நாம் ஒவ்வொருவரும் பணத்தை சம்பாதிப்பதற்கு ஏதாவது ஒரு வழியை தேர்வு செய்து இருப்போம். அதில் பலரும் தேர்வு செய்யக்கூடிய ஒரு வழிதான் வேலைக்கு செல்வது. வேலை கிடைப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. நாம் என்ன படித்திருக்கிறோமோ அதற்கு ஏற்றார் போல் வேலை கிடைக்க வேண்டும். அப்படி இல்லை என்று எனில் நாம் படித்த படிப்பிற்கு சம்பந்தம்இல்லாத வேலைக்கு சேருவோம். அதேபோல் நாம் சேரக்கூடிய வேலையில் நாம் செய்யக்கூடிய செயலை பொறுத்து சம்பளம் கிடைப்பதும் அரிதான ஒன்றாகவே திகழ்கிறது. பலரும் கடினமாக உழைத்தும் அந்த உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காமல் கஷ்டப்படுவார்கள். இப்படி வேலை தொடர்பாகவும் சம்பளம் தொடர்பாகவும் இருக்கக்கூடிய பிரச்சினைகள் தீர்வதற்கு ஆஞ்சநேயரை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
என்றும் சிரஞ்சீவியாக திகழக்கூடியவர்களுள் ஒருவராக திகழ்பவர் தான் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயரை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம் மனதில் தைரியம் உண்டாகும், ஒரு புதுவிதமான ஆற்றல் நமக்குள் ஏற்படும். மேலும் ஆஞ்சநேயரை நாம் வழிபாடு செய்வதன் மூலம் எதிரிகளின் தொல்லை நீங்குவதோடு தடைகளும் தடங்கல்களும் நீங்கும் என்றே கூறப்படுகிறது. எப்படி விநாயகரை வழிபாடு செய்தால் காரிய வெற்றி உண்டாகுமோ, அதேபோல் ஆஞ்சநேயரை வழிபாடு செய்தாலும் நமக்கு காரிய வெற்றி உண்டாகும். அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை வேலை தொடர்பான வேண்டுதல் நிறைவேற்றுவதற்கு செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறையை தெரிந்து கொள்வோம்.
ஆஞ்சநேயருக்கு உகந்த கிழமையாக திகழ்வது வியாழக்கிழமையும் சனிக்கிழமையும். இந்த இரண்டு நாட்களிலும் ஆஞ்சநேயரை நாம் வழிபாடு செய்யலாம். அதிலும் குறிப்பாக சனிக்கிழமை வழிபாடு செய்யும்பொழுது நமக்கு அதீத பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அன்றைய தினத்தில் காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு அருகில் ஆஞ்சநேயர் சன்னதி எங்கே இருக்கிறது அந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது ஆஞ்சநேயருக்கு துளசி மாளிகை வாங்கி கொடுக்க வேண்டும்.
இப்படி வாங்கிக் கொடுத்துவிட்டு ஆஞ்சநேயருக்கு முன்பாக ஒரே ஒரு கற்பூரத்தை ஏற்றி வைத்து உங்கள் வேலை தொடர்பான வேண்டுதலை முன்வைக்க வேண்டும். இப்படி முன் வைத்துவிட்டு 9 முறை ஆஞ்சநேயரை “ஸ்ரீ ராமா ஸ்ரீ ராமா” என்று கூறிக் கொண்டே வலம் வந்து வணங்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக நாம் சனிக்கிழமை தோறும் கற்பூரத்தை ஏற்றி வைத்து ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வேலை தொடர்பான வேண்டுதலை முன் வைக்கும் பொழுது அந்த வேண்டுதலை ஆஞ்சநேயர் விரைவிலேயே நிறைவேற்றுவார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:கேட்ட வரம் அருளும் மாசி வளர்பிறை பிரதோஷம்
எவ்வளவு செலவு செய்து இறைவனை வழிபாடு செய்கிறோம் என்பதை விட எந்த அளவிற்கு முழுமனதோடு வழிபாடு செய்கிறோம் என்பதே முக்கியம். அந்த வகையில் இந்த எளிமையான வழிபாட்டு முறையை முழு மனதோடு ஆஞ்சநேயரை நினைத்து செய்பவர்களுக்கு வேலை தொடர்பான அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.