வாழ்க்கையில் அவ்வப்போது சிக்கல் வந்து போகலாம். தவறு கிடையாது. ஆனால் சில பேருடைய வாழ்க்கையே சிக்கலில் சிக்கி இருக்கும். எந்த ஒரு முயற்சியை மேற்கொண்டாலும் அதில் சிக்கல் சிக்கல் சிக்கல். சிக்கலை அவிழ்ப்பதற்குள்ளேயே நமக்கான நேரம் முடிந்துவிடும். யாராவது ஒருவர் சிக்கலை முடிந்து விடுவதற்காகவே வருவார்கள். பிறகு வாழ்க்கையில் எந்த விஷயத்திலும் சாதிக்க முடியாத சூழ்நிலை உண்டாகும்.
உங்கள் வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்கள் எல்லாம் அவிழ வேண்டுமா. வாழ்க்கையில் நிம்மதி பிறக்க வேண்டுமா. கஷ்டங்கள் எல்லாம் தேய்பிறை நிலவு போல தேய்ந்து போக வேண்டுமா? நாளை செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரும் சஷ்டி திதியில், முருகன் கோவிலில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லுங்கள் போதும். சிக்கல் எல்லாம் நீங்கி சீக்கிரம் வாழ்க்கையில் முன்னேறி விடுவீர்கள்.
தேய்பிறை சஷ்டி முருகன் வழிபாடு
சில பேருக்கு குடும்ப வாழ்க்கையில் சிக்கல் இருக்கும். திருமணம் நடக்காமல் இருக்கும். திருமணமாகி குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருக்கும். சில பேருக்கு வியாபாரத்தில் சிக்கல், கடனை வாங்கிவிட்டு, திருப்பி அடிக்க முடியாத சூழ்நிலை இருக்கும். தினமும் போய் வியாபாரத்தை கவனிக்க முடியாத சூழ்நிலை கூட சில பேருக்கு இருக்கும். தினமும் சில பேரால் வேலைக்கு கூட செல்ல முடியாது. அவர்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
வேலையில் சிக்கல், பக்கத்து சீட்டில் அமர்ந்து வேலை செய்பவனால் சிக்கல், மனைவியால் சிக்கல், கணவனால் சிக்கல், பிள்ளைகளால் சிக்கல், எந்த சிக்கல் சரியாக வேண்டும் என்றாலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பொதுவாகவே வளர்பிறை வழிபாட்டை வீட்டில் செய்வது சிறப்பு என்று சொல்லுவார்கள்.
தேய்பிறை வழிபாடு என்றால் கோவிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு என்று சொல்லுவார்கள். இது தேய்பிறை சஷ்டி என்பதால், வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு செல்லுங்கள். நாளை காலை 6 மணிக்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்யலாம். முடியாதவர்கள் மாலை 6 மணிக்கு பின்பு இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.
முருகனுக்கு ஆறு விலக்கு ஏற்றி வைக்க வேண்டும். நெய் விளக்கு, அல்லது நல்லெண்ணெய் விளக்கு, உங்கள் சௌகரியம் போல ஏற்றி வைத்துவிட்டு, முருகனுக்கு செவ்வரளி பூக்களை வாங்கி கொடுத்து விட்டு, முருகன் கோவிலை 6 முறை வலம் வர வேண்டும். இப்படி முருகனை வலம் வரும்போது “ஓம் சிக்கல் மேவிய சிங்கார வேலவா போற்றி போற்றி” என்ற மந்திரத்தை சொல்லுங்கள். முருகனை வளம் வரும்போது மந்திரம் சொல்லுவதில் எண்ணிக்கையின் மீது கவனம் செலுத்த முடியாது. ஆகவே உங்களுடைய மனதை முருகன் மீது வைத்து விட்டு, இந்த மந்திரத்தை கணக்கில்லாமல் சொல்லுங்கள்.
6 சுற்றை மட்டும் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். அதுவும் உங்களுக்கு வழிபாட்டில் தடையாக இருக்கிறது என்றால், கையில் ஆறு புஷ்பங்களை வைத்துக் கொள்ளுங்கள். ஒருமுறை முருகனை வலம் வந்தவுடன், அந்த முருகனுக்கு முன்பு இருக்கும் வேலில் ஒரு பூவை போட்டு விடவும். ஆறு முறை சுற்றி வரும்போது, ஆறு பூக்களே போட்டு விட்டால் கணக்கு தெரிந்துவிடும். மனது முழுக்க உங்களுக்கு முருகன் இருக்க வேண்டும். முருகனது மந்திரம் இருக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு
வாழ்க்கையில் இருக்கும் ஏதோ ஒரு சிக்கலை, மனதில் வைத்து அந்த சிக்கல் சரியாக இந்த வழிபாட்டை நாளை தினம் மேற்கொள்ளுங்கள். நிச்சயம் முருகப்பெருமான் உங்களுக்கு நல்லதொரு வழியை காண்பி கொடுப்பார் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.