நாம் ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு சம்பாதிப்பதற்கு காரணம் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் உண்டாக வேண்டும் என்பதுதான். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டாலே நம்முடைய கஷ்டங்கள் படிப்படியாக விலக ஆரம்பித்து விடும். ஆனால் பலருக்கும் எவ்வளவு சம்பாதித்தாலும் சம்பாதித்த பணம் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு உதவாமல் தேவையில்லாத செலவுகளாக போய் சேர்ந்து விடுகிறது. அப்படிப்பட்டவர்கள் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொருளாதார நிலை சிறப்பாக இருக்க
ஒருவருடைய வாழ்க்கையில் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றால் அவருக்கு குருபகவானின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும். யார் ஒருவருடைய ஜாதகத்தில் குருவின் பலம் இருக்கிறதோ அவர்களுக்கு பொருளாதாரத்தில் எந்தவித தடைகளும் ஏற்படாது. அவர்கள் தொட்டது அனைத்தும் துலங்கும் என்றே கூறப்படுகிறது. அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்கள். அப்படி சிறப்பு வாய்ந்த குரு பகவானின் அருளை பெற்று பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு விதமான மரங்கள் உகந்த மரங்களாக திகழும். அந்த வகையில் குரு பகவானுக்கு உகந்த மரமாக திகழ்வதுதான் வாழைமரம். யாரோ ஒருவருடைய வீட்டில் வாழை மரத்தை வைத்து வளர்க்கிறார்களோ அவர்களுடைய வீட்டில் செல்வ செழிப்பிற்கு எந்தவித குறையும் இருக்காது என்று கூறப்படுகிறது. இரண்டே இரண்டு வாழை மரங்களை தங்களுடைய வீட்டில் வைத்து நீரூற்றி வளர்ப்பதன் மூலம் அந்த மரம் வளர்வது போல் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றமும் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை வீட்டில் வாழை மரத்தை வைத்து வளர்ப்பதற்குரிய இட வசதி இல்லை என்று நினைப்பவர்கள் அருகில் இருக்கக்கூடிய ஆலயத்தில் வாழை மரக்கன்றுகளை வைத்து தினமும் தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும். இப்படி செய்தாலும் குரு பகவானின் அருளால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இப்படி வளர்க்கக்கூடிய இந்த வாழை மரத்தின் அடியில் தினமும் காலையிலும், மாலையிலும் ஒரே ஒரு தீபத்தை ஏற்றி வைத்து ஊதுபத்தி காட்டி வழிபாடு செய்வதன் மூலம் குருவருள் கிடைக்கும் என்று ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது.
இரண்டு வேளையும் தீபம் ஏற்ற முடியவில்லை என்றால் ஒருவேளை மட்டுமாவது தீபம் ஏற்றலாம். தினமும் ஏற்ற இயலாதவர்கள் குரு பகவானுக்குரிய கிழமையான வியாழக்கிழமை அன்று மட்டுமாவது தீபம் ஏற்றி வழிபாடு செய்ய குரு பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அப்படி அருகில் ஆலயமும் இல்லை வீட்டில் வாழை மரத்தை வைத்து வளர்ப்பதற்குரிய இட வசதியும் இல்லை என்று நினைப்பவர்கள் வியாழக்கிழமை தோறும் வீட்டு பூஜை அறையில் குரு பகவானை மனதார நினைத்து இரண்டு மஞ்சள் வாழைப்பழத்தை வைத்து வழிபாடு செய்வதன் மூலமும் குரு பகவானின் அருளை பெற முடியும்.
இதையும் படிக்கலாமே:பங்குனி தேய்பிறை பிரதோஷ வழிபாடு
குரு பகவானின் அருளை பரிபூரணமாக பெற்று வாழ்க்கையில் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைப்பதற்கும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படவும் முழுமனதோடு இந்த வழிபாட்டை செய்தால் போதும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.