- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வ வளம் அதிகரிக்க மாசி அமாவாசை பரிகாரம்

செல்வ வளம் அதிகரிக்க மாசி அமாவாசை பரிகாரம்

- Advertisement -

பொதுவாக அமாவாசை பௌர்ணமி போன்ற தினங்கள் மிகவும் விசேஷமான தினங்களாக கருதப்படுகிறது. அன்றைய தினங்களில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிப்பாடாக இருந்தாலும், பரிகாரமாக இருந்தாலும் அதற்கு அதிகளவில் பலன் கிடைக்கிறது என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பிரபஞ்சத்தின் பேராற்றல் நிறைந்த இந்த நாட்களில் பல விஷயங்களுக்காக பலவிதமான பரிகாரங்களை செய்தாலும் அதில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு பரிகாரமாக திகழ்வதுதான் செல்வ வளம் அதிகரிப்பதற்காக நாம் செய்யக்கூடிய பரிகாரம். அதன் அடிப்படையில் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் செல்வ வளம் அதிகரிப்பதற்கு என்ன பொருட்களை ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

மாசி அமாவாசை பரிகாரம்

செல்வ வளம் பெருக வேண்டும் என்றால் அதற்கு கண்டிப்பான முறையில் மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது வேண்டும். மகாலட்சுமி தாயார் என்பவர் சந்திர பகவானின் சகோதரியாக கருதப்படுகிறார் என்பதால் சந்திர பகவானுக்குரிய நாட்களில் நாம் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அதனால் தான் பல ஆலயங்களில் அமாவாசை பௌர்ணமி போன்ற தினங்களில் மகாலட்சுமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஏன் நாமே ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினத்தில் மகாலட்சுமி பூஜையை செய்வது உண்டு. அதுவும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு அமாவாசையிலும் மகாலட்சுமியை வழிபாடு செய்வார்களாம். அதனால்தான் அவர்கள் இன்றளவும் செல்வ செழிப்புடன் வாழ்கிறார்கள். என்ற ஒரு கூற்றும் நிலவி வருகிறது.

- Advertisement -

அப்படிப்பட்ட அமாவாசையில் சிறப்பு மிகுந்த அமாவாசையாக திகழக்கூடியது மாசி அமாவாசை. மாசி அமாவாசை தினத்தில் மகாலட்சுமி தாயாரை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கு மகாலட்சுமி தாயாருக்குரிய பொருட்களை ஒன்று சேர்த்து வைப்பதன் மூலமும் மகாலட்சுமி தாயாரின் அருளை பரிபூரணமாக பெற முடியும். அப்படி மகாலட்சுமிக்கு பிடித்தமான பொருட்கள் என்று பார்க்கும் பொழுது அது வாசனை பொருட்களாகவே திகழ்கிறது. எந்த இடத்தில் வாசனை நிறைந்து இருக்கிறதோ அந்த இடத்தில் மகாலட்சுமி தாயாரின் அருள் இருக்கும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அதிலும் குறிப்பாக ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம் இந்த மூன்று பொருட்களும் மிகவும் சிறப்பு வாய்ந்த பொருட்களாகவே திகழ்கிறது.

இந்த மூன்று பொருட்களும் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்தில் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்குமாம். அதனால் மாசி அமாவாசை மட்டுமல்லாமல் ஒவ்வொரு அமாவாசை பௌர்ணமி தினத்திலும் இந்த மூன்று பொருட்களையும் ஒருசேர மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக வைக்க வேண்டும். பச்சை கற்பூரம் சிறிய துண்டு, ஒரு கிராம்பு, ஒரு ஏலக்காய் இவை மூன்றையும் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக ஒரு கிண்ணத்திலோ அல்லது அகல் விளக்கிலோ போட்டு வைத்து விடுங்கள்.

- Advertisement -

அன்று முழுவதும் இது அப்படியே மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாகவே இருக்கட்டும். மறுநாள் அதை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும் அல்லது பர்ஸ்ஸில் கூட போட்டு வைத்துக் கொள்ளலாம். இதை அப்படியே எடுத்து வைக்க வேண்டும். மூட்டையாக கட்ட வேண்டாம். பச்சை கற்பூரம் காற்றில் கரைந்து விடும். ஏலக்காயும் கிராம்பு மட்டும் அப்படியே இருக்கும். அடுத்து வரக்கூடிய பௌர்ணமி தினத்தில் இந்த ஏலக்காய் கிராம்பை நாம் சாம்பிராணி தூபம் போடும்போது அதில் போட்டு காட்டி விடலாம்.

இதையும் படிக்கலாமே:சுபிக்ஷம் பெருக மகாலட்சுமி மற்றும் பார்வதி வழிபாடு

இப்படி ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி தினத்திலும் இந்த முறையில் நாம் மகாலட்சுமி தாயாருக்கு இந்த மூன்று பொருட்களை சேர்த்து வைப்பதன் மூலம் விரைவிலேயே நம்மை பிடித்த தரித்திரம் நீங்கி செல்வ வளம் அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்