் தான் பொடுகு பிரச்சனை தீராமல் தொடர்ந்து கொண்டு வருகிறது.
வறண்ட பொடுகு ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாக திகழ்வது தண்ணீர் அருந்தாமல் இருப்பதும் அதனால் உடல் உஷ்ணம் ஏற்படுவதும் தான். வேர்வை வெளியே வராமல் தலையில் இருக்கக்கூடிய சருமம் காய்ந்து போய் இருக்கும் பட்சத்தில் இந்த பொடுகு பிரச்சனை என்பது ஏற்படும். இதற்கு நாம் அதிக அளவில் நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் வியர்வை அதிகமாக நம் உடம்பிலிருந்து வெளியே வரும்படி ஏதாவது ஒரு செயலை நாம் செய்ய வேண்டும்.
இதோடு மட்டும் அல்லாமல் தினமும் காலையில் 10 லிருந்து 15 நிமிடம் வரை சூரிய வெப்பத்தில் நாம் இருக்க வேண்டும். அதேபோல் வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தையும் வைத்துக் கொள்ள வேண்டும். இதோடு சேர்த்து தேங்காய் பால் ஒரு கப்பு எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக நாட்டு மருந்து கடைகளில் வால்மிளகு அல்லது வெள்ளை மிளகு என்று கேட்டால் தருவார்கள். அதை ஒரு ஸ்பூன் எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். இதனுடன் ஒரு சின்ன வெங்காயத்தை நன்றாக இடித்து வெள்ளை மிளகுடன் சேர்த்து ஒரு மெல்லிய துணியில் மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த மூட்டையை தேங்காய் பாலில் நனைத்து நம்முடைய தலை முடியின் வேர்கால்களில் தேய்க்க வேண்டும். இப்படி தேய்த்து 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் தலை முடியை அலச வேண்டும்.
முக்கியமான குறிப்பு என்னவென்றால் இதை நாம் உபயோகப்படுத்துவதற்கு முன்பாகவே தலைக்கு ஷாம்பு போட்டு குளித்து இருக்க வேண்டும் மேலும் இந்த பேக்கை போட்ட பிறகு ஷாம்பு போடக்கூடாது. ஒருவேளை இந்த வறண்ட பொடுகு இல்லாமல் தலை எப்பொழுதுமே ஒருவித பிசுபிசுப்பு தன்மையுடனே இருக்கக்கூடியவர்கள் மேற் சொன்ன அந்த வாழ்வியல் நடைமுறைகளை பின்பற்றுவதோடு கொத்தமல்லி மற்றும் சின்ன வெங்காயத்தை அரைத்து அதன் சாரை தலையில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
இப்படி நம்முடைய பொடுகின் தன்மைக்கு ஏற்றவாறு நாம் சிகிச்சை மேற்கொண்டோம் என்றால் கண்டிப்பான முறையில் பொடுகு பிரச்சினையிலிருந்து நம்மால் வெளியில் வரமுடியும். இதே போல் எந்த பொடுகு பிரச்சினையாக இருந்தாலும் வாரத்திற்கு ஒருமுறை செம்பருத்தி பூ மற்றும் வெந்தயத்தை நன்றாக அரைத்து தலையில் தடவி 15 நிமிடம் கழித்து குளித்த நீரினால் கழுவுவது அலசுவதன் மூலம் பொடுகு பிரச்சினை தீர்வதோடு முடியும் நன்றாக அடர்த்தியாக வளரும்.
இதையும் படிக்கலாமே:கரும்புள்ளி மறைய பாதாம் டிப்ஸ்
பொதுவாக கூறக்கூடிய விஷயங்களை நாம் கையாண்டும் நமக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை என்னும் பட்சத்தில் நமக்கு என்ன பிரச்சனை இருக்கிறது எதனால் அது வருகிறது என்பதை உணர்ந்து செயல்பட்டால் தான் அந்த பிரச்சினைக்குரிய தீர்வு கிடைக்கும் இந்த தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.