தங்கம் எவ்வளவுதான் ஆயிரக்கணக்கில் விலை ஏறினாலும், சில விசேஷங்களுக்கு தங்கம் கட்டாயம் தேவைப்படுகிறது. அதுவும் வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால் தங்கம் வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். உங்களுடைய வீட்டிலும் தங்க நகையின் வருகை அதிகமாக வேண்டுமா. தங்கத்தை சிறுக சிறுக வாங்கி சேர்க்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால் இந்த எளிமையான ஆன்மீக பரிகாரத்தை முயற்சி செய்து பார்க்கலாம்.
அதேபோல நிறைய பேர் தங்கத்தை அடமானத்தில் வைத்திருப்பார்கள். அடமானத்தில் வைத்திருக்கும் தங்க நகையை சீக்கிரமாக மீட்டு விடுங்கள். தங்கம் வாங்க முடியவில்லை என்று, கஷ்டப்படுபவர்கள் ஒரு பக்கம் இருக்க, வாங்கிய தங்கத்தை அடமானம் வைத்தவர்களுக்கு இருக்கும் கஷ்டம் அதைவிட பெரியது. புது நகை வாங்கவும் இந்த பரிகாரம் செய்யலாம். அடகு வைத்த நகையை மீட்டெடுக்கவும் இந்த பரிகாரம் செய்யலாம்.
தங்கம் வாங்க பரிகாரம்
நம்முடைய வீட்டில் வெள்ளியை எந்த அளவுக்கு வாங்கி சேர்க்கின்றமோ, அதே அளவுக்கு தங்கமானது நம்முடைய வீட்டில் சேரும் என்பது நம்பிக்கை. அந்த காலத்தில் எல்லாம் ஒரு நம்பிக்கை இருந்தது. ஒரு நல்ல காரியம் நடப்பதற்கு முன்பு, ஒரு நாணயத்தை மஞ்சள் துணியில் வைத்து முடிச்சு போட்டு வைக்கணும் என்று சொல்லுவார்கள். இது இந்த காலத்திலும் இருக்கக்கூடிய நம்பிக்கை தான்.
ஆனால், அந்த நாணயம் இருக்குது பாருங்க. அதில் தான் சூட்சமமே இருக்கிறது. வெள்ளி நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து வைத்தால் சுப காரியத்திற்கு தேவையான பணம் தங்கம் நகை உங்களை வந்து சேரும் என்பது தான் இந்த பரிகாரத்திற்கு பின்னால் இருக்கும் உண்மை.
இப்போது ஒரு வீட்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வீட்டில் பணமோ தங்கமோ நகைகளோ இல்லை. ஆனாலும் அந்த பெண்ணுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்றால், என்ன செய்வது. குலதெய்வத்தை நினைத்து மஞ்சள் துணியில் ஒரு வெள்ளி நாணயத்தை வைத்து, முடிச்சு போட்டு பூஜையறையில் வைத்து விட்டால், போதும். பணமும் தங்கமும் நகையும் தானாக வீடு தேடி வரும் என்று சொல்லுவார்கள். இதையேதான் நாம் நாளை தினத்தில் பரிகாரமாக செய்யப் போகின்றோம்.
ஒரு சின்ன வெள்ளி நாணயத்தை எடுத்து மஞ்சள் துணியில் முடிந்து, மகாலட்சுமி பாதத்தில் வைத்து விட்டு மனமுருகப் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வேண்டிய தங்கத்தை மகாலட்சுமி இடம் கேளுங்கள். தேவையான அளவு தங்கத்தை மட்டும் கேட்டால் போதும். அடமானம் வைத்திருக்கும் நகைகளை மீட்டெடுக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நாளை வெள்ளிக்கிழமை பூஜை செய்யும் போது இந்த பரிகாரத்தையும் கூட சேர்த்து செய்தால் போதும்.
இதையும் படிக்கலாமே: வாஸ்து தோஷம் நீங்கி சிறப்பான வாழ்க்கை அமைய
நிச்சயமாக உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும். பிரார்த்தனை நிறைவடைந்த உடன் பூஜை அறையில் இருக்கும் வெள்ளி நாணயத்தை மஞ்சள் துணியில் இருந்து எடுத்து, பீரோவிலேயே வைத்துக் கொள்ளலாம். தவறு ஒன்றும் கிடையாது. இவ்வளவுதான் பரிகாரம். இந்த பரிகாரத்தை நாளைய தினம் வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்து பாருங்கள். நிச்சயமாக ஒரு சில வாரங்களில் உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் தெரியும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.