- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval13-03-2025 குபேர பௌர்ணமி தீபம்

13-03-2025 குபேர பௌர்ணமி தீபம்

- Advertisement -

இன்றைய தினம் வியாழக்கிழமையோடு சேர்த்து பௌர்ணமி திதியும் வந்திருக்கிறது. இந்த நாள் அம்பாள் வழிபாடு செய்ய, எந்த அளவுக்கு உகந்த நாளோ, அதேபோல குபேரரை வழிபாடு செய்வதற்கும் மிக மிக உகந்த நாள். இன்று மாலை 6 மணிக்கு மேலாக நிலவு உதயமான பிறகு நீங்கள் செய்ய வேண்டிய ஒரு எளிமையான விளக்கு பரிகாரத்தை பற்றி தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

குபேர விளக்கு பரிகாரம்

உங்களுடைய வீட்டில் சாதாரணமாக மண் அகல் விளக்கு இருந்தாலும், இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லை எங்கள் வீட்டில் குபேர விளக்கே இருக்கிறது என்றால் ரொம்ப ரொம்ப சந்தோஷம். அந்த விளக்கை பயன்படுத்தி நீங்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். சின்னதாக பித்தளை தாம்பூல தட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு நெல்லிக்காய், ஒரு ஏலக்காய், கொஞ்சம் பச்சை கற்பூரம் வைத்து விடுங்கள்.

- Advertisement -

இதே தட்டில் குபேர விளக்கு அல்லது மண் அகல் விளக்கு வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி பச்சை நிற திரி போட்டு தீபம் ஏற்றி, நிலை வாசலில் வைக்க வேண்டும். இந்த தீபம் வடக்கு திசை நோக்கி எறிய வேண்டும். தீபச்சுடர் வடக்கு திசை நோக்கியவாறு இருக்கட்டும் இவ்வளவு தான் வழிபாடு. இன்று மாலை நிலை வாசலில் எந்த வீட்டில் எல்லாம் இந்த தீபம் இருக்கிறதோ அந்த வீட்டு நிலை வாசல் படியில் ஈசன் அம்பாள் குபேரர் வந்து அமர்ந்து கொள்வார்கள்.

உங்களுடைய வீட்டிற்குள் வருமை என்பது நுழையாது. இந்த விளக்கை ஏற்றி வைத்து அதன் மூலம் உங்களுடைய வீட்டிற்குள் அப்படியே பாசிட்டிவ் எனர்ஜி ஈர்க்கப்படும். தீபச்சுடரில் அனைத்து தெய்வங்களையும் ஆவாகனம் செய்து வேண்டிக் கொள்ளுங்கள். வீட்டிற்குள் மகாலட்சுமி வருகை தர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இன்றைய தினம் இந்த விளக்கை ஏற்றி வைத்தால் நிச்சயம் உங்கள் வீட்டில் சுபிட்சம் ஏற்படும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: செல்வ வளத்தை அதிகரிக்கும் மாசி பௌர்ணமி வழிபாடு

இன்று மாலை பௌர்ணமி நிலவை தரிசனம் செய்து, நிலை வாசலில் இந்த விளக்கை ஏற்றி, வீட்டிற்குள் மகாலட்சுமியை ஈசனை குபேரனை அழைக்க யாரும் தவற விடக்கூடாது என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்