சிவராத்திரி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று நம் அனைவருக்கும் தெரியும். சிவராத்திரி சமயத்தில் எப்படி விரதம் இருக்க வேண்டும்? எப்படி வழிபாடு செய்ய வேண்டும்? என்னென்ன பூஜைகள் நடைபெறும்? அந்த பூஜைகளுக்கு என்னென்ன பொருட்களை வாங்கி தர வேண்டும் என்று பலரும் அறிந்திருப்பார்கள். அப்படி நாம் செய்யக்கூடிய வழிபாட்டின் முழு பலனை பெறவும் வேண்டுதல் நிறைவேறவும் எந்த ஒரு பொருளை நாம் கையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சிவராத்திரி அன்று கையில் இருக்க வேண்டிய ஒரு பொருள்
பொதுவாக பலரும் சிவராத்திரி சமயத்தில் சிவபெருமானை முழுமனதோடு நினைத்துக் கொண்டு சிவ மந்திரத்தை உச்சரிப்பார்கள். அதேசமயம் சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானை வழிபாடும் செய்வார்கள். எந்த நேரத்தில் எந்தவிதமான வழிபாட்டு முறையை செய்தாலும் இந்த ஒரு பொருளை மட்டும் கையில் வைத்துக் கொண்டு செய்ய சிவபெருமானிடம் என்ன வேண்டுகிறோமோ அந்த வேண்டுதல் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
எப்படி முருகப் பெருமானுக்கு உகந்த பொருளாக சுக்கு திகழ்கிறதோ, சுக்கை கையில் வைத்துக்கொண்டு முருகப்பெருமானை வழிபாடு செய்ய முருகப்பெருமான் நமக்கு அருள் புரிவார் என்று கூறப்படுகிறதோ அதே போல் தான் சிவராத்திரி சமயத்தில் எந்த நேரத்தில் நாம் சிவ மந்திரத்தை உச்சரித்தாலும், எந்த நேரத்தில் சிவ பூஜையில் ஈடுபட்டாலும், எந்த நேரத்தில் ஆலயத்திற்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்தாலும் நம்முடைய கையில் இந்த ஒரு பொருள் இருக்க வேண்டும்.
அப்படி இந்த ஒரு பொருளை நாம் கையில் வைத்துக்கொண்டு சிவ மந்திரத்தை கூறுவதன் மூலமும் சிவபெருமானை வழிபாடு செய்வதன் மூலமும் சிவ அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் நாம் வேண்டிய வரம் நமக்கு கிடைக்கும். அந்த பொருள் தான் சிவபெருமானுக்குரிய வில்வ இலை. இந்த வில்வ இலையை கையில் வைத்துக்கொண்டு நாம் சிவ மந்திரத்தை கூறுவதன் மூலம் சிவபெருமானின் அருளோடு மட்டுமல்லாமல் மகாலட்சுமி தாயாரின் அருளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் மகாலட்சுமி தாயார் தான் வில்வ மரமாக இருந்து சிவபெருமானை நினைத்து தவம் இருந்தார் என்பதால் இந்த வில்வ இலையை கையில் வைத்துக்கொண்டு சிவராத்திரி அன்று நாம் சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வேண்டுதல் நிறைவேறுவதோடு மகாலட்சுமி தாயாரின் அருளால் செல்வ செழிப்பும் உயரும் என்று கூறப்படுகிறது.
மந்திரத்தை கூறும் பொழுதும் சிவ பூஜையில் ஈடுபடும் பொழுதும் வைத்திருக்கக்கூடிய இந்த வில்வ இலையை நாம் பூஜைகள் நிறைவடைந்த பிறகு மந்திர உச்சாடலை நிறைவு செய்த பிறகு நம்முடைய பர்சிலோ அல்லது பணம் வைக்கும் இடத்திலோ, வைத்துவிட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் மந்திர ஜபத்தால் உருவேற்றப்பட்ட அந்த வில்வ இலையால் சிவபெருமானின் அருளை பெறுவதற்கு மட்டுமல்லாமல் நம்முடைய வறுமை நிலையையும் கஷ்டத்தையும் நீக்கி செல்வ செழிப்பை அருளும். பணத்தை சம்பாதிப்பதற்காக செய்யக்கூடிய அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:12 ராசிக்காரர்களும் சிவராத்திரி அன்று செய்ய வேண்டிய தானம்
சிவபெருமானுக்கு உரிய இந்த ஒரு பொருளை முழுமனதோடு சிவபெருமானை நினைத்துக் கொண்டு கையில் வைத்து சிவ மந்திரத்தை கூறி சிவ பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையே தலைகீழாக மாறும். வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்கும். செல்வ செழிப்புடன் வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.