- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilபளிச்சென்ற முகத்தைப் பெற

பளிச்சென்ற முகத்தைப் பெற

- Advertisement -

வெளியே செல்லும் பொழுது நாம் நன்றாக இருக்க வேண்டும், நம்முடைய முகம் பளிச்சென்று தெரிய வேண்டும், பிரகாசமாக இருக்க வேண்டும், நான்கு பேரில் மூன்று பேராவது நம்மை திரும்பி பார்க்க வேண்டும் என்று தான் பலரும் ஆசைப்படுகிறார்கள். அதனால் தான் எங்கு சென்றாலும் தங்களுடைய முகத்தை அழகுப்படுத்திக் கொண்டு செல்கிறார்கள். இப்படி அழகுப்படுத்திக் கொள்வதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் நம்முடைய இந்திய பாரம்பரிய முறைப்படி நாம் செய்யக்கூடிய ஒரு ஃபேஸ் மாஸ்கானது நிரந்தரமாக நம்முடைய முகத்தை பளிச்சென்று மாற்றும். அந்த ஃபேஸ் மாஸ்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

பளிச்சென்ற முகத்தைப் பெற

நம்முடைய முன்னோர்கள் அவர்களுடைய காலத்தில் எந்தவித அழகு சாதன பொருட்களையும் பயன்படுத்த மாட்டார்கள். இருப்பினும் அவர்கள் வயதானாலும் இளமையுடனும் பிரகாசத்துடனும் புதுப்பொலிவுடன் திகழ்வார்கள். ஆனால் இன்றைய காலத்தில் பலவிதமான அழகு சாதன பொருட்களை பயன்படுத்தினாலும் அவர்களைப் போல பிரகாசமான முகத்தை பெற முடிய வில்லை. அதையும் மீறி நாம் மேக்கப் போடுவதன் மூலம் அந்த மேக்கப் முகத்தில் இருக்கும் வரை தான் பிரகாசமாக திகழ்வோமே தவிர்த்து மறுநாள் நம்முடைய முகமூடி கிழிந்து உண்மையான முகத்தோற்றத்தை பெற்று விடுவோம். இப்படி நிகழாமல் எப்பொழுதும் பிரகாசமாக பளிச்சென்று முகத்தை பெறுவதற்கு ஒரு ஃபேஸ் மாஸ்க் இருக்கிறது. அதை எப்படி தயார் செய்வது என்று இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

இந்த ஃபேஸ் மாஸ்க் நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தியது. இதற்கு நமக்கு ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் அளவிற்கு கடலை மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் அரை ஸ்பூன் அளவிற்கு கஸ்தூரி மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு இதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேனை ஊற்றி ஒரு முறை கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது இதை நம்முடைய முகத்திற்கு தடவும் அளவிற்கு நாம் ஃபேஸ் மாஸ்காக தயார் செய்ய வேண்டும். அதற்கு தேவையான அளவு பாலை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த பால் காய்ச்சிய பாலாக இருந்தாலும் பரவாயில்லை காய்ச்சாத பாலாக இருந்தாலும் பரவாயில்லை.

இதை நன்றாக கலந்து நாம் இரவு படுக்கச் செல்வதற்கு முன் முகத்தை சுத்தமாக கழுவி விட்டு இந்த ஃபேஸ் மாஸ்கை முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடத்தில் இருந்து 20 நிமிடம் வரை அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு குளிர்ந்த நீரினால் முகத்தை நன்றாக மசாஜ் செய்து கழுவிக் கொள்ளுங்கள். இப்படி தினமும் தொடர்ச்சியாக நாம் செய்வதன் மூலம் நம்முடைய முகத்தில் இயற்கையிலேயே ஒரு வித பொலிவும் ஜொலி ஜொலிப்பும் ஏற்பட ஆரம்பித்து விடும். எந்தவித மேக்கப்பும் போடாமல் பிரகாசமாக பளிச்சென்று தெரிய ஆரம்பிப்போம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:முடி வளர ஆலமர இலை

பலவிதமான கெமிக்கல் நிறைந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் அழகாக இல்லாமல் இப்படி இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி என்றென்றும் அழகுடனும் பொலிவுடன் திகழ்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்