- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilகரும்புள்ளிகளை நீக்கும் ஃபேஸ் பேக்

கரும்புள்ளிகளை நீக்கும் ஃபேஸ் பேக்

- Advertisement -

ஒருவருடைய தோற்றத்தை வெளிப்படுத்தக்கூடிய முக்கியமான ஒன்று அவருடைய முகம் தான். முகம் எந்தளவிற்கு பிரகாசமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு மற்றவர்களை கவர்ந்து இழுக்க முடியும் என்று கூட கூறலாம். அதனால் தான் பலரும் முகத்திற்கு அதிக அளவில் முக்கியத்துவத்தை கொடுக்கிறார்கள். முக்கியத்துவம் கொடுப்பது என்னும் பட்சத்தில் இன்றைய காலத்தில் முகத்திற்காக கிரீம்களை பயன்படுத்துவது அல்லது அழகு நிலையம் சென்று பலவிதமான வழிமுறைகளை பின்பற்றுவது போன்றவற்றை செய்கிறார்கள். அதற்கு பதிலாக வீட்டிலேயே எளிமையான முறையில் பல ஃபேஸ் பேக்குகள் இருக்கின்றன. ஒவ்வொரு ஃபேஸ் பேக்கிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகளை நீக்குவதற்கு எந்த ஃபேஸ் பேக்கை உபயோகப்படுத்த வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

முகத்தில் ஏற்படக்கூடிய கரும்புள்ளிகளுக்கு பலவிதமான காரணங்கள் இருக்கின்றன. அந்த காரணங்களை கண்டறிந்து அதை சரி செய்வதோடு இந்த ஒரு ஃபேஸ் பேக்கையும் நாம் பயன்படுத்தும் பொழுது விரைவிலேயே கரும்புள்ளிகள் நீங்கும். மேலும் இளம் வயதிலேயே சருமம் தளர்வடைந்து வயதான தோற்றத்தை பெற்று விட்டவர்கள் இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தும் பொழுது அவர்களுடைய சருமம் இறுகி, இளமையான தோற்றத்தை பெறுவார்கள். இளமையான தோற்றத்தில் இருக்கக்கூடியவர்கள் இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தும் பொழுது இன்னும் அதிக அளவில் முகப்பொலிவுடன் இளமையாகவும் திகழ ஆரம்பிப்பார்கள்.

- Advertisement -

இந்த ஃபேஸ் பேக் தயார் செய்ய மூன்றே மூன்று பொருட்கள்தான் தேவைப்படும். ஒன்று பாதாம் பருப்பு, மற்றொன்று முட்டை, கடைசியாக எலுமிச்சம்பழம். இவை மூன்றுமே எளிதில் கிடைக்கக்கூடியது தான். அனைவரின் இல்லங்களிலும் இருக்கக்கூடியது தான் என்பதால் இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்துவதற்கு எந்தவித சிரமமும் இருக்காது.

இரவு படுக்கச் செல்லும் பொழுது ஐந்து பாதாம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் இந்த பாதாம் பருப்பை தோல் உரித்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த பாதாம் பருப்புடன் முட்டையின் வெள்ளை கரு ஒரு ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு இதில் 5 சொட்டு மட்டும் எலுமிச்சம் பழசாற்றை விட்டு அதையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது இது ஒரு பேஸ்ட் பதத்திற்கு வரும் இந்த பேஸ்ட்டை உங்களுடைய முகத்தில் நன்றாக தடவ வேண்டும்.

- Advertisement -

பிறகு இதை 15 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பாதாமில் இருக்கக்கூடிய விட்டமின் ஈ சத்து நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகளை நீக்குவதோடு முகத்தை பிரகாசமாக வைத்துக் கொள்ள இயலும். எலுமிச்சம் பழத்தில் இருக்கக்கூடிய விட்டமின் சி சத்து நம்முடைய முகத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். முட்டையின் வெள்ளை கருவில் இருக்கக்கூடிய சத்துக்களால் நம்முடைய முகம் என்றும் இளமையுடன் திகழ ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே:

வாரத்திற்கு இரண்டு முறை என்ற வீதம் தொடர்ச்சியாக இந்த ஃபேஸ் பேக்கை நாம் பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கி பிரகாசமான தோற்றத்தை தருவதோடு இளமையையும் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்