பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி புதன்கிழமை மகா சிவராத்திரி வரவிருக்கிறது. இந்த நாளில் ஈசனை நினைத்து யார் வழிபாடு செய்தாலும், அவர்களுக்கு நிச்சயம் அந்த சிவனின் பரிபூரண அருள் கிடைக்கும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனாலும் சில கிரக சூழ்நிலைகளின் மாற்றம் காரணமாக, ஒரு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என்பது ஜோதிடர்களின் கணிப்பு.
அந்த வகையில் இந்த சிவராத்திரியின் சிறப்பு என்ன. 60 வருடங்களில் இல்லாத ஒரு கிரக சேர்க்கை இந்த சிவராத்திரியில் இருக்கிறது. இந்த கிரக சூழ்நிலைகளின் மூலம், கிரகச் சேர்க்கையின் மூலம் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதை பற்றித்தான் இன்றைய ஆன்மிகம் ஜோதிடம் சார்ந்த பதிவு மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
60 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் அவிட்ட நட்சத்திரத்தில், மகா சிவராத்திரி வரும் என்பது ஜோதிடர்களின் கூற்றாக உள்ளது. இதன் அடிப்படையில் தான் சில கிரக சேர்க்கைகள், சில ராசிகளுக்கு அடுத்த ஒரு வருடம் முழுவதும் அபரிவிதமான நல்ல பலன்களை கொடுக்கப் போகிறது. அந்த பட்டியலில் எந்தெந்த ராசிக்காரர்கள் இருக்கிறார்கள் என்பதை முதலில் பார்த்து விடுவோம்.
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், கும்பம் இந்த ஐந்து ராசிக்காரர்கள் கட்டாயம் உங்கள் கஷ்டத்தில் இருந்து இந்த வருடத்தில் விடுபடுவீர்கள் நீங்கள் எதிர்பாராத நல்லது உங்கள் வாழ்க்கையில் நடக்கும் அந்த நல்லது என்னென்ன விரிவாக எப்போது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் உண்டான பலனை தெரிந்து கொள்வோமா.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை இருந்து வந்த மனக்குழப்பங்கள் நீங்கும். உங்களை விட்டுப் போன மன நிம்மதி மீண்டும் உங்களை தேடி வந்துவிடும். எதிர்பாராமல் நடந்த இழப்புகள், குடும்பத்தில் எதிர்பாராத நடந்த குழப்பங்கள் எல்லாம் சரியாகிவிடும். பிரிந்து போன கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். நீண்ட நாள் தீராத உடல் உபாதைகள் தீரும். வாழ்க்கையில் நல்லது நடக்கும். பிரமோஷனுக்காக காத்திருந்து வீணாகப் போன நாட்கள் எல்லாம் சரியாகிவிடும். வேலையில் நல்ல உயர்வு கிடைக்கும். ஈசனின் அருளால் கஷ்டங்கள் எல்லாம் உங்களை விட்டு கடந்து போக போகிறது. சிவராத்திரி அன்று சிவனடியார்களுக்கு உங்களால் முடிந்த பொருள் உதவியை செய்யலாம். அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி தானம் கொடுக்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இந்த சிவராத்திரிக்கு பிறகு பெரிய பணக்காரர் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த கோர்ட்டு கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். அடுத்தவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து இருந்தால், அந்த பணம் திரும்பி உங்கள் கைக்கு வந்து சேரும். அடமானத்தில் இருந்த நகை சொத்துக்களை மீட்பதற்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். நொடிந்து போன நீங்கள் செல்வந்தர்களாக மாறுவீர்கள். குழந்தைகளுக்கு திருமணம் நடப்பதற்கு உண்டான முயற்சிகள் வெற்றி தரும். அத்தனை சுபகாரியங்களும் உங்கள் வீட்டில் நடக்க துவங்கும். சிவன் கோவிலுக்கு சிவராத்திரி அன்று உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள். அபிஷேக