27-3-2025 வியாழக்கிழமையான இன்று பங்குனி மாத தேய்பிறை பிரதோஷமானது வந்திருக்கிறது. இந்த நாளில் சிவபெருமானிடம் வேண்டிய வரங்களை கேளுங்கள். வேண்டிய வரம் உடனே கிடைக்கும். அதற்கு உண்டான ஒரு எளிய சிவ மந்திரத்தை பற்றி தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
இந்த மந்திரத்தை உச்சரிக்கும் முறை என்ன. எத்தனை நாட்கள், இந்த மந்திரத்தை உச்சரிக்க கை மேல் பலன் கிடைக்கும், என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோமா. பெரும்பாலும் நம்மில் பல பேருக்கு தெரியாத மந்திரம் இது. இந்த மந்திரத்தை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
இன்று தொடங்கி இந்த மந்திரத்தை தொடர்ந்து 21 நாட்கள் படிக்க வேண்டும். தினம் தினம் 108 முறை இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். காலை அல்லது மாலை உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இந்த மந்திரத்தை சொல்லலாம். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் இன்று மாலை பிரதோஷ நேரத்தில் சிவன் கோவிலுக்கு செல்லுங்கள்.
கையில் ஒரு வில்வ இலையை வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து, அந்த வில்வ இலையை எப்போதுமே உங்கள் கையில் வைத்துக் கொண்டால், எப்போதும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். சிவபெருமான் எப்போதும் உங்களுக்கு துணையாக நிற்பார். வில்வ இலை காய்ந்து போனாலும் அதனுடைய மகத்துவம் குறைந்து போகாது இது முதல் பரிகாரம்.
சரி, இன்றைய தினம் இந்த மந்திரத்தை வீட்டிலிருந்து படிக்கத் துவங்கலாமா. தாராளமாக துவங்கலாம். இன்று மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை பிரதோஷ நேரம். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, சிவபெருமானை மனதார வணங்கி, வேண்டிய வரங்களை கேளுங்கள். பிறகு வீட்டிலேயே பூஜை அறையில் அமர்ந்து, இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்.
இன்று தொடங்கி 21 நாள் இந்த மந்திரத்தை சொல்லுபவர்களுக்கு மனதில் நினைத்த வேண்டுதல் நிச்சயம் பலிக்கும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. 21 நாள் இடையே மாதவிடாய் நாட்கள் வந்து விட்டாலும் பரவாயில்லை. பூஜை அறையில் விளக்கு ஏற்றாமல் வீட்டில் வேறு ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லலாம் தவறு கிடையாது.
வரம் தரும் சிவ மந்திரம்
ஓம் ஸ்ரீ வர்தனாய நமஹ !
Om shree vardhanaya namaha!
வரம் தரும் மூர்த்தி இந்த சிவபெருமான். இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போதே உங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் நல்ல மாற்றங்களை உணர முடியும். அதிசக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை ஏதாவது ஒரு வரத்தை பெற பயன்படுத்திக் கொள்ளுங்கள். கெட்ட விஷயங்களுக்காக இந்த மந்திரத்தை பயன்படுத்தக் கூடாது.
இதையும் படிக்கலாமே: பொருளாதார நிலை சிறப்பாக இருக்க
வேண்டிய வரங்களை அந்த காலத்தில் எல்லாம் முனிவர்கள் தவம் இருந்து பெறுவார்கள். ஆனால் இந்த காலத்தில் மந்திரங்கள் நமக்கு அந்த வழியை காட்டிக் கொடுக்கிறது. சக்தி வாய்ந்த இந்த பிரதோஷ நாளில் ஒரு முறையாவது இந்த பதிவின் மூலம், இந்த மந்திரத்தை நீங்கள் படித்திருந்தாலும், உங்களுக்கான புண்ணியம் நிச்சயம் வந்து சேரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.