- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசிவராத்திரி மூன்றாம் கால வழிபாடு

சிவராத்திரி மூன்றாம் கால வழிபாடு

- Advertisement -

பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி மகா சிவராத்திரி ஆனது வரவிருக்கிறது. சிவ பக்தர்களுக்கு இந்த இரவு ஒரு வரப் பிரசாதம். இந்த வருட சிவராத்திரி அன்று சிவபெருமானை, இந்த நேரத்தில் பின் சொல்லக்கூடிய முறைப்படி வழிபாடு செய்து பாருங்கள். அந்த சிவனுடைய சக்தி அப்படியே உங்களுக்குள் வந்து ஐக்கியமாகிவிடும்.

இந்த வருடம் முழுவதும் வாழ்க்கையில் வெற்றி பெற அந்த சிவசக்தி உங்களை தூண்டி விட்டுக் கொண்டே இருக்கும். சிவபெருமானுக்கு சக்தி கொடுப்பதே, அந்த சக்தி தேவி தான்‌. அந்த சக்தி தேவையே வந்து சிவபெருமானை வழிபாடு செய்யக்கூடிய மூன்றாம் கால பூஜையைப் பற்றிய சிறப்பைத்தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

சிவராத்திரி மூன்றாம் கால பூஜை சிறப்பு

சிவராத்திரி வழிபாடு என்றாலே நான்கு கால பூஜை தான் மிக மிக சிறப்பு வாய்ந்தது. பழமை வாய்ந்த எல்லா சிவன் கோவில்களிலும் இந்த நான்கு கால பூஜையானது நடைபெறும். அதில் மூன்றாம் கால பூஜையில் கட்டாயம் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இதை தான் லிங்கோத்பவர் பூஜை என்று சொல்வார்கள். அடிமுடி காணாத சிவபெருமான் காட்சி தந்த ஸ்வரூபம் தான் இந்த லிங்கோத்பவர் சொரூபம்.

இந்த மூன்றாம் கால பூஜையில் தான் சக்தி தேவி, சிவபெருமானை பூஜிக்க வருவதாக ஐதீகம். இந்த பூஜை சிவராத்திரி நள்ளிரவு 11:45 மணிக்கு துவங்கி 12:30 மணி அளவில் முடியும். சில கோவில்களில் 10 நிமிடம், 15 நிமிடம் நேரம் முன் பின்னாக இருக்கும். உங்க கோவிலில் இந்த பூஜை எப்போது நடக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பூஜையில் கலந்து கொண்டு ஈசனை வழிபாடு செய்து என்ன வரங்களை கேட்டாலும் உடனே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இந்த இடத்தில் நாம் எப்படி சிவபெருமானுடைய சக்தியை நமக்காக ரீசார்ஜ் செய்து கொள்வது.

- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் ருத்ராட்சம் அணிந்து கொண்டிருக்க கூடிய சிவனடியார்கள் ஏராளம். சாதாரண மனிதன் ருத்ராட்சம் அணிந்திருந்தாலும், அவன் சிவனடியார்தான். சிவனடியாருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை, ருத்ராட்சம் அணிந்து கொண்டிருப்பவருக்கும் கட்டாயம் கொடுக்க வேண்டும்.

நீங்கள் ருத்ராட்சம் அணிந்திருந்தால் அந்த ருத்ராட்சத்தை கழட்டி சரியாக இந்த மூன்றாம் ஜாமம் பூஜையில் சிவபெருமான் பாதத்தில் வைத்தோ அல்லது கோவிலில் அபிஷேகம் நடக்கும்போது, உங்கள் கைகளில் அந்த ருத்ராட்சத்தை வைத்துக்கொண்டு “ஓம் நமசிவாய” மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

- Advertisement -

சிவபெருமானுடைய சக்தி அனைத்தும் அந்த ருத்ராட்சத்தில் வந்து சேர்ந்துவிடும். பிறகு அந்த ருத்ராட்சத்தை நீங்கள் கழுத்தில் அணிந்து கொண்டால், உங்கள் வாழ்க்கையில் அந்த சிவபெருமான் இந்த வருடம் முழுவதும் துணையாக வருவார். அந்த ருத்ராட்சம் மூலமாக சிவபெருமான் உங்களுடனே ஐக்கியமாகி விடுவார் என்பதும் நம்பிக்கை.

நீங்கள் புதுசாக ருத்ராட்சம் அணிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் அந்த விருப்பத்தை இந்த நாளில் நிறைவேற்றிக் கொள்ளுங்கள். குறிப்பாக இந்த மூன்றாம் ஜாமம் பூஜையை முடித்துவிட்டு அந்த நேரத்திலேயே சிவன் கோவிலிலேயே அமர்ந்து ருத்ராட்சத்தை ஒரு சிவனடியார் கையால் உங்கள் கழுத்தில் கட்டிக் கொள்வது ரொம்பவும் நல்லது.

ருத்ராட்சம் மட்டுமல்ல, நீங்கள் ஆன்மீகம் சார்ந்த எந்த அணிகலன்கள் அணிந்திருந்தாலும், இப்படி இந்த நாளில், மூன்றாம் ஜாம பூஜையில் அந்த பொருளை, சிவபெருமான் பாதத்தில் வைத்து அல்லது உங்கள் கையில் வைத்து, அல்லது கோவிலில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து சக்தி ஏற்றி மீண்டும் நீங்கள் அணிந்து கொள்ளலாம். சங்கு மாலை, ஜெபமாலை, படிகாரம் மாலை, கருங்காலி மாலை, சிலபேர் சாலிகிராமம் கூட வீட்டில் வைத்து வழிபடுவார்கள்.

இதையும் படிக்கலாமே: 22-02-2025 அதிசக்தி வாய்ந்த பிரபஞ்ச நாளில் செய்ய வேண்டிய பரிகாரம்

அதையெல்லாம் கூட நீங்கள் சக்தி ஊட்ட வேண்டும் என்றால் இந்த லிங்கோத்பவர் காலத்தை, மூன்றாம் கால பூஜையை பயன்படுத்திக் கொள்ளலாம். நிச்சயம் நல்லதே நடக்கும். சிவபெருமானின் சக்தியை உங்களுக்குள்ளே பெற்றுக்கொள்ள இந்த பரிகாரமும், இந்த பதிவும் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்