- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகண் திருஷ்டி விலக அமாவாசை இரவு ஏற்ற வேண்டிய தீபம்

கண் திருஷ்டி விலக அமாவாசை இரவு ஏற்ற வேண்டிய தீபம்

- Advertisement -

29-3-2025 சனிக்கிழமையோடு சேர்ந்து அம்மாவாசை திதியும் இருக்கிறது. இந்த நாளில் சூரிய கிரகணமும் நடைபெறவிருக்கிறது. ஆனால் இந்த சூரிய கிரகணம் நம்முடைய இந்தியாவில் தெரியாது என்பதால், நமக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று விஞ்ஞானிகளால் சொல்லப்பட்டுள்ளது. ஜோதிடர்களின் கருத்தும் இதுதான். இருப்பினும் சூரிய கிரகணம் நடைபெறும் போது இந்த பூமிக்கு ஒரு நேர்மறை ஆற்றல் இருக்கும்.

ஆக இந்த சனிக்கிழமை வரும் அமாவாசைக்கு, இரட்டிப்பு சிறப்பு இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் இந்த சனிக்கிழமை சனி பெயர்ச்சியும் நடக்கவிருக்கிறது. இந்த அற்புதம் வாய்ந்த நாளில் நாம் செய்யக்கூடிய வழிபாட்டு முறைகளும் பரிகாரங்களும், நமக்கு அற்புதமான பலனை கைமேல் கொடுக்கும்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் கண் திருஷ்டி பாதிப்பு இருக்கிறதா, வீட்டில் எதிர்மறை ஆற்றலின் தாக்கம் அதிகமாக இருக்கிறதா, வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவு, வீட்டில் இருப்பவர்களுக்கு நோய்வாய்ப்படுதல், வீட்டில் இருப்பவர்களுக்கு அடிக்கடி ரத்த காயம் படுத்தல், இதுபோல எந்த பிரச்சனை இருந்தாலும், இந்த பரிகாரத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

திருஷ்டி விலக அமாவாசை தீபம்

அமாவாசை இரவு, நன்றாக இருள் சூழ்ந்த பிறகு இந்த விளக்கை வீட்டில் ஏற்றலாம். உதாரணத்திற்கு இரவு 9 மணிக்கு இந்த விளக்கை வீட்டில் ஏற்றினாலும் தவறு கிடையாது. ஊமத்தங்காய் எனறு ஒன்று இருக்கிறது பெரும்பாலும் இது நம்மில் எல்லோருக்கும் தெரிந்த காய்தான். இந்த ஒரு காயை முன்கூட்டியே கொண்டு வந்து வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் கூட இந்த காய் உங்களுக்கு கிடைக்கும். மேலே எல்லாம் முள் குத்துவது போல இருக்கும். அந்த ஊமத்தங் காயை இரண்டாக வெட்டி, உள்ளே இருக்கும் விதைகளை எல்லாம் நீக்கிவிட்டு, அதை விளக்கு போல தயார் செய்து கொள்ளுங்கள்.

அதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு, தீபம் ஏற்றி வரவேற்பு அறையில் ஒரு மணி நேரம் எரியவிட்டால் போதும். வீட்டை பிடித்த கண்திருஷ்டி தரித்திரம் கெட்ட சக்தி அனைத்தும் விலகிவிடும். வீட்டில் மீண்டும் கெட்ட சக்திகள் வந்து தங்காமல் இருக்க இந்த தீப வழிபாடு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: துஷ்ட சக்திகளிடம் இருந்து விடுபட அனுமன் மந்திரம்.

குலதெய்வத்தை நினைத்தும், முன்னோர்களை நினைத்தும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அமாவாசை இரவு ஒரு மணி நேரம் இந்த தீபம் உங்கள் வீட்டில் ஏற்றினால் போதும். முடிந்தால் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், இந்த தீபத்தின் முன்பாக அமர்ந்து  உங்கள் வீட்டு குல தெய்வத்தின் பெயரை, 108 முறை உச்சரிக்க அபரிவிதமான நல்ல ஆற்றல், பாசிட்டிவ் எனர்ஜி உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும், உங்கள் வீட்டிற்கும் கிடைக்கும் என்ற தகவல் உடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்