பொருட்களை வாங்கி தருவது, சிவன் கோவிலை சுத்தம் செய்வது போன்ற பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இதுநாள்வரை இருந்து வந்த பொருளாதார தட்டுப்பாடு விலகும். இதுநாள் வரை அவமானப்பட்டு தலை குனிந்து இருந்த உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். வேலையில்லாமல் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு எல்லாம் கை நிறைய சம்பளத்தோடு நல்ல வேலை கிடைக்கும். இக்கட்டான சூழ்நிலையில் இருந்து கொஞ்சம் தளர்வு ஏற்படும். நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத நல்லது உங்களுடைய வாழ்வில் நடக்கும். அதற்கு அந்த ஈசனே பொறுப்பு. சிவராத்திரியில் சிவபெருமானுக்கு முடிந்த அபிஷேக பொருட்களை வாங்கி கொடுங்கள். இரண்டு சிவனடியார்களுக்கு வயிறார சாப்பாடு வாங்கி கொடுங்கள் நல்லதே நடக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு பனகற்பற்றாக்குறையானது நீங்கும். எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கையில் பணம் தங்கவில்லை என்ற கவலை உங்களை விட்டு விலகும். சேமிப்பு உயரும். அதற்கு உண்டான பாக்கியத்தை பார்வதி தேவையும் சிவபெருமானும் ஒன்றாக சேர்ந்து உங்களுக்கு செய்து கொடுப்பார்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகளும் விலகும். மன நிம்மதி அடைவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பக்குவத்தை நீங்கள் இன்னும் கொஞ்சம் அதிகரித்துக் கொள்ள வேண்டும். அப்போது உங்களுக்கு மேலும் மேலும் நடக்கும். எந்த அளவுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்கிறீர்களோ அந்த அளவுக்கு ஈசனும் பார்வதியும் உங்களுக்கு உண்டான பணத்தை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள் நல்லதே நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சிவராத்திரி நேர்மறை எண்ணங்களை கொடுக்கப் போகிறது. ஆன்மீகத்தில் ஒரு நாட்டத்தை கொடுக்கும். வாழ்க்கையை வெறுத்துப் போய் விரக்தியாக தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என்று நினைத்தவர்களுக்கு கூட, சிவராத்திரியிலிருந்து நல்ல காலம் பிறக்கப் போகிறது. எவ்வளவோ கஷ்டத்தை அனுபவித்து விட்டோம். இன்னும் மூன்று நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். சிவராத்திரி அன்று சிவன் கோவிலுக்கு சென்று ஈசனை வழிபட்ட பின்பு உங்கள் தலையெழுத்தை மாறிவிடும். குடும்ப ஒற்றுமை பிறக்கும். நீண்ட நாள் துன்பங்கள் துயரம் உங்களுக்கு எல்லாம் ஒரு விமோசனம் கிடைக்கும். கடன் சுமை குறையும். உடல் உபாதைகள் எல்லாம் நீங்கிவிடும் நல்லதே நடக்கும். ஈசனின் மீது பாரத்தை போட்டு சிவராத்திரி அன்று சிவசிவ நாமத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள். உங்களுக்குள் சிவபெருமானே வந்து ஐக்கியமாகி விடுவார்.
இதையும் படிக்கலாமே: சிவராத்திரி மூன்றாம் கால வழிபாடு
மேல் சொன்ன ஜோதிடம் சார்ந்த தகவல் அனைத்துமே பொதுப்படையானவை. ஜோதிடர்களின் மூலமாக கிரக சூழ்நிலையை வைத்து ராசியின் அடிப்படையில் சொல்லப்பட்ட தகவல்கள் தான். இதையும் தாண்டி சில பேருக்கு பிறந்த தேதி, நேரம், ஜாதக கட்டமைப்பை வைத்து ஒரு சில மாற்றங்கள் வாழ்வில் ஏற்படும். அதுவும் அந்த ஈசனின் செயல்தான். எல்லோருக்கும் நன்மையை நடக்க வேண்டும் என்று சிவபெருமானை பிரார்த்தனை செய்து இந்த ஜோதிடம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.