இன்று பங்குனி மாதம் முதல் தேதி, சனிக்கிழமை அன்று பிறந்திருக்கிறது. சனிக்கிழமை என்றாலே பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த நாள். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. உங்களுடைய துன்பங்கள் தீர வேண்டும் என்று, மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, இன்று மாலை பெருமாள் முன்பு இந்த பொருளை நெய்வேதியமாக வைத்து வழிபாடு செய்து பாருங்கள்.
உங்களுடைய பண கஷ்டங்கள் எல்லாம் தீரும். மன கஷ்டங்கள் எல்லாம் தீரும். உறவுகளோடு ஒரு நல்லிணக்கம் உண்டாகும். பிரிந்திருக்கும் கணவன் மனைவிக்குள் ஒரு ஒற்றுமை ஏற்படும். பிரிந்த சகோதர உறவுகள் ஒன்று சேரும். குடும்ப ஒற்றுமை உண்டாகும். கடன் சுமை குறையும். இப்படி பலதரப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஒரு எளிய ஆன்மீகம் சார்ந்த வழிபாடு.
சனிக்கிழமை பெருமாள் வழிபாடு
கொஞ்சம் கருப்பு எள்ளு கடாயில் போட்டு வறுத்துக்கொள்ளுங்கள். வறுத்த எள்ளை ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் தூள் செய்த வெல்லம், அல்லது நாட்டு சர்க்கரை ஏதேனும் போட்டு நன்றாக பிசைந்து பெருமாள். வீட்டு பூஜை அறையில் இருக்கும் பெருமாள் முன்பாக இந்த பிரசாதத்தை நைவேத்தியமாக வைத்து வீட்டிலேயே வழிபாட்டை செய்யலாம்.
பெருமாளுக்கு முன்பு பஞ்சபாத்திரத்தில் கொஞ்சம் துளசி இலைகளை போட்டு தீர்த்தத்தை தயார் செய்து வையுங்கள். துளசி இலை இல்லை என்றால் ஒரு ஏலக்காய் அல்லது பச்சை கற்பூரம் போட்டு கூட தீர்த்தம் தயார் செய்யலாம். தவறு கிடையாது. இப்படி வாசனை நிறைந்த தீர்த்தத்தை பெருமாள் முன்பு வைத்து, செய்து வைத்திருக்கும் வெல்லம் எள்ளு சேர்த்த கலவையை பெருமாள் முன்பு வைத்துவிட்டு, வேண்டிய வரங்களை பெருமாளிடம் கேளுங்கள்.
கோவிந்தா கோவிந்தா ! என்ற கோஷத்தை குடும்பத்தோடு உச்சரிப்பது மிகவும் நல்லது. எப்போதும் போல வீட்டில் விளக்கு ஏற்றி நெய்வேத்தியம் செய்து பெருமாளை வழிபாடு செய்து கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். இந்த எளிமையான பூஜையை முடித்துவிட்டு அந்த பிரசாதத்தை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பகிர்ந்து உண்ணலாம்.
இன்று சனிக்கிழமை பங்குனி மாதம் முதல் நாள் பெருமாளுக்கு எள்ளு வெல்லம் சேர்த்து நெய்வேத்தியம் வைத்தால் உங்களுடைய சங்கடங்கள் நிச்சயம் தீரும். பெரிய பெரிய கிரகங்களால் பெரிய பெரிய தோஷத்தால் நீங்கள் எதிர்கொண்டு வரும் துன்பங்கள் விலகும். குறிப்பாக சனி பகவான் உங்களுக்கு ஏதேனும் ஜாதக ரீதியாக தொந்தரவுகளை கொடுத்து வந்தாலும், அந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட இந்த வழிபாடு கைமேல் பலனை கொடுக்கும்.
இதையும் படிக்கலாமே: சனி தோஷம் விலக சிவ நாமம்
உங்களால் முடிந்தால் இன்று மாலை வீட்டு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் அனுமனுக்கு முன்பாக விளக்கு போட்டு வேண்டி ஹனுமனை மூன்று முறை வலம் வர வேண்டும். “ஜெய் ஸ்ரீ ராம்” நாமத்தை சொல்லி இன்றைய தினம் அனுமனை நீங்கள் வளம் வந்தால் உங்கள் பணக்கஷ்டம் உடனடியாக தீரும். இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.