அமாவாசை என்றதுமே அனைவருக்கும் முன்னோர்களை வழிபாடு செய்ய வேண்டும் என்பதுதான் ஞாபகத்திற்கு வரும். அதிலும் குறிப்பாக மாசி மாதத்தில் வரக்கூடிய இந்த அமாவாசை என்பது குரு பகவானுக்குரிய வியாழக்கிழமையோடு சேர்ந்து வருகிறது. மேலும் ஏழு கிரகங்கள் ஒன்றிணைந்து வரக்கூடிய அமாவாசையாகவும் இந்த அமாவாசை திகழ்கிறது. அப்படிப்பட்ட இந்த அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு எந்த முறையில் படையல் இட்டு வழிபாடு செய்தால் நம்முடைய கிரக தோஷங்கள் நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கிரக தோஷம் நீக்கும் மாசி அமாவாசை
சிவராத்திரி அன்று விரதம் இருந்து கண் விழிப்பவர்களாக இருந்தாலும் சரி, விரதம் இருக்காமல் கண் விழிப்பவர்களாக இருந்தாலும் சரி, கண் விழிக்காமல் வழிபாட்டை மட்டும் செய்துவிட்டு உறங்குபவர்களாக இருந்தாலும் சரி, மறுநாள் வியாழக்கிழமை அதுவும் அமாவாசையோடு சேர்ந்து வரக்கூடிய வியாழக்கிழமை அன்றைய தினத்தில் கண்டிப்பாக முறையில் நாம் முன்னோர்களை வழிபாடு செய்ய வேண்டும். அதுவும் குறிப்பாக மதிய நேரத்தில் முன்னோர்களுக்கு நாம் இந்த முறையில் படையல் இட நம்முடைய வாழ்க்கையே மாறும் என்று கூறப்படுகிறது.
ஏழு கிரகங்கள் ஒன்றிணைந்து வரக்கூடிய இந்த மாசி அமாவாசை என்பது வியாழக்கிழமையோடு சேர்ந்து வருகிறது. இன்றைய நாளில் மதியம் 11:30 மணியிலிருந்து 1:00 மணிக்குள் வீட்டில் சைவ உணவை தயார்செய்ய வேண்டும். உங்களால் எதை செய்ய முடியுமோ அதை செய்து வைத்து ஒரு வாழை இலையில் படையலாக போடுங்கள். அந்த வாழை இலைக்கும் முன்பாக ஒரு கண்ணாடியை வைத்து அந்த கண்ணாடிக்கு திருநீறு குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு தேங்காய் உடைத்து மனதார முன்னோர்களை வழிபாடு செய்ய வேண்டும்.
இப்படி செய்து முடித்த பிறகு நாம் சமைத்த உணவுகளை காக்கைக்கு எடுத்து அதன் மேல் சிறிது கருப்பு எள்ளையும் தூவி தானமாக காக்கைக்கு கொண்டு போய் வைத்து விடுங்கள். இந்த முறையில் நாம் படையல் இட்டு முன்னோர்களை வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய எப்பேர்பட்ட கிரக தோஷமாக இருந்தாலும் அந்த தோஷம் விலகும். அதே போல் அன்றைய தினத்தில் குறைந்தபட்சம் ஐந்து நபர்களுக்காவது நாம் சமைத்த சாப்பாட்டை தானமாக தர வேண்டும்.
அந்த அளவிற்கு சமைக்கத் தெரியாது அந்த அளவிற்கு வசதி இல்லை என்று நினைப்பவர்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு உணவு பொருளை ஐந்து நபர்களுக்கு தானமாக தருவதன் மூலம் குருவருளும் நமக்கு கிடைக்கும். இந்த முறையில் நாம் வழிபாடு செய்வதன் மூலம் முன்னோர்களால் ஏற்பட்ட சாபங்களும், தோஷங்களும் நீங்குவதோடு கிரக தோஷமும் நீங்கும். மேலும் குரு பகவானின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இவை அனைத்தும் நமக்கு நிவர்த்தி அடைந்து விட்டாலே நம்முடைய வாழ்க்கையில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு முன்னேற்றத்தை பெறுவோம்.
இதையும் படிக்கலாமே:செல்வ வளம் அதிகரிக்க மாசி அமாவாசை பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த வழிபாட்டு முறையை மாசி அமாவாசை தினத்தன்று முழு மனதோடு செய்பவர்களுக்கு முன்னோர்களின் ஆசியும் நவகிரகங்களின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று சிறப்பான வாழ்க்கையை வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.