கருணைக் கடலே கந்தா போற்றி ! நாளைய தினம் வியாழக்கிழமை. குரு பகவானுக்கு உகந்த நாள். இந்த நாளில் திருச்செந்தூர் முருகனை குருவாக நினைத்து, பின் சொல்லக்கூடிய முறையில் வீட்டில் இருந்தபடியே வழிபாடை மேற்கொண்டால் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் அபரிவிதமாக இருக்கும். வியாபாரத்தில் இருக்கும் தடை விலக, தொழிலில் அதிக லாபம் பெற, செய்யும் வேலையில் முன்னேற்றம் பெற, திருமணம் நடக்க, குழந்தை பாக்கியம் பெற இப்படி அனைத்து விதமான வேண்டுதல்களும் உடனடியாக நிறைவேற நாளைய தினம் முருகன் வழிபாடு செய்வது சிறப்பு.
வளர்பிறை சஷ்டி வழிபாடு
நாளை 3-4-2025 அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு, “கருணைக்கடலே கந்தா போற்றி போற்றி” என்ற மந்திரத்தை வெறும் வயிற்றில் 27 முறை சொல்லி, இந்த நாளை தொடங்குங்கள். பூஜை அறையில் விளக்கு ஏற்றி, விரதத்தை துவங்கலாம். உங்கள் உடல் ஆரோக்கியத்தை பொறுத்து விரதம் இருங்கள்.
நீங்கள் விருதம் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, நாளை மாலை 6 மணிக்கு பூஜை அறையில் விளக்கு ஏற்றி முருகனுக்கு பாசிப்பருப்பால் வெல்லம் சேர்த்து, பாயாசம் செய்து வைத்து செவ்வரளி புஷ்பங்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு பூஜை அறையில் அமர்ந்து முருகனை மனம் உருகி வேண்டுதல் வையுங்கள்.
ஒரு சிவப்பு துணியில், 1 ரூபாய் நாணயத்தை வைத்து முடிந்து, முருகப்பெருமானின் திருவுருவப்படத்தின் பாதத்தில் வைத்து விடுங்கள். திருச்செந்தூர் முருகா உன்னை நம்பி தான் இருக்கிறேன். எனக்கு நல்ல வழி காட்டு என்று வேண்டுங்கள். திருச்செந்தூர் முருகனையே குருவாக நினைத்துக் கொள்ளுங்கள். பிறகு பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும்.
சஷ்டி என்று சொல்ல வேண்டிய முருகன் மந்திரம்
ஓம் ஸுப்ரமண்யாய வித்மஹே ஞானஸ்கந்தாய தீமஹி
தன்ன: குஹ ப்ரசோதயாத்.
ஓம் சத்ரு சம்ஹார சுப்ரமணியாய
சுவாமியே நமோ நமஹ !
இறுதியாக தீப தூப ஆராதனை காண்பித்து உங்களுடைய வேண்டுதலை நிறைவு செய்து கொள்ளுங்கள். இவ்வளவு தாங்க பரிகாரம். முடிந்து வைத்திருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை, வாய்ப்பு கிடைத்தால் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கொண்டு சென்று உண்டியலில் செலுத்துங்கள்.
இதையும் படிக்கலாமே: எட்டாத வெற்றியை எட்டிப் பிடிக்க வாராஹி பரிகாரம்
வாய்ப்பு இல்லை, திருச்செந்தூர் போக முடியாதவர்கள் பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு இந்த ஒரு ரூபாய் காணிக்கையை செலுத்தி விட்டு, சீக்கிரம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். கூடிய விரைவில் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்யும் பாக்கியமும் உங்களுக்கு கிடைக்கும். துன்பமான வாழ்க்கையில் இருந்து விடுதலையும் கிடைக்கும். திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா. நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு சமர்ப்பணம்.