நாளை வைகாசி மாதத்தில் வந்திருக்கும் தேய்பிறை ஏகாதசி திதி. இந்த நாளில் பெருமாளை நினைத்து மகாலட்சுமியை நினைத்து, பின் சொல்லக் கூடிய பரிகாரத்தை செய்பவர்கள் வாழ்வில் இருக்கும் வருமான தடையானது விலகும். எவ்வளவு உழைத்தாலும் வருமானம் இல்லை, வந்த வருமானம் வீண் விரயம் ஆகிறது, வேலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
வியாபாரத்திலும் எந்த முன்னேற்றமும் இல்லை. என்ன வேலை செய்தாலும், என்ன தொழில் செய்தாலும் அதில் நஷ்டம் தான் வருகிறது, பணம் காசு பார்ப்பதற்கான வாய்ப்பே எங்களுக்கு இல்லை என்பவர்கள் கூட ஒரு சில ஏகாதசிகள் இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் வாழ்வில் நீங்கள் மென்மேலும் உயரக்கூடிய வாய்ப்புகளை கண்முன்னே பார்க்கலாம்.
ஏகாதசி பரிகாரம்
உங்கள் வீட்டிலேயே இந்த பரிகாரத்தை செய்யலாம். சின்னதாக ஒரு கரித்துண்டு எடுத்துக் கொள்ளுங்கள். கடைகளிலேயே இப்போது கரி துண்டு விற்கிறது. அதை வாங்கிக் கொள்ளலாம் இல்லையென்றால் இஸ்த்திரி செய்யும் கடைகளில் இந்த கரி துண்டு கிடைக்கும். ஒரு கரித்துண்டை வாங்கிக் கொள்ளுங்கள்.
இதோடு போட்டு எரிக்க பச்சை கற்பூரமும், வெண்கடுகும் உங்களுக்கு தேவை. ஒரு சின்ன வெள்ளிக் கிண்ணம் அல்லது மண்பாத்திரம் எடுத்துக் கொள்ளுங்கள். பெரிய மண் அகல் விளக்கு இருந்தால் கூட அதில் இந்த பரிகாரத்தை செய்யலாம். வீட்டில் வரவேற்பறையில் அமர்ந்து கரி துண்டை வைத்து அதன் மேலே பச்சை கற்பூரத்தை வைத்து ஏற்றி விடுங்கள்.
பச்சை கற்பூரத்தின் நெருப்பு பிடித்து, அந்த கரி துண்டிலும் நெருப்பு பிடிக்க துவங்கும். அந்த சமயத்தில் 2 டீஸ்பூன் வெண்கடுகு அதில் போட்டு விட வேண்டும். இவ்வளவுதான் பரிகாரம். இந்த எல்லா பொருட்களும் எரிந்து சாம்பலான பிறகு இதை கொண்டு போய் கால் படாத இடத்தில் வெளியில் கொட்டி விடலாம். ஏகாதசி அன்று வீட்டில் இருந்தபடியே இந்த மூன்று பொருளையும் நெருப்பில் போட்டால் வருமானத்தில் இருக்கும் தடைகள் பொசுங்கிவிடும்.
வருமானத் தடை விலகும். உங்கள் வீட்டில் இருக்கும் தரித்திரம் நீங்கும். செல்வ செழிப்பு உயர்வதற்கு உண்டான அத்தனை வழிகாட்டுதலும் உங்களைத் தேடி வரும். இதுதான் இந்த பரிகாரத்தில் மறைந்திருக்கும் உண்மை. வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி 2 திதிகளில் தவறாமல் இந்த பரிகாரத்தை வீட்டில் செய்து வாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.
இதையும் படிக்கலாமே: சிவராத்திரியின் நான்கு கால பூஜை பலன்கள்
மூன்று மாதம் இந்த பரிகாரத்தை செய்யும் போதே பெரிய அளவில் மாற்றங்களை பார்க்கலாம். இதுவரை சேராத பணம் உங்கள் கையை வந்து சேரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.