- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவெற்றி தரும் சிவ மந்திரம்

வெற்றி தரும் சிவ மந்திரம்

- Advertisement -

வாழ்வில் எல்லா விஷயங்களிலும் சீக்கிரம் ஜெயிக்க வேண்டும் என்றால் கடினமான காரியங்களை கூட சுலபமாக சாதிக்கும் திறமை நமக்கு தேவைப்படுகிறது. உதாரணத்திற்கு கடன் சுமையிலிருந்தே நாம் வெளிவர வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். கஷ்டமான வேலைகளை சுலபமாக செய்து, நிறைய பணத்தை சம்பாதித்தால் கடன் சுமை தானாக நம்மை விட்டு விலகும். வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கு.

கஷ்டமான வேலையை, யாராலும் செய்து முடிக்க முடியாத வேலையை செய்து பணம் சம்பாதித்தால் வீடு கட்டி விடலாம். சொத்து சுகம் வாங்கி விடலாம். இப்படி கஷ்டமான வேலைகளை சுலபமாக செய்யக்கூடிய ஆற்றல் நம்மிடம் அதிகரிக்கும்போது எல்லா தேவைகளையும் நம்மால் பூர்த்தி செய்து கொள்ள முடியும். அப்படி கஷ்டமான வேலையை சுலபமாக முடிக்க வேண்டும் என்றால் அதற்கான சக்தியை சிவபெருமானிடம் இருந்து நாம் எப்படி பெறுவது.

- Advertisement -

இந்த ஒரு வரி மந்திரத்தை படிப்பதன் மூலம், அந்த சக்தி உங்களுக்கு கிடைத்துவிடும். சிவபெருமானுக்கு சக்தி கிடைப்பதே அந்த சக்தி தேவியிடமிருந்துதான் என்று சொல்வார்கள். அந்த சக்தி தேவிக்கு உரிய செவ்வாய்க்கிழமையில் வந்திருக்கும் பிரதோஷ நேரத்தில் நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் என்ன. அதை எப்படி உச்சரிப்பது ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

வரக்கூடிய பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி புதன்கிழமை சிவராத்திரி. மகா சிவராத்திரிக்கு முந்தைய நாள், செவ்வாய்க்கிழமை 25-02-25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து சிவபெருமானுக்கு உரிய பிரதோஷ நாளும் வந்திருக்கிறது. இந்த நாளில் சிவபெருமானை வீட்டில் இருந்தபடியே வழிபாடு செய்யலாம். கோவிலுக்கு சென்றும் வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

இது இரண்டுமே முடியாது நாங்கள் வேலையில் இருப்போம் என்றாலும் பிரதோஷ நேரமான 4:30 மணியிலிருந்து 6:00 மணி குள் இருக்கக்கூடிய நேரத்தில் ஐந்து நிமிடம் ஒதுக்கி, இந்த மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள் போதும். உங்களுக்கான சக்தியையும் அந்த சிவபெருமான் நிச்சயம் கொடுப்பான். நாளைய தினம் வரவிருக்கும் பிரதோஷ நாளில், பிரதோஷ நேரத்தில் உச்சரிக்க வேண்டிய மந்திரம் இதோ உங்களுக்காக.

வெற்றி தரும் சிவ மந்திரம்

ஓம் கங் சிவ் வுங் சிவய !

- Advertisement -

செய்வதற்கு அரிதான பெரிய பெரிய காரியங்களை எல்லாம் சுலபமாக வெற்றி காண சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான். இதை எத்தனை முறை சொல்லலாம். கணக்கு கிடையாது. 108 முறை சொல்லலாம் ,அதற்கு மேலேயும் சொல்லலாம். முடிந்தால் 1008 முறை கூட இந்த மந்திரத்தை நீங்கள் சொல்லிக் கொண்டே இருக்கலாம். கடினமான கஷ்டம் வந்துவிட்டது நாளைக்கு இந்த வேலையை முடித்தே ஆகவேண்டும். ஆனால் வேலையை செய்யவே முடியவில்லை.

இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்று தோணும் சமயத்தில் ஒரு ஐந்து நிமிடம் நேரத்தை ஒதுக்கி, ஒரு இடத்தில் அமர்ந்து சிவனை மனதில் நிறுத்தி, கண்களை மூடி சிவலிங்கத்தை உங்கள் கண்முன்னே கொண்டு வாருங்கள். இந்த மந்திரத்தை சொல்லுங்கள். செய்வதற்கு அரிதான அந்த காரியத்தை செய்வதற்கு, தேவையான சக்தி உங்களுக்கு கிடைத்துவிடும். கஷ்டமான வேலைகளை சுலபமாக முடித்து நல்ல பெயரை வாங்கி விடுவீர்கள்.

இதையும் படிக்கலாமே: கொடுத்த பணம் திரும்ப வர

வீட்டில் இருந்தால் சிவனுக்கு புஷ்பங்களால் அர்ச்சனை செய்து கொண்டே இந்த மந்திரத்தை சொல்லலாம். பிரதோஷ நேரத்தில் கோவிலில் இருந்தால் அந்த சிவன் கோவிலில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து கண்களை மூடி சிவனை நினைத்து இந்த மந்திரத்தை சொல்லலாம். பிறகு பாருங்கள் நீங்கள் வெற்றிக்காகவே பிறந்தவர்களாக மாறிவிடுவீர்கள். இவ்வளவு அற்புதமான தகவலை இன்று உங்களோடு பகிர்ந்து கொண்டதில் சந்தோஷத்துடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்