மாசி மாதம் என்பது மிகவும் சிறப்பு மிகுந்த மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். மாசி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு திதியும் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பலவிதமான பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய திதியாக திகழ்கிறது. அந்த வகையில் வளர்பிறை ஏகாதசி நாள் அன்று நாம் பெருமாளை வழிபாடு செய்யும்பொழுது பெருமாளின் அருளால் நம்முடைய கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீரும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
இந்த கலியுகத்தில் உயிர் வாழ்வதற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் தந்து நம்மை காத்து ரட்சிக்கும் கடவுளாக திகழக்கூடியவர் பெருமாள் என்பதால்தான் அவர் காக்கும் தொழிலை செய்யக்கூடியவர் என்று கூறி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெருமாளை வணங்குவதற்குரிய சிறப்பு மிகுந்த நாளாக தான் ஏகாதசி நாள் திகழ்கிறது. அதுவும் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசி நாளன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்தோ விரதம் இருக்காமலோ வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர்வதற்குரிய வழி நமக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அப்படி தீர்க்க முடியாத கஷ்டமாக திகழக்கூடியது தான் கடன் பிரச்சினை. இந்த கடன் பிரச்சினை தீர்வதற்கு எப்படி பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
மார்ச் மாதத்தின் 10ஆம் தேதி காலை 11:00 மணி வரை ஏகாதசி திதி இருக்கிறது. அதனால் 11:00 மணிக்குள் இந்த ஒரு எளிமையான வழிபாட்டை நாம் செய்தோம் என்றால் பெருமானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் கடன் பிரச்சினை தீர்வதற்குரிய வழியும் உண்டாகும். இந்த வழிபாட்டை வீட்டிலும் செய்யலாம், அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திலும் செய்யலாம். வீட்டில் செய்யும் பட்சத்தில் பெருமானின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அவருக்கு துளசி இலைகளை சாற்றி அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.
பிறகு அவருடைய படத்திற்கு முன்பாக அகல் விளக்கில் நெய் தீபம் ஒன்றை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு இனிப்பு பொருள் அதுவும் பெருமாளுக்கு மிகவும் பிடித்தமான மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய இனிப்பு பொருளை அவருக்கு நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள். அருகிலேயே ஒரு டம்ளரில் சுத்தமான தண்ணீரை பிடித்து அதில் சிறிது பச்சை கற்பூரம், ஒரே ஒரு ஏலக்காய் விதை, துளசி இலை இரண்டு போட்டு வைத்து விடுங்கள். இப்பொழுது பெருமாளின் பின்வரும் இந்த மந்திரத்தை கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு பெருமாளை மனதார நினைத்துக் கொண்டு 11 முறை கூற வேண்டும். ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்கள் ஆலயத்திலேயே ஓரிடத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை 11 முறை கூறினால் போதும்.
மந்திரம்
ஓம் மாதவாய நம
இதையும் படிக்கலாமே:2 நிமிடத்தில் நல்லது நடக்க ஏஞ்சல் நம்பர்
மிகவும் எளிமையான இந்த ஒரு வரி மந்திரத்தை முழுமனதோடு பெருமாளை நினைத்து ஏகாதசி திதி முடிவதற்குள் கூறுபவர்களுக்கு கடன் பிரச்சனை தீர்வதற்குரிய செல்வ வளம் அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.