- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஎட்டாத வெற்றியை எட்டிப் பிடிக்க வாராஹி பரிகாரம்

எட்டாத வெற்றியை எட்டிப் பிடிக்க வாராஹி பரிகாரம்

- Advertisement -

இன்று வளர்பிறை பஞ்சமி திதி. புதன்கிழமை அன்று வந்திருக்கிறது. புதன் பகவான் என்றால் நமக்கு அறிவையும் திறமையையும் கொடுக்கக் கூடியவர். திறமையாக செயல்பட்டு, செல்வ வளத்தில் உயர்ந்த நிலமைக்குச் செல்ல உதவி செய்பவர் புதன் பகவான். அதுமட்டுமல்லாமல் புதன் கிரகத்துக்கு உரிய கடவுள் பெருமாள். பெரும்பாலும் பணத்தைக் கொட்டிக் கொடுக்கக் கூடியவர்.

இந்த நாளில் வந்திருக்கும் வளர்பிறை பஞ்சமி திதியில், வாராஹி அன்னையை பின் சொல்லக்கூடிய முறையில் வழிபாடு செய்தால், நீங்கள் இதுவரை வாழ்வில் எட்டிப் பிடிக்காத வெற்றியை எட்டிப் பிடிப்பீர்கள். வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்வீர்கள். அதற்காக இன்றைய தினம் செய்ய வேண்டிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

இன்று 2-4-2025 மாலை 7 மணியிலிருந்து 8 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்வது சிறப்பு. முடியாதவர்கள் இன்றைய தினம் இரவு 10 மணிக்குள் எந்த நேரத்தில் முடியுமோ இந்த வழிபாட்டை உங்கள் வீட்டு பூஜை அறையில் செய்யுங்கள். வாராகி நினைத்து பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஒரே ஒரு வெற்றிலை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் 5 வெந்தயம் வைத்து சுருட்டி, ஒரு பச்சை நிற நூல் போட்டு கட்டி கொள்ளுங்கள். வெற்றிலை, வெற்றியை கொடுப்பது. வெந்தயம் புதன் பகவானுக்கு உரிய தானியம். இந்த வெற்றிலையை அப்படியே உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வளம் தரும் வாராஹி மந்திரம்

ஓம் ஐயம் கிலியும் சவ்வும்
வாராஹி வசி வசி ஸ்வாஹா !

என்ற மந்திரத்தை சொல்லுங்கள். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் தீர வேண்டும். வருமானம் உயர வேண்டும், மேலும் மேலும் வீட்டில் பணம் சேர வேண்டும் என்று, வாராகியை உண்மையான நம்பிக்கையோடு வேண்டி கையில் இருக்கும் அந்த முடிச்சை வாராஹியின் பாதத்தில் சிறிது நேரம் வைத்து எடுத்து, பீரோவில் வைத்தால் நிச்சயம் வீட்டில் இருக்கும் தரித்திரம் விலகும்.

- Advertisement -

பணசேர தடையாக இருக்கும் அத்தனை எதிர்மறை ஆற்றலும் விலகி, உங்கள் வீட்டு பீரோவில் பணம் சேரும். வாராஹி திருவுருவப் படம் பூஜை அறையில் இல்லை என்றாலும் பரவாயில்லை, பூஜை அறையில் சிறிது நேரம் இந்த வெற்றிலையை வைத்து எடுத்து, பீரோவில் வைக்க வேண்டும். ஐந்து நாட்கள் இந்த வெற்றிலை அப்படியே பீரோவில் இருக்கட்டும்.

இதையும் படிக்கலாமே: 2-04-2025 இன்று வளர்பிறை பஞ்சமி

ஐந்து நாட்கள் கழித்து வெந்தயத்தோடு இந்த வெற்றிலையை எடுத்து, கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். வளர்பிறை பஞ்சமி திதியில் நீங்கள் செய்யும் இந்த எளிய தாந்த்ரீக பரிகாரம் உங்களுக்கு அளவில்லா வாராகியின் அருளை பெற்று தரும். புதன் பகவானின் அருளை பெற்று தரும். பெருமாளின் அருளைப் பெற்றுத் தரும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நன்மையை செய்யும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்