சில வீடுகளில் சுபகாரியம் நடப்பதில் பெரிய தடை இருக்கும். 10 வருடம் ஆகியும், 20 வருடமாகியும் வீட்டில் எந்த ஒரு சுபகாரியங்களும் நடக்காமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். அது மட்டும் அல்லாமல் கடன் பிரச்சனை அதிகமாக இருக்கும். வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு நல்லது கூட நடக்காது. வருமானத்தில் பிரச்சனை வரும். வருமானத்தில் தடை வரும்.
மூன்று வேலை சாப்பிடுவதற்கே கஷ்டம் என்ற சூழ்நிலைக்கு கூட சில நேரங்கள் உண்டாகி விடும். இவ்வளவு பெரிய பிரச்சனைக்கு தீர்வு தரக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். சமையலறையில் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் மளிகை பொருட்களை, இந்த நாட்களில் வாங்கி, சமையலறையில் இந்த திசையில் பத்திரப்படுத்தி வைத்தாலே, வீட்டில் இருக்கும் பாதி பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
சமையல் பொருட்களை எந்த நட்சத்திரத்தில் வாங்கினால், குடும்பத்திற்கு நல்லது. சமையல் பொருட்களை சமையலறையில் எந்த மூலையில் அடுக்கி வைப்பது. ஆன்மீகம் சார்ந்த சில விஷயங்களை தெரிந்து கொள்வோமா.
மளிகை பொருள் வாங்க நல்ல நாள்
பூசம், அனுஷம், உத்திரட்டாதி, பரணி, பூரம், பூராடம் இந்த 6 நட்சத்திரம் வரக்கூடிய நாட்களில் வீட்டிற்கு தேவையான மல்லிகை பொருட்களை வாங்கினால், வீட்டில் விருந்தாளிகளின் வருகை அதிகரிக்கும். வீட்டிற்கு விருந்தாளிகள் அதிகமாக வர, நம்முடைய வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.
விருந்தாளிகளை உபசரித்து வருபவர்களுக்கு சாப்பாடு போடும்போது, நம்முடைய வீட்டில் கடன் சுமை என்பதே இருக்காது. ஒரு வீட்டில் விருந்தாளிகளின் வருகை இல்லை, விருந்தினர் உபச்சாரம் இல்லை என்றால், நிச்சயம் அந்த வீட்டில் தரித்திரம் பிடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக சொல்கிறது. இதுபோல பிரச்சனை உங்கள் வீட்டில் இருந்தால், வீட்டில் விருந்தினர்களின் வருகை இல்லை என்றால், அந்த வீட்டில் வாழ்க்கைத் துணை இல்லாமல் ஒரு பெண் இருப்பார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
சரி வாங்கி வந்த மளிகை பொருட்களை சமையலறையில் எந்த மூலையில் வைப்பது. மேற்கு மற்றும் தென்மேற்கு மூலையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். சமையலறையில் இந்த இரண்டு திசைகளிலும் வாங்கி வந்த தானியம், மளிகை பொருட்களை பத்திரப்படுத்தி வைப்பது, வீட்டிற்கு சுபிட்சத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. (மேலே சொன்ன விஷயங்களை பின்பற்றும்போது உங்களுடைய வீட்டில் விருந்தாளிகளின் வருகை அதிகரிக்கும். உபசாரம் செய்யக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் வீட்டில் நல்லது நடக்கும்).
அதேபோல கூடுமானவரை, வீட்டில் இருக்கும் பெண்கள் சமையல் அறையையும், பூஜை அறை போல பராமரிக்க வேண்டும். என்னதான் நேரமின்மை காரணமாக இருந்தாலும், தூக்கத்தை கொஞ்சம் தியாகம் செய்து, காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, சமையலறைக்கு சென்று சமைப்பது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலையெல்லாம் செய்துவிட்டு உடம்பு வியர்க்கிறது. வேலையெல்லாம் முடித்துவிட்டு ஒரேடியாக குளித்துக் கொள்ளலாம் என்று நினைக்காதீர்கள். தூங்கி எழுவது என்பது, சவநிலைக்குச் சென்று மீண்டும் திரும்புவதற்கு சமம். குளித்துவிட்டு சமையல் அறைக்குச் செல்லுங்கள். வீட்டு வேலையெல்லாம் முடித்துவிட்டு மீண்டும் ஒருமுறை குளிப்பதன் மூலம் எந்த தவறும் கிடையாது.
இதையும் படிக்கலாமே: குமாரஸ்தவம் பாடல் வரிகள் தமிழில்
மேலே சொன்ன இந்த சின்ன சின்ன ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள் கூட உங்களுடைய வீட்டில் பெரிய அளவில் மாறுதல்களை ஏற்படுத்தும். முக்கியமாக வீட்டில் சுபகாரிய தடை, வீட்டில் இருக்கும் கடன் சுமை குறைய, மேலே சொன்ன விஷயங்களையும் பின்பற்றுங்கள். நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.