- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅதிர்ஷ்டசாலியாக மாற செய்ய வேண்டிய தானம்

அதிர்ஷ்டசாலியாக மாற செய்ய வேண்டிய தானம்

- Advertisement -

பங்குனி மாதம் என்பது மங்களகரமான மாதம். இந்த மாதத்தில் முருகப்பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திரம் வருகிறது. இந்த பங்குனி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது. அந்த வகையில் பங்குனி ஞாயிற்றுக்கிழமை நாம் இந்த ஒரு தானத்தை செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய துரதிஷ்டம் அனைத்தும் நீங்கி அதிர்ஷ்டம் உண்டாகும். அந்த தானத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

அதிர்ஷ்டசாலியாக மாற தானம்

நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டத்திற்கு முக்கியமான காரணமாக திகழ்வது நம்முடைய கர்ம வினைகள் தான். நாம் செய்த பாவங்கள் புண்ணியத்திற்கு ஏற்றார் போல் தான் நம்முடைய வாழ்க்கையும் அமையும். நாம் இப்பொழுது கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் நாம் தான். நாம் முற்பிறவியில் செய்த கர்ம வினைகளின் அடிப்படையில் தான் இந்த பிறவியில் பிறப்பெடுத்து இந்த கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த கர்ம வினைகளை நீக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களால் இயன்ற தான தர்மத்தை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் கர்ம வினைகள் குறைந்து மீண்டும் பிறவா நிலை ஏற்படும். நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த வாழ்க்கையில் நன்மைகளும் உண்டாகும்.

- Advertisement -

அப்படி நாம் செய்யக்கூடிய தான தர்மத்திற்கு கர்ம வினைகளை நீக்குவதோடு இன்னும் வேறு பலன்களும் கிடைக்கும். எந்த பொருளை நாம் தானமாக தருகிறோம் என்பதை பொறுத்தும் பலன்கள் கிடைக்கும். யாருக்கு தானமாக தருகிறோம் என்பதை பொருத்தும் பலன்கள் மாறுபடும். எந்த நாளில் தானம் தருகிறோம் என்பதை பொருத்தும் பலன்கள் மாறுபடும். அந்த வகையில் நம்மிடம் இருக்கக்கூடிய துரதிஷ்டத்தை நீக்குவதற்கும் அதிர்ஷ்டத்தை பெருக்குவதற்கும் பங்குனி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு தானத்தை நாம் செய்ய வேண்டும். அந்த தானத்தை பற்றி தெரிந்து கொள்வோமா?

அந்த தானம் தான் ஆடை தானம். அதாவது புதிதாக ஒரு சட்டையை வாங்கி தானமாக தர வேண்டும். ஆண்கள் அணியக்கூடிய ஒரு சட்டை. இந்த சட்டையின் நிறம் வெள்ளை நிறமாக இருக்க வேண்டும். இந்த சட்டையை யாருக்கு தானம் தர வேண்டும்? நிலத்தில் வேர்வை சிந்தி உழைக்கும் விவசாயிக்கு தானம் தர வேண்டும். ஒரு வேளை தங்கள் வீட்டின் அருகில் விவசாயிகள் இல்லை என்றால் மண் பானை செய்பவர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு இந்த வெள்ளை சட்டையை தானமாக தரலாம்.

- Advertisement -

பங்குனி ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு காலம், எமகண்ட நேரத்தை மட்டும் தவிர்த்து விடுங்கள். முடிந்த அளவிற்கு குளிகை நேரத்தை பயன்படுத்துங்கள். இயலாத பட்சத்தில் மற்ற நேரங்களில் கூட இந்த தானத்தை நாம் செய்யலாம். ஒரே ஒரு நபருக்கு ஒரே ஒரு சட்டையை வாங்கி தானம் செய்தால் கூட இனிமேல் வரக்கூடிய நாட்களில் நம்மிடம் இருக்கக்கூடிய துரதஷ்டம் விலகி அதிர்ஷ்டம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:நல்ல வேலை கிடைக்க ஆஞ்சநேயர் வழிபாடு

தங்களால் இயன்ற தான தர்மத்தை முழுமனதோடு முழு நிறைவோடு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி செய்யும் பொழுது அந்த தான தர்மத்திற்கு பலன்கள் அதிகரிக்கும். அந்த வகையில் பங்குனி ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த தானத்தை செய்து வாழ்க்கையில் இருக்கக் கூடிய துரதிஷ்டத்தை நீக்கி அதிர்ஷ்டத்தை பெருக்கிக் கொள்ளலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்