உக்கிர தெய்வங்களின் வரிசையில் மிகவும் முக்கியமான இடத்தை பிடிக்கக் கூடியவராக இருப்பவர்தான் காலபைரவர். காலபைரவரை நாம் வழிபாடு செய்தோம் என்றால் நம் வாழ்க்கையில் இருக்கக் கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் தீரும் என்று கூறப்படுகிறது. மேலும் நம்மை காக்கும் காவல் தெய்வமாகவே நம் உடனையே இருப்பார் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் அவருக்கு வாகனமாக நம் வீட்டை காக்கும் நாய் இருக்கிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த கால பைரவரை செவ்வாய்க்கிழமை அன்று எப்படி வழிபட்டால் எதிரிகளின் தொல்லை நீங்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
காலபைரவர் வழிபாடு
கால பைரவரை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக அஷ்டமி திதி திகழ்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அனுதினமும் நம் கால பைரவரை வழிபாடு செய்யலாம் நம்முடைய வேண்டுதலுக்கு ஏற்றார் போல் எந்த கிழமையில் எப்படி வழிபட வேண்டும் என்பதுதான் சூட்சுமமான முறை. அந்த வகையில் நமக்கு இருக்கக்கூடிய எதிரிகளின் தொல்லை முற்றிலும் நீங்க வேண்டும் என்றால் நாம் செவ்வாய்க்கிழமை தோறும் காலபைரவரை வழிபாடு செய்ய வேண்டும்.
இந்த வழிபாட்டை ஆரம்பிக்க கூடிய செவ்வாய்க்கிழமை அன்று உங்களுடைய நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் கரிநாள் இல்லாத செவ்வாய்க்கிழமையாக இந்த வழிபாட்டை செய்ய ஆரம்பிக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய பைரவரின் சன்னதிக்கு சென்று அவருக்கு சிவப்பு குங்குமம் கலந்த நீரினால் அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு அவருக்கு ஒற்றைப்படை எண்ணிக்கையில் எலுமிச்சம் பழம் மாலையை உங்கள் கைகளாலேயே கோர்த்து அணிவிக்க வேண்டும். இதோடு சேர்த்து சிவப்பு நிற மலர்களால் மாலை அணிவிக்க வேண்டும்.
கால பைரவருக்கு புனுகு மிகவும் விருப்பமான ஒன்று. அதனால் கால பைரவரை வழிபாடு செய்யும்பொழுது கண்டிப்பான முறையில் புனுகு வாங்கி தர வேண்டும். பிறகு எலுமிச்சம் பழத்தில் இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து காலபைரவரை வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினம் அவருக்கு பீட்ரூட் சாதம், மாதுளம் பழம், ஜிலேபி போன்றவற்றில் எது உங்களால் நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய முடியுமோ அதை வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
பிறகு உங்களுடைய பெயருக்கு அர்ச்சனை செய்து எதிரிகள் தொல்லை நீங்க வேண்டும் என்று வழிபாடு செய்ய வேண்டும். பிறகு நெய்வேத்தியமாக வைத்த பிரசாதத்தை அங்கு வரும் பக்தர்களுக்கு தர வேண்டும். இந்த முறையில் வழிபாடு செய்ய கால பைரவரின் அருளால் உங்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்ப்புகளும் அகன்று வெற்றிகள் உங்களைத் தேடி வரும். இந்த வழிபாட்டை குறிப்பிட்டு இத்தனை வாரங்கள் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. தங்களுடைய மனநிறைவிற்கு ஏற்ப தாங்களே இத்தனை வாரம் செய்கிறோம் என்று சங்கல்பத்தை முன்வைத்து இந்த வேண்டுதலை செய்ய வேண்டும்.
இதையும் படிக்கலாமே:பண கஷ்டத்தை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வமாக திகழக்கூடிய கால பைரவரை இந்த முறையில் நாம் வழிபாடு செய்யும்பொழுது எதிரிகளாலும் கிரகங்களாலும் நமக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள் முற்றிலும் நீங்கி வெற்றிகள் நம்மை தேடி வரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.