- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval2 நிமிடத்தில் நல்லது நடக்க ஏஞ்சல் நம்பர்

2 நிமிடத்தில் நல்லது நடக்க ஏஞ்சல் நம்பர்

- Advertisement -

உங்களுடைய வாழ்க்கையின் சின்ன சின்ன தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது முதல், பெரிய பெரிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு, இந்த மெத்தடை நீங்கள் ட்ரை பண்ணலாம். உங்களுடைய வாழ்க்கையின் நல்லதற்காக மட்டுமே இந்த பரிகாரத்தை பயன்படுத்தி பார்க்க வேண்டும். அடுத்தவர்களை கெடுக்கும் நோக்கத்தோடு, அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்கும் பட்சத்தில் இந்த பரிகாரத்தை யாரும் முயற்சி செய்து பார்க்காதீர்கள். நல்லதற்கு மட்டுமே இந்த பரிகாரம் பயன்படுத்தப்பட வேண்டும்.

நம்முடைய வாழ்க்கையில் சின்ன சின்னதாய் அன்றாட வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும். சின்ன சின்ன தவறுகளும் நடக்கும். உங்களுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள, தவறுகளை சரிசெய்ய, பிரச்சினைகளை சமாளிக்க இந்த பரிகாரம் நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும். உதாரணத்திற்கு அவசரத்தில் பைக் சாவியை தொலைத்து விடுவார்கள். அவசரத்தில் ஏடிஎம் கார்டை தொலைத்து விடுவார்கள்.

- Advertisement -

முக்கியமான பொருளை கைமறதியாக எங்கேயாவது வைத்து விடுவீர்கள். அவசரத்திற்கு டிரைவிங் லைசென்ஸை கூட தொலைத்து விட்டு நிறைய பேர் தேடுவார்கள். ஆனால் கையில் கிடைக்கவே கிடைக்காது. இந்த மாதிரி சமயத்தில் ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து இந்த நம்பரை 27 முறை சொன்னால் நீங்கள் தவறவிட்ட அந்த பொருள் எளிதில் உங்கள் கையை வந்து சேரும்.

தவறவிட்ட பொருட்களுக்கு மட்டும்தான் இதை பயன்படுத்த வேண்டுமா. நிச்சயம் கிடையாது. உங்களுடைய மனதிற்கு பிடித்த நபர் யாரேனும் உங்களை விட்டு பிரிந்து விட்டால், அந்த நபர் திரும்பவும் வந்து உங்களை சேருவதற்கும் இந்த பரிகாரத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.

- Advertisement -

இப்போது ஒரு உதாரணத்திற்கு கணவனும் மனைவியும் பிரிந்திருக்கிறார்கள். மனைவிக்கு கணவரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இரண்டு பேரும் ஒன்று சேர்வதற்கான சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் கூடி வந்திருக்கிறது. ஆனாலும் ஏதோ ஒரு கெட்ட நேரம் இருவரையும் சேரவிடாமல் தடுக்கிறது. மனைவி என்ன செய்ய வேண்டும்.

அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து கணவர் தன்னுடன் வந்து சேர்ந்து விட்டதாக மனதார கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்களை அறியாமலேயே உங்களுடைய முகத்தில் ஒரு மகிழ்ச்சி வரும். உதட்டில் ஒரு புன்னகை வரும் அல்லவா அந்த சமயத்தில் “786” என்ற நம்பரை மனதிற்குள்ளேயே சொல்லிக் கொள்ளுங்கள். கண்களை மூடி மனது சந்தோஷமாக இருக்கும் சமயத்தில், “என்னுடைய கணவரோடு நிச்சயம் ஒன்றாக சேருவேன்” என்ற நம்பிக்கையோடு இந்த நம்பரை 27 முறை சொன்னால் போதும் நிச்சயமாக நீங்கள், உங்கள் கணவரோடு சேரக்கூடிய பாக்கியம் கிடைக்கும்.

- Advertisement -

இதுபோல என்ன கோரிக்கையை நீங்கள் பிரபஞ்சத்திடம் வைத்து இந்த நம்பரை சொன்னாலும் சரி அந்த கோரிக்கை நிச்சயம் நடக்கும் அதில் எந்த சந்தேகமும் கிடையாது. பெரிய பெரிய விஷயங்களில் ஜெய்ப்பதற்கு, பெரிய பெரிய ஆசைகள் நிறைவேறுவதற்கு, தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் 10 நிமிடம் பிரார்த்தனை செய்து, கொண்டு இந்த நம்பரை கணக்கில்லாமல் சொல்லலாம் .

அதற்காக நடக்கவே நடக்காத ஒரு காரியத்தை மனதில் நினைத்து பார்த்து இந்த நம்பரை சொன்னால் அது நடக்குமா என்று கேட்டால் நிச்சயம் அது நடக்காது. அன்றாடம் 500 ரூபாய், ஆயிரமோ சம்பாதிக்க கூடிய ஒரு நபர், நான் நாளைய அம்பானி ஆகவேண்டும் என்று கேட்டால் அது சாத்தியமா. சாத்தியம் இல்லாத, இயற்கை அப்பாற்பட்ட விஷயங்களை எல்லாம் இந்த நம்பரோடு இணைத்து வைத்து சோதித்து பார்க்கக் கூடாது. நிச்சயம் நடக்காது.

இதையும் படிக்கலாமே: தரித்திரம் நீங்க விநாயகர் விளக்கு

உங்கள் மனசாட்சிக்கு உட்பட்டு உங்களுக்கு தேவையான விஷயங்களுக்கு மட்டும் இந்த மெத்தடை ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயம் உங்களுடைய அவசர பிரச்சனைகளை சரி, செய்ய இந்த நம்பர் உதவியாக இருக்கும். அவசர பண பிரச்சனைக்கு தீர்வு காணவும் இந்த நம்பரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்