ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சருமம் இருக்கும். அந்த சருமத்திற்கு ஏற்றார் போல் நாம் பயன்படுத்தக்கூடிய ஃபேஸ் பேக், கிரீம் போன்றவற்றை தேர்வு செய்ய வேண்டும். ஒரு வேளை மாற்றி தேர்வு செய்து விட்டோம் என்றால் நம்முடைய சருமத்திற்கு பலவிதமான பாதிப்புகள் உண்டாகும். அதனால் ஒவ்வொரு முறையும் நம்முடைய சருமத்தை பாதுகாப்பதற்காக நாம் மேற்கொள்ளக்கூடிய எந்த முயற்சியாக இருந்தாலும் அதில் கண்டிப்பாக முறையில் நம்முடைய சருமத்தின் வகையை பொறுத்து பொருட்களை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். இன்னும் சில பொருட்கள் இருக்கின்றன. இவை எந்த வகையான சருமமாக இருந்தாலும் அதற்கு பொருத்தமாக அமையும். அப்படிப்பட்ட பொருட்களை பயன்படுத்தி தயாரிக்க கூடிய ஒரு ஃபேஸ் பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
முகத்தை கழுவிய பிறகு முகம் புத்துணர்ச்சியுடன் திகழும். ஆனால் முகம் கழுவி சிறிது நேரம் ஆனவுடன் முகத்தில் ஒருவித சோர்வு உண்டாகிவிடும். கலை இழந்து காணப்படும். அப்படிப்பட்ட முகத்தை கலையுடனும், புத்துணர்ச்சியுடனும், பிரகாசமாகவும் மாற்றுவதற்கு வீட்டில் இருக்கக்கூடிய எளிமையான பொருட்களை வைத்து ஒரு ஃபேஸ் பேக்கை நாம் தயார் செய்யலாம். இந்த பேஸ் பேக்கை தொடர்ச்சியாக நாம் பயன்படுத்துவதன் மூலம் எப்பொழுதுமே புத்துணர்ச்சியுடன் பிரகாசமாகவும் திகழ முடியும்.
ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு காபித்தூளை சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு இதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேனை சேர்க்க வேண்டும். அடுத்ததாக ஒரு ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சம் பழச்சாறை சேர்க்க வேண்டும். கடைசியாக இதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நன்றாக புளித்த தயிரை சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக கலந்தால் இது ஒரு பேஸ்ட் பதத்திற்கு வரும். முகத்தை நன்றாக சுத்தமாக கழுவி ஈரம் இல்லாமல் துடைத்து விட்டு இந்த பேஸ்டை எடுத்து நம்முடைய முகத்தில் தடவ வேண்டும். குறைந்தது 15 இல் இருந்து 20 நிமிடம் வரை இதை வைத்து இருக்கலாம். பிறகு முகத்தை கழுவி பாருங்கள். எவ்வளவு சோர்வான முகமாக இருந்தாலும் பிரகாசத்துடன் புத்துணர்ச்சியுடன் திகழும்.
இந்த ஃபேஸ் பேக்கில் சேர்க்கக்கூடிய அனைத்து பொருட்களும் நம்முடைய வீட்டு சமையல் அறையில் இருக்கக்கூடிய பொருட்கள்தான். இந்த பொருட்கள் அனைத்துமே நம்முடைய சருமத்திற்கு நன்மையை தரக்கூடியது. எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாது. இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற வீதம் தொடர்ச்சியாக நாம் பயன்படுத்தும் பொழுது நம்முடைய முகம் எப்பொழுதும் பிரகாசமாகவும் புத்துணர்ச்சியுடனும் திகழும்.
இதையும் படிக்கலாமே:கரும்புள்ளிகளை நீக்கும் ஃபேஸ் பேக்
வீட்டு சமையலறை என்பது நம்முடைய மருத்துவமனை மட்டுமல்ல, அழகு நிலையமும் கூட. சமையலறையில் இருக்கக்கூடிய பொருட்களை சரியாக பயன்படுத்தினோம் என்றால் நாம் என்றும் அழகுடனும் இளமையுடனும் திகழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.