29-3-2025 சனிக்கிழமை சூரிய கிரகணம் நடக்கவிருக்கிறது. இந்த சூரிய கிரகணம் நம்முடைய இந்தியாவில் தெரியாது. இருந்தாலும் பகல் நேரத்தில் கிரகணம் நடக்க இருப்பதால், இந்த பூமி முழுவதும் கட்டாயமாக ஒரு நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். இந்த கிரகணத்தின் தாக்கம் பூமி முழுவதும் பரவலாக காணப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இந்த கிரகண நேரத்தில் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன. செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன. கிரகண நேரத்தில் என்ன மந்திரத்தை உச்சரிப்பது, என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில தகவலைத்தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
கிரகண நேரம்
இந்த சூரிய கிரகணத்தை வாழ்நாள் அதிசய சூரிய கிரகணம் என்று சொல்கிறார்கள். காரணம் ராகு, சனி, சந்திரன், புதன், சுக்கிரன், சூரியன், இந்த 6 கிரகங்களும் ஒன்றாக சேர்ந்து வரும்போது இந்த கிரகணம் நிகழ இருக்கிறது. மார்ச் 29ஆம் தேதி மதியம் 2:30 மணியிலிருந்து 6:30 மணி வரை கிரகண நேரமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இந்த 4 மணி நேரத்தில் நாம் பின்பற்ற வேண்டிய முக்கியமான 5 விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
கிரகண நேரத்தில் பின்பற்ற வேண்டியவை
உணவை ரொம்பவும் அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எளிதில் ஜீரணமாக கூடிய உணவை எடுத்துக் கொள்ளுங்கள். யாரிடமும் அதிகமாக கோபப்படாதீர்கள். உணர்ச்சிவச படாதீர்கள். இந்த 4 மணி நேரத்தில் உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தேவையான உறுதிமொழிகளை எடுத்துப் பாருங்கள். அந்த உறுதி மொழிகள் நிறைவேற கூடுதல் வாய்ப்புகள் இருக்கிறது.
இந்த நான்கு மணி நேரத்தில் முதுகு தண்டுவடத்தை நேராக வைத்து நீங்கள் தியானத்தில் ஈடுபட்டால் வேண்டிய வரங்கள் சுலபமாக கிடைக்கும். நினைத்ததை சுலபமாக சாதிக்கலாம். தியானத்தின் போது உங்கள் மனதிற்கு பிடித்த இறைவனை வழிபாடு செய்யலாம். பிடித்த மந்திரத்தை சொல்லலாம். எந்த தவறும் கிடையாது.
எந்த மந்திரமும் தெரியாது என்றால் சக்தி வாய்ந்த இந்த கருட மந்திரத்தை சூரிய கிரகண நேரத்தில் 11 முறை சொன்னால், உங்களுடைய வாழ்க்கை, இந்த சூரிய கிரகணத்திற்கு பிறகு அடுத்த கட்டத்திற்கு நல்லபடியாக நகர்ந்து செல்லும். கஷ்டங்கள் எல்லாம் இந்த சூரிய கிரகணத்தோடு முடிந்துவிடும். கிரகணத்தின் போது சொல்ல வேண்டிய மந்திரம் இதோ.
கருட மந்திரம்
ஓம் ஸ்ரீ காருண்யாய, கருடாய, வேத ரூபாய, வினதா புத்ராய, விஷ்ணு பக்தி பிரியாய, அமிர்த கலச ஹஸ்தாய, பஹு பராக்ரமாய, பக்ஷி ராஜாய சர்வ வக்கிர நாசனாய, சர்வ தோஷ, சர்ப்ப தோஷ , விஷ சர்ப்ப விநாசனாய ஸ்வாஹா
Om Sree Kaarunyaya, Garudaya, Vedha Roobaya, Vinadha Puthraya, Vishnu Bakthi Priyaya, Amirtha Kalasa Hasthaya, Bahoo, Parakramaaya, Pakshi Raajaya, Sarva Vakkira Naasanaaya , Sarva Dosha, Sarpa Dosha, Visha Sarpa Vinaasanaaya Swaha
இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி விலக அமாவாசை இரவு ஏற்ற வேண்டிய தீபம்
வாய்ப்பு உள்ளவர்கள் கிரகண நேரத்தில் இந்த மந்திரத்தை 11 முறை படித்து பலன் பெறவும். கூடுமானவரை கிரகண நேரத்தில் பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளலாம் வெளியிடங்களில் இருப்பதை தவிர்த்துக் கொள்ளலாம் வீட்டில் பூஜை அறையில் இறை வழிபாடு செய்வது உத்தமமான பலனை கொடுக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு எல்லாம் வாழ்வில் நல்லபடியாகவே நடக்க வேண்டும் என்று அந்த இறைவனை பிரார்த்தனை செய்து, இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறேன்.