- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval7 கிரக சேர்க்கையோடு வரும் சோடசக்கலை நேரம்

7 கிரக சேர்க்கையோடு வரும் சோடசக்கலை நேரம்

- Advertisement -

ஏழையாக பிறந்தது நம்முடைய தவறு அல்ல. ஆனால் ஏழையாகவே வாழ்ந்து, இறுதி நாள் வரை ஏழையாகவே இறந்தால் அது நம்முடைய தவறுதான். நம்முடைய முயற்சிகளையும் நம்முடைய கடின உழைப்பையும் முதலீடாக போட்டு ஏழையாகப் பிறந்த நாம், நிச்சயம் பணக்காரராக முடியும். செல்வந்தர்களாக மாற முடியும்.

அதற்கு உண்டான உங்களுடைய முயற்சிகளில் தடை ஏற்படக்கூடாது என்றால், ஆன்மீகத்தில் சொல்லப்படும் பரிகாரங்கள் உங்களுக்கு உதவி செய்யும். உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் ஏழ்மை நிலையை அகற்றுவதற்கு இன்று ஒரு எளிமையான பரிகாரத்தை நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

சோடசக்கலை நேரம் 2025

இந்த நேரத்தில் நாம் பிரபஞ்சத்திடம் வைக்கும் வேண்டுதல் எதுவாக இருந்தாலும், அது உடனே பலிக்கும். சோடச கலை நேரம் என்றால் என்ன. அந்த ஷோடச கலை நேரம் ஆனது நாளைய தினம் எந்த நேரத்தில் வரப்போகிறது என்பதைப் பற்றிய விரிவான தகவலை இப்போது தெரிந்து கொள்வோம்.

அமாவாசை திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், பௌர்ணமி திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் இந்த சோடசக்கலை நேரம் ஆனது ஆரம்பமாகும். இதன் அடிப்படையில் பார்த்தால் நாளை  வெள்ளிக்கிழமை அதிகாலை 5:17 மணி முதல் 7:17 மணி வரை சோடசக்கலை நேரமானது நமக்கு இருக்கிறது. இந்த இரண்டு மணி நேரத்தில் நடுவே வரக்கூடிய 5 வினாடிகள் தான் அதிசக்தி வாய்ந்தது.

- Advertisement -

ஆனால் அந்த 5 வினாடிகள் இந்த இரண்டு மணி நேரத்தில், எப்போது வரும் என்று யாருக்குமே தெரியாது. இந்த இரண்டு மணி நேரமும் ஒரு குறிப்பிட்ட வேண்டுதலை இறைவனிடம் நாம் வைக்கும் போது, அந்த ஐந்து வினாடிகளும் நிச்சயம் வரும். அந்த நேரத்தில் நாம் இறைவனிடம் வைக்கும் வேண்டுதல் நிச்சயம் பலிக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

வெள்ளிக்கிழமை அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வையுங்கள். ஒரு மஞ்சள் நிற துணியில், ஏழு கிரக சேர்க்கையை முன்னிட்டு, ஏழு ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள். இந்த மஞ்சள் நிற முடிச்சை கையில் வைத்துக்கொண்டு உங்கள் கடன் சுமை குறைய வேண்டும், மேலும் மேலும் செல்வ வளம் பெருக வேண்டும் என்று மனமுருகி பிரார்த்தனை வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இரண்டு மணி நேரமும் ஆழ்ந்த பிரார்த்தனையில் இருக்க வேண்டும். பிரார்த்தனை நிறைவடைந்த உடன் இந்த முடிச்சை பூஜை அறையில் வைத்து ஒரு கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். உங்களுடைய வேண்டுதல் நிறைவேறிய பிறகு இந்த முடிச்சை கொண்டு போய் வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவிலில் சேர்த்து விடுங்கள். இவ்வளவுதான் வழிபாடு.

ஆனால் இதற்குப் பின்னால் உங்கள் நீண்ட நாள் கனவு, நீண்ட நாள் ஆசை நிறைவேறுவதற்கு வழி இருக்கிறது. இரண்டு மணி நேரமா? என்று கஷ்டப்படாமல் இந்த இரண்டு மணி நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டால் உங்கள் வாழ்வில் நிச்சயம் வெற்றி காணலாம். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்லாமல் வேறு ஏதாவது வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றாலும், இந்த நேரத்தை பயன்படுத்தலாம். என்ன வேண்டுதல் வைத்தாலும் தவறு இல்லை.

புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், மற்றும் நெப்டியூன் இந்த ஏழு கிரகங்கள் நாளைய தினம் ஒரே நேர்கோட்டில் வரவிருக்கிறது. இந்த ஏழு கிரக சேர்க்கை பூமியில் நிறைய நன்மைகளை ஏற்படுத்தும் என்பதும் ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது. ஆகவே நாளைய தினம் வந்திருக்கும் இந்த அற்புதமான நேரத்தை யாரும் தவற விடாதீங்க.

இதையும் படிக்கலாமே: கிரக தோஷம் நீக்கும் மாசி அமாவாசை

வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருப்பதால் இந்த மாசி அமாவாசை சோடச கலை நேரத்திற்கு இன்னும் அதிக சக்தி உண்டு. நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த பதிவு வாழ்க்கையில் மிகப்பெரிய நல்ல மாற்றத்தை ஏற்படுத்தித் தரும் என்ற இந்த தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்