ஜோதிட ரீதியாக சந்திரனை மனோகாரகன் என்று சொல்லுவார்கள். நம்முடைய மனது தெளிவாக இருப்பதற்கும், குழம்புவதற்கும் காரணம், இந்த சந்திர பகவான் தான். வாழ்க்கையில் நமக்கு தேவையான முடிவுகளை குழப்பம் இல்லாமல் சரியாக எடுத்தாலே நம்முடைய வாழ்க்கை பயணம் சரியாக இருக்கும். அதற்கு நம்முடைய மனது எப்போதும் தெளிவாக இருக்க வேண்டும். அதற்கு சந்திர பகவானின் துணை எப்போதும் நமக்குத் தேவை.
இந்த சந்திர பகவானுக்கு உரிய திங்கட்கிழமையோடு, சங்கடஹர சதுர்த்தி சேர்ந்து வந்திருக்கிறது. விநாயகர் வழிபாடும் திங்கட்கிழமை அன்று செய்வதுதான் சிறப்பு என்று சொல்லப்பட்டுள்ளது. ஆக மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் தீர, மனதில் இருக்கும் சங்கடங்களும் தீர வேண்டும் என்றால், நாளைய தினம் விநாயகரை எப்படி வழிபாடு செய்யலாம். விநாயகர் கோவிலுக்கு எந்த இரண்டு பொருட்களை வாங்கி தானமாக கொடுக்கலாம் ஆன்மீகம் சார்ந்த எளிய பரிகாரம் இந்த பதிவில் உங்களுக்காக.
திங்கட்கிழமை சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
நாளை 17-03-2025 திங்கட்கிழமை சங்கடஹர சதுர்த்தி. நாளை காலை கண்விழித்ததும் விநாயகரை முதலில் பாருங்கள். “ஓம் கணபதியே போற்றி போற்றி” என்ற மந்திரத்தை மூன்று முறை சொல்லிவிட்டு, பிறகு அன்றாட வேலையை துவங்குங்கள். விரதம் இருக்க முடியும் என்றால் இந்த நாளில் விரதம் இருந்து, திங்கள்கிழமை மாலை நேரத்தில் விநாயகரை வழிபாடு செய்யலாம். வீட்டில் இருந்தும் வழிபாடு செய்யலாம். கோவிலுக்கு சென்றும் வழிபாடு செய்யலாம்.
ஆனால் மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனை தீர, கோவிலுக்கு சென்று தான் இந்த இரண்டு பொருட்களையும் நீங்கள் விநாயகர் சன்னதியில் இருக்கும் குருகளுக்கு தானமாக கொடுக்க வேண்டும். பச்சரிசி வெல்லம். 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ வெல்லம், வாங்கி விநாயகர் கோவிலில், அர்ச்சகரிடம் இந்த இரண்டு பொருட்களை தானமாக கொடுத்தாலே போதும். உங்களுடைய மனது சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.
எப்போதுமே குழப்பத்தில் குழம்பிப் போய் தெளிவில்லாமல் திரிந்து கொண்டிருப்பவர்கள், உற்சாகத்தோடு மனசு சுத்தத்தோடு, குழப்பமில்லாமல் தெளிவான முடிவை எடுக்க தயாராகி விடுவீர்கள். எளிமையான பரிகாரம் இது. தொடர்ந்து 9 திங்கட்கிழமைகள் இந்த தானத்தை கொடுத்தால் தான் பரிகாரம் பளிக்கும்.
ஆனால் திங்கட்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் சங்கட சதுர்த்தி அன்று ஒருமுறை இந்த இரண்டு பொருளை தானமாக கொடுத்தாலே, உங்கள் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று சொல்கிறது நம்முடைய சாஸ்திரம். நம்பிக்கை இருந்தால் நாளைய தினத்தை தவறவிடாமல் இந்த ஒரு தானத்தை செய்யுங்கள். உங்களுக்கு நாளை எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போ இந்த தானத்தை கொடுத்து விடுங்கள். காலை மாலை என்ற எந்த நேரமும் பார்க்க தேவை கிடையாது.
நாளை மாலை சந்திரம் உதயமான பிறகு சந்திர தரிசனத்தை பெற்று விட்டு விநாயகருக்கு இரண்டு அருகம் புல் வைத்து வீட்டிலேயே விளக்கு ஏற்றலாம். கோவிலுக்கு செல்வதாக இருந்தாலும் நாளை மாலை கோவிலுக்கு சென்று விநாயகருக்கு விளக்கு போட்டு அருகம்புல் சாத்தி சூரை தேங்காய் உடைத்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: எதிரிகள் தொல்லை நீங்க காலபைரவர் வழிபாடு
உங்களால், கொழுக்கட்டை செய்து விநாயகருக்கு நெய்வேத்தியம் வையுங்கள். முடியவில்லை முடியவில்லை என்றால் இரண்டு வாழைப்பழம் நெய்வேத்தியம் செய்யுங்கள். இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரம் அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.