- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகாத்து கருப்பு கண் திருஷ்டி விலக பரிகாரம்

காத்து கருப்பு கண் திருஷ்டி விலக பரிகாரம்

- Advertisement -

காத்து, கருப்பு, ஏவல், பில்லி சூனியம் இதுபோல பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு கூட ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தால் தீர்வினை கொடுக்க முடியும். உங்களுக்கும் இதுபோல தொந்தரவுகள் இருந்தால், அதிலிருந்து விடுபட இந்த எளிமையான பரிகாரம் உதவியாக இருக்கும். நிறைய பரிகாரம் செய்தும் பலன் அளிக்கவில்லை.

வாழ்க்கையில் தினம் தினம் பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது, இந்த பிரச்சனைகளுக்கு காரணம் கண்ணனுக்கு தெரியாத ஏதோ ஒரு எதிர்மறை சக்தி தான் என்று நம்புபவர்கள், நிச்சயம் இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்து பாருங்கள். பரிகாரத்தை செய்த பிறகு வாழ்க்கையில் நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

- Advertisement -

காத்து கருப்பு கண் திருஷ்டி விலக பரிகாரம்

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை செய்யலாம். எந்த அம்மன் கோவிலில் வேண்டுமென்றாலும் செய்யலாம். 3 கரும்புள்ளிகள் இல்லாத எலுமிச்சம் பழம் வாங்கிக் கொள்ளுங்கள். அந்த எலுமிச்சம் பழத்தை கழுவி மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து, பூஜை அறையில் வைத்து, மனம் உருக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். குலதெய்வத்தையும் அம்மனையும் வேண்டி இந்த எலுமிச்சம் பழத்தை ஒரு கிண்ணத்தில் போட்டு, அம்பாள் கோவிலுக்கு எடுத்துச் செல்லுங்கள்.

இரண்டு எலுமிச்சம் பழங்களை உங்கள் தலையை சுற்றி அம்மன் கோவிலில் இருக்கும் சூலத்தில் குத்தி விடுங்கள். கையில் மீதம் ஒரு எலுமிச்சம்பழம் இருக்கிறதா. அதை அம்பாளின் பாதத்தில் வைத்து விடுங்கள். இரண்டு நிமிடம் கண்களை மூடி நன்றாக வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் உடம்பை பிடித்த கெட்ட சக்தி விலக வேண்டும். காத்து கருப்பு பின் தொடரக்கூடாது. கண் திருஷ்டி எல்லாம் விலக வேண்டும், எதிர்மறையாற்றல் விலக வேண்டும் என்று, மனமுருகி பிரார்த்தனை செய்து அம்மன் பாதத்தில் வைத்த எலுமிச்சம்பழத்தை மீண்டும் வாங்கி உங்கள் பூஜை கூடையில் வைத்து வீடு திரும்பவும்.

- Advertisement -

இப்போது பாதிக்கப்பட்டவர் யார் அவர்களை உங்கள் வீட்டு வரவேற்பு அறையில் கிழக்கு மேற்காக படுக்க வைத்து விடுங்கள். தலை கிழக்கு பக்கம் இருக்க வேண்டும். அம்மன் பாதத்தில் வைத்து எடுத்த எலுமிச்சம்பழத்தை அவர்களுடைய நெற்றி பொட்டில் இருந்து அப்படியே உருட்டி, உள்ளங்கால் வரை எடுத்து வர வேண்டும்.

எலுமிச்சம் பழம் பாதிக்கப்பட்டவர்களுடைய உடம்பை உரசி கொண்டே வர வேண்டும். பிறகு அந்த எலுமிச்சம் பழத்தை அப்படியே தரையில் விட்டு விட்டு, பிறகு ஒரு பேப்பரால் அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து ஒரு கவரில் போட்டு வீட்டிற்கு ஒதுக்குப்புறமாக குப்பை கூடையில் தூக்கி போட்டு விட வேண்டும்.

- Advertisement -

பாதிக்கப்பட்ட நபருக்கு ஒருவர் இந்த பரிகாரத்தை செய்ய துணையாக நிற்க வேண்டும். துணையாக நிற்பவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பிள்ளைகளுக்கு பிரச்சனை என்றால் தாய் செய்யலாம். கணவருக்கு பிரச்சனை என்றால் மனைவி செய்யலாம். பெண்களுக்கு அம்மா, அக்கா தங்கை இது போல உறவுகள் செய்யலாம் தவறு கிடையாது. இப்படி யாராவது ஒருவருடைய உதவியோடு இந்த பரிகாரத்தை செய்யும் போது, பாதிக்கப்பட்டவர் உடம்பில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் அந்த எலுமிச்சம் பழத்தோடு விலகிவிடும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: பங்குனி மாத தேய்பிறை பிரதோஷம் 2025

வரவேற்பு அறையில் படுத்து எலுமிச்சம் பழத்தை உருட்டி எடுத்தீர்கள் அல்லவா, அந்த குறிப்பிட்ட நபர், இந்த பரிகாரத்தை செய்த பிறகு நேராக குளியல் அறைக்குச் சென்று கல்லுப்பு போட்ட தண்ணீரில் தலைக்கு குளித்துவிட்டு வந்து, குலதெய்வத்தை வேண்டி நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எளிய பரிகாரம் அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்