- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதரித்திரம் நீக்கும் தேய்பிறை அஷ்டமி பரிகாரம்

தரித்திரம் நீக்கும் தேய்பிறை அஷ்டமி பரிகாரம்

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் தரித்திரம் என்பது வந்துவிட்டால் அனுபவிக்க முடியாத அளவிற்கு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இந்த தரித்திரத்தை நீக்கினால் தான் நமக்கு செல்வம் வீட்டிற்குள் வரவே ஆரம்பிக்கும். தரித்திரத்தை நீக்குவதற்கு பல வழிபாட்டு முறைகள் இருந்தாலும் சில தாந்த்ரீக பரிகாரங்கள் விரைவிலேயே பலனைத் தரும். அப்படி செய்யக்கூடிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

இன்று தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு உகந்த நாள். இன்றைய நாளில் பைரவரை நினைத்து நாம் செய்யக்கூடிய இந்த ஒரு தாந்திரீக பரிகாரம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய தரித்திரம் அனைத்தையும் நீக்கி செல்வ வளத்தை வழங்கும் என்றே கூற வேண்டும். அப்படிப்பட்ட தாந்த்ரீக பரிகாரத்தை முழுமனதோடு இன்று இரவு படுக்கச் செல்வதற்கு முன் பைரவரை மனதார நினைத்து செய்தாலே போதும்.

- Advertisement -

இந்த தாந்த்ரீக பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு புள்ளிகள் இல்லாத நல்ல எலுமிச்சம் பழமாக ஒரு எலுமிச்சம் பழம் வேண்டும். அதை சரிசமமாக நறுக்கிக் கொள்ளுங்கள். நறுக்கிய இந்த எலுமிச்சம் பழத்தின் மீது தூள் உப்பை நன்றாக தடவ வேண்டும். எப்படி நாம் மஞ்சள் குங்குமத்தை எலுமிச்சம் பழத்தின் மேல் வைப்போம், அதே போல் தூள் உப்பை வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒவ்வொரு பக்கத்திற்கும் ஐந்து என்ற வீதம் கிராம்பை அதில் குத்தி வைக்க வேண்டும்.

இப்படி குத்தி வைத்த இந்த எலுமிச்சம் பழத்தை இரவு படுக்கச் செல்வதற்கு முன் வீட்டு நிலை வாசலில் இரண்டு புறங்களிலும் வைத்து விட வேண்டும். பிறகு நாம் எப்பொழுதும் போல் கதவை சாத்திவிட்டு படுத்து உறங்கலாம். மறுநாள் காலை அதாவது நாளை காலை எழுந்ததும் எந்த நேரத்தில் எழுந்து கதவை திறக்கிறோமோ அப்பொழுது இந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து வீட்டிற்கு வெளியே எறிந்து விட வேண்டும். பிறகு வீட்டிற்குள் வந்து குளித்து விடவேண்டும். வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் குளிக்க வேண்டும்.

- Advertisement -

ஒருவேளை சிறு குழந்தைகள் வயதானவர்கள் இருக்கிறார்கள் என்னும் பட்சத்தில் அவர்கள் முகத்தை கழுவி தலையில் மூன்று முறை தண்ணீரை தெளித்தால் போதும். இப்படி செய்வதன் மூலம் பைரவரின் அருளால் நம் வீட்டில் இருக்கக்கூடிய தரித்திரம் அனைத்தும் அந்த எலுமிச்சம் பழத்தின் இறங்கி அது நம்மை விட்டு விலகிச் செல்லும். தரித்திரம் விலகி விட்டாலே மகாலட்சுமி வீட்டிற்குள் வந்து விடுவார்கள் அல்லவா? மகாலட்சுமி வீட்டிற்குள் வந்து விட்டால் செல்வ வளம் பெருக ஆரம்பிக்கும், நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்துமே நீங்கும்.

இதையும் படிக்கலாமே:24/3/2025 சீதாதேவி விரதம்

இந்த எளிமையான தாந்திரீக பரிகாரத்தை முழுமனதோடு பைரவரை நினைத்துக் கொண்டு இன்று இரவு செய்பவர்களுக்கு அவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய தரித்திரம் முற்றிலும் நீங்கி செல்வ வளத்துடன் வாழ முடியும் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்