444, நாளைய தினம் ஒரு மேஜிக் டே. 4-4-2025 இதுபோல, சில சக்தி வாய்ந்த எண்கள் ஒன்றாக சேர்ந்து வரும் போது, அந்த நாளுக்கு பிரபஞ்ச பேராற்றல் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதுபோல வசிய எண்கள், ஏஞ்சல் நண்பர்கள் சேர்ந்து வரக்கூடிய தேதிகளில், ஆத்மார்த்தமாக நாம் வைக்கக்கூடிய பிரார்த்தனை உடனடியாக பலிக்கும் என்பது நம்பிக்கை. இதை நாம் மட்டும் சொல்லவில்லை.
நிறைய அறிஞர்கள், இதற்குப் பின்னால் ஆராய்ச்சி செய்து இதையெல்லாம் ஏஞ்சல் நம்பர்கள் என்று நமக்கு கொடுத்துள்ளார்கள். அந்த வகையில் 444 மூன்று எண்கள் சேரக்கூடிய நாள் தான், நாளைய தினம் வரவிருக்கிறது. 444 மூன்று நான்கு என்ற எண் கூடி வரக்கூடிய இந்த வெள்ளிக்கிழமை நாளில், பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு விடுதலை கிடைக்க நாம் என்ன பரிகாரம் செய்யலாம், ஆன்மீகம் சார்ந்த ஒரு எளிய வழிபாடு இந்த பதிவில் உங்களுக்காக.
444 ஏஞ்சல் நம்பர் பரிகாரம்
நாளைய தினம் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து இந்த அதிசயமான மேஜிக் டேவும் நம்முடைய கையில் இருக்கிறது. இதை தவற விடலாமா. இந்த நாளில் மகாலட்சுமியை வசியம் செய்ய நமக்கு ஒரு வழிபாடு சொல்லப்பட்டுள்ளது. அதைத்தான் இந்த பதிவின் மூலம் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகின்றோம். நாளை காலை 4:44am மணிக்கு பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து, கண் விழித்து முகம் கை கால்களை மட்டும் கழுவிக்கொண்டால் கூட போதும்.
சுத்தபத்தமாக இருக்கும் பட்சத்தில் குளிக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. சமையலறைக்குச் சென்று வலது உள்ளங்கைகளில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு எடுத்துக் கொள்ளுங்கள். வரவேற்புறையிலேயே அமர்ந்து, கல் உப்பு கையில் கொஞ்சம் இருக்க பிடிக்கும் படி மூடி கொள்ளுங்கள். மகாலட்சுமியை மனதார நினைத்து “ஓம் ஸ்ரீம் நம!” என்ற மகாலட்சுமி பீஜ மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
4:44am மணி முதல் 4:59am மணி வரை, இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். உங்களுடைய பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர வேண்டும் என்று மகாலட்சுமியிடம் கோரிக்கையை வைத்து நாளைய தினம் இந்த வழிபாட்டை, மேற்கொள்ள வேண்டும். மந்திரத்தை சொல்லி முடித்துவிட்டு கையில் இருக்கும் உப்பை பத்திரமாக ஒரு கிண்ணத்தில் போட்டு வையுங்கள். இதை சமையலுக்கு பயன்படுத்தி வீட்டில் இருக்கும் அனைவரும் சாப்பிட வேண்டும்.
அப்போதுதான் நீங்கள் உச்சரித்த மந்திரம், உங்கள் உடம்பிற்குள் கலந்து பணத்தை சம்பாதிக்க தேவையான உத்வேகத்தை உண்டு பண்ணும். நீங்கள் பணம் சம்பாதிக்க மேற்கொள்ளும் முயற்சிகளில் படிப்படியாக முன்னேறி வெற்றியை அடைவீர்கள் பிறகு ஒரு கோடி என்ன, பல கோடி உங்கள் கையில் வரும்.
நாளை காலை 4:44 மணிக்கு இந்த மந்திரத்தை சொல்லுவது மிக மிக அற்புதம் வாய்ந்த பலனைத் தரும். சூழ்நிலை காரணமாக காலை நேரத்தை நீங்கள் தவற விட்டால், மாலை 4:44pm இந்த நேரத்திற்கு, மேல் சொன்ன அதே மந்திரத்தை உச்சரித்து நீங்கள் பலன் பெறலாம். இருந்தாலும் மாலை நேரத்தை காட்டிலும், பிரம்ம முகூர்த்த நேரத்திற்கு 1000 மடங்கு சக்தி அதிகம்.
வெள்ளிக்கிழமையோடு கூடும் இந்த பிரபஞ்ச பேராற்றல் நிறைந்த நாள், பிரபஞ்ச பேராற்றல் நிறைந்த நேரத்தை யாருமே தவற விடாதீங்க. எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் நம்பிக்கையோடு செய்ய வேண்டும். உங்களுக்கு ஆத்மார்த்தமாக நம்பிக்கை இருந்தால் மட்டும் இந்த பதிவு உங்களுக்கானது. நம்பிக்கை இல்லாமல் பரிகாரத்தை செய்வதன் மூலம் நிச்சயம் பலன் கிடைக்காது.
இதையும் படிக்கலாமே: 12 ராசிகளுக்கு உகந்த முருகன் வழிபாடு
நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள். இதுபோல பிரபஞ்ச நாள் வருடத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே வரும். இந்த நல்ல விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மன நிறைவுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்