- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் பிரச்சினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு

கடன் பிரச்சினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு

- Advertisement -

பலரது வாழ்க்கையையும் மிகவும் மோசமான ஒரு நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய ஒன்றுதான் கடன். கடன் வாங்கினால் பிரச்சனை என்பதைப் போலவே கடன் கொடுப்பதும் ஒருவகையான பிரச்சனையாகவே திகழ்கிறது. யாராக இருந்தாலும் வாங்கிய கடனை திருப்பித் தர வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பான முறையில் வேண்டும். அந்த எண்ணத்தோடு செய்யக்கூடிய முயற்சிகளும் வெற்றியைத் தரும் என்றே கூறலாம். அதேசமயம் வாங்கிய கடனை திருப்பித் தரக் கூடாது என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு அதனால் பலவிதமான பிரச்சனைகள் உண்டாகும். தங்களால் இயன்ற அளவிற்கு கடனை திருப்பித் தருவதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டும் தங்களால் கடனை அடைக்க முடியவில்லை என்று வருத்தப்படுபவர்கள் விநாயகப் பெருமானுக்கு எந்த பொருளை வாங்கி கொடுத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

விநாயகர் வழிபாடு

கண்கண்ட தெய்வமாகவும் மிகவும் எளிமையான தெய்வமாகவும் திகழக்கூடியவர் விநாயகப் பெருமான் என்று நம் அனைவருக்கும் தெரியும். திரும்பிய திசையெல்லாம் வீற்றிருக்க கூடியவராகவும் இவர் திகழ்கிறார். இவரை முழுமனதோடு நம்பி எந்த ஒரு பொருளில் பிடித்து வைத்தாலும் அதில் எழுந்தருளி நமக்கு அருளாசி புரியக்கூடிய அற்புதமான தெய்வமாகவும் இவர் திகழ்கிறார். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானுக்கு எந்த பொருளை வாங்கித் தந்தால் கடன் பிரச்சினை தீரும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை எந்த கிழமையில் செய்ய முடியுமோ அந்த கிழமையில் செய்யலாம். குறிப்பாக திங்கள், செவ்வாய், புதன், ஞாயிறு இந்த கிழமையில் செய்வது மிகவும் சிறப்பு. அதேபோல் சதுர்த்தி திதியில் செய்வதும் நல்ல பலனைத் தரும். அதுவும் கடன் தொடர்பான பிரச்சனை என்பதால் செவ்வாய்க்கிழமை மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாளில் செய்தோம் என்றால் இன்னும் நல்ல பலன் கிடைக்கும். தினமுமே தொடர்ச்சியாக நாம் இந்த பொருளை வாங்கி கொடுத்து விநாயகப் பெருமானை வழிபாடு செய்யலாம்.

அதிக அளவில் பொருட்செலவு ஏற்படுத்தாத மிகவும் எளிமையான பொருளாக தான் இந்த பொருள் திகழ்கிறது. அதுதான் மஞ்சள். விநாயகர் பெருமானுக்கு மஞ்சள் தூளை வாங்கி கொடுத்து நாம் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக வன்னி மரத்தடியில் இருக்கக்கூடிய விநாயகர் பெருமான் எங்கு இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டு மஞ்சள் தூளை வாங்கிக்கொண்டு அந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும். இந்த வழிபாட்டை செய்யும் பொழுது ராகு காலம் எமகண்ட நேரத்தை தவிர்த்து விட்டு செய்வது நல்ல பலனை தரும்.

- Advertisement -

இப்பொழுது வன்னி மரத்தடியில் இருக்கக்கூடிய விநாயகப் பெருமானுக்கு நாம் எடுத்துச் சென்ற மஞ்சளை அவர் மேல் தூவ வேண்டும். பிறகு அருகம்புல்லை அவருடைய பாதத்தில் வைத்து விட்டு அவரிடம் முழு மனதோடு கடன் பிரச்சினை தீர வேண்டும் என்ற வேண்டுதலை வைத்துக்கொண்டு அவரை 11 முறை வலம் வந்து 11 தோப்புக்கரணம் போட வேண்டும். இப்படி தினமும் அல்லது வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக நாம் விநாயகர் பெருமானுக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வதன் மூலம் விரைவில் நம்முடைய கடன் பிரச்சனை தீரும்.

இதையும் படிக்கலாமே:வாழ்க்கையில் செய்யக்கூடாத தவறுகள்
மிகவும் எளிமையான இந்த ஒரு பொருளை விநாயகப் பெருமானுக்கு முழுமனதோடு வாங்கிப் தருவதன் மூலம் விநாயகப் பெருமானின் அருளால் விரைவில் நம்முடைய கடன் பிரச்சனை தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்