- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilவெடிப்புகள் அற்ற மிருதுவான பாதத்தை பெற

வெடிப்புகள் அற்ற மிருதுவான பாதத்தை பெற

- Advertisement -

நம்மில் பலரும் நம்முடைய முகத்திற்கும் தலைமுடிக்கும் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து அதை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பலவிதமான வழிமுறைகளை பின்பற்றுவோம். ஆனால் நம்முடைய பாதத்திற்கு அந்த அளவிற்கு முக்கியத்துவத்தை தரமாட்டோம். நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய நிறத்தையும் நம்முடைய காலில் இருக்கக்கூடிய நிறத்தையும் பார்த்தால் அதிக அளவில் வேறுபாடு என்பது இருக்கும். இந்த வேறுபாட்டை நீக்கி முகத்தைப் போல பாதத்தையும் மிருதுவாகவும் அழகாகவும் பராமரிப்பதற்கு முட்டை ஓட்டை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக பலரது பாதங்களில் செருப்பை அணிந்து செல்வதனால் அந்த தடம் மட்டும் வெள்ளை ஆகவும் மற்ற இடங்கள் கருமையாகவும் இருக்கும். அதே போல் பாதத்தில் பாத வெடிப்புகளும் ஏற்பட்டு இருக்கும். ஒரு சிலருக்கு லேசாக பாத வெடிப்பு இருந்தாலும் பலருக்கும் அதிக அளவில் பாத வெடிப்பு ஏற்பட்டு அதனால் வலிகளையும் அனுபவிப்பார்கள். மேலும் பாதத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் தோல் சற்று கடினமாக இருக்கும். இவை அனைத்தையும் நீக்குவதற்கு நாம் வேண்டாம் என்று தூக்கிப் போடும் முட்டை ஓடு இருந்தால் போதும்.

- Advertisement -

முதலில் முட்டை ஓட்டை நன்றாக தண்ணீர் ஊற்றி அலசி வெயிலில் ஒரு நாள் முழுவதும் காய வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் அதில் இருக்க கூடிய வாடை முற்றிலும் நீங்கும். மறுநாள் அதை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடி செய்து கொள்ளுங்கள். பிறகு அதை ஒரு சல்லடையை பயன்படுத்தி சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது முட்டை ஓட்டின் பொடி தயாராகிவிட்டது. ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு முட்டை ஓட்டின் தூளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் இரண்டு ஸ்பூன் அளவிற்கு கட்டித் தயிரை சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேனை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை நாம் எந்த அளவிற்கு நன்றாக கலக்கிறோமோ அந்த அளவிற்கு இது கிரீம் பதத்தில் வரும். அப்படி வந்த பிறகு இதை நம்முடைய கால்களிலும் பாதங்களிலும் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இது சற்று நெருநெருவென்று இருக்கும் என்பதால் இயற்கையான ஒரு ஸ்க்ரப்பராக இது திகழும்.

- Advertisement -

இப்படி நாம் தொடர்ச்சியாக தினமும் இதை பயன்படுத்தி நம்முடைய பாதங்களிலும் கால்களிலும் மசாஜ் செய்து கழுவுவதன் மூலம் எப்பேற்பட்ட பாத வெடிப்பாக இருந்தாலும் கருமையாக இருந்தாலும் அவை படிப்படியாக நீங்கி மிருதுவான பாதத்தை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே:பளபளக்கும் முகத்தைப் பெற கொரியன் ஃபேஸ் மாஸ்க்

இன்றைய காலத்தில் பாதங்களை பராமரிப்பதற்கு என்றும் நகங்களை பராமரிப்பதற்கு என்றுமஅ பலவிதமான அழகு நிலையங்கள் இருந்தாலும் வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் இப்படி நம்முடைய பாதங்களை பராமரிக்க முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்