- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 05 நவம்பர் 2026

இன்றைய ராசிபலன் – 05 நவம்பர் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். முக்கியமான வேலைகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க வேண்டாம். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டில் பெரியவர்கள் சொல்லக்கூடிய பேச்சை தட்டாமல் கேட்பது நல்லது. எந்த விஷயத்தையும் அடம்பிடித்து சாதிக்காதீர்கள்.

ரிஷபம்


ரிஷப ராசி காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். எப்படித்தான் இந்த வேலையை எல்லாம் செய்ய போறோமோ, என்று கஷ்டப்பட்டவர்கள், அந்த வேலையை இன்று சுலபமாக செய்து முடிப்பீர்கள். இறை நம்பிக்கை அதிகரிக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாராக்கடன் வசூலாகும். உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு கையில் பணம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். தேவையில்லாத நண்பர்களோடு அனாவசியமாக வெளியில் ஊர் சுற்ற வேண்டாம்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். மனதளவில் ஏதோ ஒரு சின்ன சலனம் இருந்தாலும், உங்களுடைய வேலையில் எந்த பாதிப்பும் இருக்காது. எந்த இடத்திலும் பொய் சொல்லாதீங்க. மனதில் பட்ட விஷயத்தை வெளிப்படையாக பேசுங்கள். நல்லதே நடக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். இன்று உங்களுடைய பெருமைகளை பேசி பேசி நேரம் போவதே தெரியாது. அந்த அளவுக்கு சந்தோசம் வெளிப்படும். பண்டிகையை கொண்டாட குடும்பத்தோடு தயாராகுவீர்கள். உறவுகளை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று கோபத்தை கொஞ்சம் கட்டுப்படுத்த வேண்டும். நிதானத்தோடு நடக்க வேண்டும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். புது முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளி போடுங்கள். சிவன் வழிபாடு செய்யுங்கள். உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று லாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். தேவையில்லாத வம்பு வழக்குகள் உங்களை விட்டு விலகும். மன நிம்மதி கிடைக்கும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். பயணங்களில் மூலம் நல்லது நடக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு என்று அன்பு பாசம் காதல் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியம் நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். கணவன் மனைவிக்கு ஒற்றுமை அதிகரிக்கும். தேவையில்லாத பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். நிதி நிலைமை சீராகும். வீட்டில் இருப்பவர்களுடைய தேவையை பூர்த்தி செய்வீர்கள். பண்டிகையை கொண்டாட தயாராகி விடுவீர்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்க துவங்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். விவசாயிகளுக்கு இருந்து வந்த நஷ்டம் லாபமாக மாறும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் தடைகள் தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எதிர்ப்புகளை சமாளிக்கும் தெம்பும் தைரியமும் இருக்க வேண்டும். பிரச்சனைகளை கண்டு பயந்து ஒதுங்க கூடாது .இறை வழிபாடு செய்யுங்கள். இன்று துணிச்சலாக செயல்படுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தடைகள் தடங்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகளை நாளை தள்ளி போடுங்கள். அனாவசியமாக செலவு செய்ய வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். உயர் அதிகாரிகளை பார்த்து பகைத்துக் கொள்ளக்கூடாது. சொந்த பந்தங்களோடு வாக்குவாதம் செய்யக்கூடாது .

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன தைரியம் வெளிப்படும். சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். குழப்பங்கள் வரும் ஆனால் அந்த பிரச்சனைகளை எதிர்த்து துணிச்சலோடு போராடி வெற்றி காண்பீர்கள். கவலைப்படாதீங்க, இறைவனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கும். நேர்மையாக நடந்து கொண்டால் எல்லாம் நல்லதே நடக்கும்.

சற்று முன்