- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வ வளத்தை அதிகரிக்கும் மாசி பௌர்ணமி வழிபாடு

செல்வ வளத்தை அதிகரிக்கும் மாசி பௌர்ணமி வழிபாடு

- Advertisement -

சந்திர பகவானின் ஆதிக்கம் அதிகமாக இருக்கக்கூடிய நாளாக தான் பௌர்ணமி நாள் திகழ்கிறது. அதுவும் சிறப்பு மிகுந்த மாதங்களில் வரக்கூடிய பௌர்ணமிக்கு அதிக அளவில் பலன் இருக்கிறது என்று கூட கூறலாம். ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய ஒவ்வொரு பௌர்ணமிக்கு ஒவ்வொரு விதமான சிறப்புகள் இருக்கின்றன. எந்த பௌர்ணமியாக இருந்தாலும் அன்று நாம் சந்திர பகவானையும் மகாலட்சுமி தாயாரையும் வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு அளவில்லா செல்வம் கிடைக்கும். அப்படிப்பட்ட ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மாசி பௌர்ணமி வழிபாடு

சந்திர பகவானும் மகாலட்சுமி தாயார் உடன் பிறந்தவர்கள் என்று புராணங்களில் கூறப்படுகிறது அதனால் சந்திரனின் ஆதிக்கம் அதிகம் இருக்கக்கூடிய பௌர்ணமி தினத்தில் மகாலட்சுமி தாயாரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வழிபாட்டின் பலன் என்பது நமக்கு விரைவிலேயே கிடைக்கும் என்று கூட கூறலாம். அப்படிப்பட்ட பௌர்ணமி தினங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த பௌர்ணமியாக மாசி பௌர்ணமி திகழ்கிறது. அதிலும் வியாழக்கிழமையோடு சேர்ந்து வருகிறது என்பதால் இதற்கு இன்னும் அதிக பலன் இருக்கிறது. வியாழக்கிழமை என்பது குபேர பகவானுக்குரிய கிழமை. மேலும் குபேர பகவானுக்குரிய நேரமான மாலை ஐந்து முப்பது மணிக்கு மேல்தான் முழு நிலவும் வானத்தில் தெரிய ஆரம்பிக்கும் என்பதால் அந்த நேரத்தில் நாம் மகாலட்சுமி தாயாரை பூஜை செய்யும் பொழுது நம்முடைய வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும்.

- Advertisement -

மாலை நேரத்தில் வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய மகாலட்சுமி தாயாரின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிதளவு மஞ்சள் தூள், சிறிதளவு குங்குமம், சிறிதளவு பச்சை கற்பூரம் இவற்றை சேர்த்து பன்னீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். கலந்து இந்த கலவையை உங்களுடைய மோதிர விரலில் எடுத்து கிழியாத நல்ல வெற்றிலையாக ஒரு வெற்றிலையில் சுவஸ்திக் சின்னத்தை வரைய வேண்டும். இந்த ஸ்வஸ்திக் சின்னம் வரைந்த வெற்றிலையை ஒரு சிறிய தாம்பாள தட்டில் வைத்து மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள்.

வீட்டில் வெள்ளி நாணயம் இருக்கும் பட்சத்தில் அந்த நாணயத்தை எடுத்து ஸ்வஸ்திக் சின்னத்தின் நடுவில் வைத்து விட வேண்டும். ஒருவேளை வெள்ளி நாணயம் இல்லை என்பவர்கள் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்துக் கொள்ளுங்கள். மகாலட்சுமி தாயாருக்கு வாசனை மிகுந்த மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். சிறிது வாசனை மிகுந்த மலர்களை ஸ்வஸ்திக் சின்னத்திற்கு மேல் இருக்கும் நாணயத்தின் மீதும் வைத்து விடுங்கள். இரண்டு நெய் தீபங்களை மகாலட்சுமி தாயார் முன்பாக ஏற்றி வைத்துவிட்டு சுத்தமான பசும்பாலை காய்ச்சி அதில் ஏலக்காய் மற்றும் கற்கண்டை போட்டு மகாலட்சுமிக்கு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு மகாலட்சுமி தாயாருக்குரிய அஷ்டகம், ஸ்தோத்திரம், 108 போற்றிகள் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை கூறி குங்குமத்தாலோ அல்லது வாசனை மிகுந்த மலர்களாலோ அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு தூப தீபம் காட்டி மகாலட்சுமி தாயாரை முழுமனதோடு வழிபாடு செய்ய வேண்டும். இப்பொழுது தாம்பாளத்தில் வைத்த வெற்றிலை நாணயத்தை எடுத்துக்கொண்டு அதனுடன் தூபம் மற்றும் தீபம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு எங்கு சந்திர பகவான் முழுமையாக தெரிகிறதோ அந்த இடத்திற்கு சென்று அங்கு வைத்து சந்திர பகவானுக்கும் தூப தீபம் காட்டி சந்திர பகவானை முழுமனதோடு வழிபாடு செய்ய வேண்டும்.

வழிபாடு செய்து முடித்த பிறகு நாம் எடுத்துச் சென்ற அந்த வெற்றிலை மற்றும் வெள்ளி நாணயத்தை அப்படியே சந்திர பகவானின் ஒளிபடும்படி வைத்துவிட்டு வந்து விட வேண்டும். மறுநாள் காலையில் சுத்தமாக குளித்து முடித்த பிறகு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு இரவு வைத்த இந்த நாணயத்தையும் வெற்றிலையும் எடுத்து வந்து மறுபடியும் பூஜையறையில் வைத்து முழு மனதோடு மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்துவிட்டு எந்த இடத்தில் பணத்தை வைத்து எடுக்கிறோமோ அந்த இடத்தில் அந்த வெற்றிலையையும் வெள்ளி நாணயத்தையும் வைத்துவிட வேண்டும். ஒன்று இரண்டு நாட்களில் வெற்றிலை வாடிவிடும் அப்பொழுது அதை மட்டும் தனியாக எடுத்து கால் படாத இடத்திலோ அல்லது செடிகளுக்கு அடியிலோ போட்டு விட வேண்டும். அந்த வெள்ளி நாணயம் அப்படியே பணம் இருக்கும் இடத்தில் இருக்கட்டும்.

இதையும் படிக்கலாமே: மாசி பௌர்ணமி குலதெய்வ வழிபாடு

இந்த முறையில் நாம் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருளையும் சந்திர பகவானின் அருளையும் பரிபூரணமாக பெற்று செல்வ வளத்துடன் வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்