மாசி மாதம் என்பது சிறப்புக்குரிய மாதம் என்றும் அந்த மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு நிகழ்வும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் திகழ்கிறது. பல அம்மன் ஆலயங்களிலும் சிவபெருமானின் ஆலயங்களிலும் மாசி மாதம் திருவிழா, தெப்போட்சவம் போன்ற பல விஷயங்கள் நடைபெறும். அப்படி மாசி மாதத்தில் சிறப்பு வாய்ந்த ஒன்றாக திகழ்வது சிவராத்திரி ஆக இருந்தாலும் மற்றொரு சிறப்பு வாய்ந்ததாக திகழ்வதுதான் மாசி அமாவாசை. அன்றைய தினம் மயான கொள்ளை என்னும் நிகழ்வு பல அம்மன் ஆலயங்களிலும் நடைபெறும். அன்றைய நாளில் நாம் செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மகாலட்சுமி மற்றும் பார்வதி வழிபாடு
பார்வதி தேவியை எள்ளி நகையாடிய பிரம்ம தேவரின் தலையை கொய்ததால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதன் மூலம் சிவபெருமானின் கையில் திருவோடு ஒட்டிக்கொண்டது. அந்த திருவோட்டை அவருடைய கையில் இருந்து நீக்குவதற்காக பார்வதி தேதி பல வழிகளில் முயற்சி செய்தார். எந்த முயற்சியும் பலனளிக்காததால் மகாலட்சுமியிடம் ஆலோசனை கேட்டார். மகாலட்சுமியின் ஆலோசனைப்படி பார்வதி தேவி செய்து அந்த திருவோட்டை சிவபெருமானின் கையில் இருந்து விடுபட செய்தார். அன்றைய தினத்தை தான் மயான கொள்ளை என்று கூறுகிறார்கள். அப்படிப்பட்ட நாளில் நாம் மறவாமல் பார்வதி தேவி மற்றும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும்.
மாசி அமாவாசை என்பது பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினத்தில் காலையிலேயே அருகில் இருக்கக்கூடிய சிவபெருமானின் ஆலயத்திற்கு சென்று அங்கு அம்பாளுக்கு அபிஷேகத்திற்காக பால், தயிர், தேன் போன்ற பொருட்களை வாங்கித் தந்து அபிஷேகத்தில் கலந்துகொண்டு அம்பாளை வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை காலை 10 மணிக்கு முன்பாகவே செய்து முடித்து விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு வேளை அருகில் மகாலட்சுமியின் கோவிலும் இருக்கிறது 10 மணி ஆவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது என்னும் பட்சத்தில் மகாலட்சுமி தாயாரையும் நாம் வழிபாடு செய்யலாம். அப்படி நேரமாகிவிட்டது என்பவர்கள் மாலை 6 மணிக்கு மகாலட்சுமி தாயாரின் ஆலயத்திற்கு சென்று மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்யும்பொழுது மகாலட்சுமி தாயாருக்கு மருதாணி பூ, நெல்லிக்காய், வில்வ இலை போன்றவற்றை வாங்கித் தர வேண்டும்.
ஒரு வேளை அன்றைய நாளில் நம்மால் அருகில் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு செல்ல இயலவில்லை என்பவர்கள் தங்களுடைய வீட்டு பூஜை அறையில் காலையிலேயே பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள் தனியாக ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு “ஓம் நமோ பார்வதியை நமஹ, ஓம் நமோ மஹாலட்சுமியை நமஹ” என்னும் இந்த இரண்டு மந்திரங்களையும் 18 முறை பாராயணம் செய்து இவர்கள் இருவரையும் வழிபட வேண்டும். இந்த வழிபாட்டின் சமயத்தில் இனிப்பு நிறைந்த பொருட்களை நெய்வேத்தியமாக வைப்பது மிகவும் சிறப்பு.
இதையும் படிக்கலாமே:சிவராத்திரி அன்று வாங்கிக் கொடுக்க வேண்டிய அபிஷேகப் பொருட்கள்
மாசி அமாவாசை தினத்தன்று அம்பிகையையும் மகாலட்சுமி தாயாரையும் இந்த முறையில் முழுமனதோடு வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்வில் இதுநாள் வரை இருந்து வந்த தீமைகள் அனைத்தும் விலகி சுபிக்ஷம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.