- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதிங்கட்கிழமை சொல்ல வேண்டிய சிவ மந்திரம்

திங்கட்கிழமை சொல்ல வேண்டிய சிவ மந்திரம்

- Advertisement -

மனிதனுடைய மனது எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. சில நாட்கள் அந்த மனது சந்தோஷமாக இருக்கும். சில நாட்கள் எப்போதும் கவலையாக இருக்கும். கவலையை எண்ணி வருத்தப்பட்டு கொண்டே இருக்கும். இந்த வருத்தத்தினால் கவலையினால் நம்முடைய அன்றாட வேலை சரியாக நடக்காது. வேலையில் பின்னடைவு வியாபாரத்தில் பின்னடைவு, சுறுசுறுப்பு இல்லாமல், சோம்பல் வந்து நம்மை பிடித்துக் கொள்ளும்.

இதனால் குடும்பத்திலும் சந்தோஷம் குறையும். மனது எதையோ போட்டு குழப்பிக் கொள்கிறது. இந்த நாள் சரியாகவே இல்லை என்னதான் செய்வது? இப்படி மனம் சம்பந்தப்பட்ட குழப்பங்கள் உங்களுக்கு இருக்கிறது எனும் பட்சத்தில், வாரம் தோறும் வரக்கூடிய திங்கட்கிழமை அன்று ஈசனை வழிபட்டால் மனம் எப்போதும் தெளிவாக இருக்கும்.

- Advertisement -

அதிலும், பின் சொல்ல கூடிய முறைப்படி வழிபாடு செய்து பாருங்கள். எப்போதுமே உங்களுடைய மனது தெம்போடும் தைரியத்தோடும் இருக்கும். கவலை என்ற பள்ளத்திற்குள் விழவே மாட்டீங்க. குறிப்பாக சோர்ந்து போய் துவண்டு போய் ஒரு இடத்தில் முடங்கி அமரவே மாட்டீங்க. இந்த சுறுசுறுப்பும் உற்சாகமும் இருந்து விட்டால் வாழ்க்கையில் சுலபமாக ஜெயித்து விடலாம் அல்லவா.

இதோடு மட்டுமல்லாமல் சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்பவர்களுடைய வாழ்க்கையில் இருக்கும் பாவக்கணக்குகளும் குறையும். புண்ணிய கணக்குகள் சேர துவங்கும். திங்கட்கிழமை காலையில் எல்லோருடைய வேலையும் பரபரப்பாக துவங்கும். கொஞ்சம் முன்கூட்டியே எழுந்து, குளித்து முடித்துவிட்டு, வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு செல்லுங்கள். காலை நேரத்தில் செல்வதுதான் ரொம்ப ரொம்ப நல்லது. மனதிற்கு இதமாகவும் இந்த வழிபாடு உங்களுக்கு இருக்கும். சிவன் கோவிலுக்கு சென்றவுடன் கொடிமரம் இருக்கும். பலிபீடம் இருக்கும் அல்லவா. அந்த இடத்தில் முதலில் நில்லுங்கள்.

- Advertisement -

சிவ மந்திரம்

“அப்பனே ஈசனே உன்னை நம்பி தான் நான் வந்திருக்கிறேன்” எனக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல வழி காட்டு என்று சொல்லிவிட்டு “ஓம் நமோ நமச்சிவாய” என்ற மந்திரத்தை 9 முறை சொல்லிவிட்டு பிறகு கோவிலுக்குள் செல்லுங்கள். நந்தி பகவான் அமர்ந்திருப்பார். சிவனை பார்ப்பதற்கு எனக்கு கொஞ்சம் அனுமதி தாரும் ஐயா என்று, கேட்டு கோவிலுக்குள் சென்று, சிவனை கண் குளிர பார்த்து, ஆரத்தி வாங்கிக் கொள்ளுங்கள்.

உங்களால் முடிந்த தட்சணையை தட்டில் போட்டுவிட்டு, ஈசனிடம் இரண்டு நிமிடம் பேசுங்கள். நண்பர்களோடு பேசுவது போல பிரச்சினைகளை சொல்லலாம் தவறு ஒன்றும் கிடையாது. உங்களால் முடிந்த பொருளை ஈசனுக்கு வாங்கிக் கொண்டு போய் கொடுக்கலாம் அதிலும் தவறு கிடையாது. பிறகு அந்த சிவன் கோவிலை மூன்று முறை வலம் வந்து இரண்டு நிமிடம் சிவன் கோவிலில் எதுவுமே நினைக்காமல் அமைதியாக அமருங்கள்.

இதையும் படிக்கலாமே: நல்ல வேலை கிடைக்க ஆஞ்சநேயர் வழிபாடு

“ஓம் ஓம்” என்று மனதிற்குள் சொல்லிக் கொள்ளலாம் தவறு கிடையாது. பிறகு வீட்டிற்கு வாருங்கள். அன்றாட வேலையை துவங்குங்கள். அந்த வாரம் முழுவதும் உங்களுக்கு தேவையான எனர்ஜி கிடைத்துவிடும். அந்த வாரத்திற்கு தேவையான ரீசார்ஜ் சிவன் கோவிலில் இருந்து கிடைத்துவிடும். பம்பரம் போல சுழன்று சுழன்று அந்த வாரத்தை நீங்கள் நகர்த்திச் செல்வீர்கள். கஷ்டம் வராது என்று சொல்லவில்லை. வரக்கூடிய கஷ்டங்கள் பெரிய சுமையை தராது. அதுதானே வேண்டும். இந்த எளிய ஆன்மீகம் சார்ந்த வழிபாடு அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்