- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசனி தோஷம் விலக சிவ நாமம்

சனி தோஷம் விலக சிவ நாமம்

- Advertisement -

வாழ்க்கையில் செய்த பாவத்தை கண்டு பயப்படுகின்றோமோ இல்லையோ, இந்த ஏழரை சனி காலம் வந்துவிட்டால் போதும். நமக்கான பயம் வந்து விடுகிறது. நேர்மையாக வாழ்ந்தால் இதற்கு பயப்பட வேண்டும். சோதனைகளைக் கொடுக்கும் சனி பகவான், நேர்மையாக இருப்பவர்களுக்கு எப்போதுமே சங்கடத்தை கொடுக்க மாட்டார். எப்போதும் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்.

அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்காதீர்கள். என்னதான் சொன்னாலும், இந்த சனி பகவான் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஏதாவது ஒரு வழி இருக்கா சொல்லுங்களேன். ஒரு வழி அல்ல. பல வழிகள் இருக்கிறது. அதில் ஒரு சில ஆன்மீகம் சார்ந்த சக்தி வாய்ந்த பரிகாரங்களை தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

சனியின் தாக்கம் குறைய பரிகாரம்

சிவபெருமானுக்கு பல பெயர்கள் உண்டு. அதில் “திருநீலகண்டம்” என்ற பெயரை திரும்பத் திரும்ப நீங்கள் சொல்லிக் கொண்டே இருந்தால், சனி பகவான் உங்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகளை கொடுக்கவே மாட்டார். உங்களுக்கும் ஜாதகத்தில் சனி பகவானால் பிரச்சினை இருந்தால், இன்றிலிருந்து இந்த நாமத்தைச் சொல்லிக் கொண்டே, பின் சொல்ல கூடிய பரிகாரங்களில், உங்களால் எது முடியுமோ அதை செய்து வாருங்கள்.

நிச்சயமாக சனி பகவான் உங்களுக்கு பெரிய கஷ்டத்தை தரவே மாட்டாருங்க. அனுபவரீதியாக இதை நீங்கள் உணருவீர்கள். உங்களுக்கு இப்போது சனி பகவானால் பெரிய பாதிப்பு இருக்கிறது என்றால், இன்று முதல் இதில் ஏதாவது ஒரு விஷயத்தை தொடங்கினாலே, இன்று முதல் உங்களுக்கு விடிவு காலம் பிறக்கும். அவ்வளவு பவர்ஃபுல்லான பரிகாரங்கள் இவை.

- Advertisement -

முதலில் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். கால் இல்லாமல் சில பேர் இருப்பார்கள். இப்போது செயற்கை முறையில் உறுப்புகளை வாங்கி பொருத்திக் கொள்வதற்கு வசதிகள் இருக்கிறது. கால் இல்லாமல் அவதிப்படும் யாரேனும் ஒருவருக்கு செயற்கை கால் பொருத்த நீங்கள் நிதி உதவி செய்து பாருங்கள். அல்லது அந்த மூன்று சக்கர வண்டி வாங்கி தானம் கொடுத்தால், உங்களுடைய பணக்கஷ்டம் உடனடியாக தீரும். கடன் சுமையிலிருந்து நீங்கள் உடனடியாக வெளிவரலாம்.

தினமும் நடைபயிற்சி மேற்கொண்டு உங்கள் உடல் முழுவதும் வேர்த்து கொட்டினால் சனி பகவான் உங்களை எதுவுமே செய்ய மாட்டார். குளிக்கும் தண்ணீரில் கொஞ்சம் கல் உப்பு போட்டு அந்த தண்ணீரை கிளாக் வைஸ் சுற்றி கல்லுப்பை கரைத்து விட வேண்டும். இந்த தண்ணீரில் குளிக்க வேண்டும்.

- Advertisement -

இந்த தண்ணீரை உடம்பு மீது ஊற்றி தேய்த்துக் குளிக்கும் போது, வலது காலை வலது கையால் தேய்த்து சுத்தம் செய்து குளிக்கவும். இடது காலை, இடது கை கொண்டு தேய்த்து சுத்தம் செய்து குளிக்க வேண்டும். கால்களை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் கொஞ்சம் கூடுதலாக சொல்லப் போனால் குளிக்கின்ற தண்ணீரில் நீல நிற சங்கு பூ போட்டு குளிப்பது மிக மிக நல்லது.

இதையும் படிக்கலாமே: பண வசியத்தை ஏற்படுத்தும் பங்குனி முதல் நாள் பரிகாரம்

திருநீலகண்டம் என்ற பெயரைச் சொன்னால் சனிபகவான் பிரச்சனை கொடுக்க மாட்டார் என்று முதலிலேயே பார்த்துவிட்டோம். இந்த சிவபெருமானின் அவதாரமான மகா காலபைரவரை வழிபாடு செய்பவர்களையும் சிவபெருமான் எதுவும் செய்ய மாட்டார். மகா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருங்கள். காலத்தால் வரும் கஷ்டங்கள் நீங்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்