- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவேண்டுதலை நிறைவேற்றும் தேவதை நாள்

வேண்டுதலை நிறைவேற்றும் தேவதை நாள்

- Advertisement -

இந்த பிரபஞ்சமே பேராற்றல் மிக்கதாக திகழ்கிறது. அப்படிப்பட்ட பேராற்றல் மிக்க இந்த பிரபஞ்சத்தில் பலவிதமான தேவதைகள் உலாவிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தேவதைகளின் அருளை நாம் பெற்றுவிட்டோம் என்றால் நம்மை விட பாக்கியசாலி வேறு யாருமே இருக்க முடியாது என்று கூறலாம். அப்படிப்பட்ட நல்ல தேவதைகளின் அருளை பெறுவதற்கு என்று சில சிறப்பு மிகுந்த நாட்கள் இருக்கும். அந்த நாட்களை நாம் தேவதை நாட்கள் என்று கூட கூறலாம். மேலும் அப்படிப்பட்ட நாட்களில் ஒன்றாக திகழ்வதுதான் நான்காம் மாதமான ஏப்ரல் மாதத்தில் வரக்கூடிய நான்காம் நாள். இந்த நாளை தேவதை நாள், தெய்வீக நாள் என்று கூறுவதோடு சுக்கிர நாள் என்றும் கூறலாம். அப்படிப்பட்ட நாளில் நம்முடைய வேண்டுதல் நிறைவேறுவதற்கு செய்ய வேண்டிய மந்திர வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

வேண்டுதலை நிறைவேற்றும் நாள்

ஏப்ரல் மாதம் என்பது ஆங்கில மாதத்தின் நான்காவது மாதம். அந்த நாளில் வரக்கூடிய நான்காம் தேதியை தான் நாம் தேவதை நாள் என்று கூறுகிறோம். அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால் கூடுதல் சிறப்பு வாய்ந்த சுக்கிர நாளாகவும் அது திகழ்கிறது. அப்படிப்பட்ட நாளில் விடியற்காலையில் வரக்கூடிய 4 மணியிலிருந்து 4:44 மணிக்குள் இந்த ஒரு மந்திர வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். ஒருவேளை விடியற்காலையில் செய்ய இயலவில்லை என்பவர்கள் மாலை நேரத்தில் வரக்கூடிய 4 மணியிலிருந்து 4:44 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்து விட வேண்டும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நாம் செய்வதன் மூலம் நமக்கு நான்கு விதமான வேண்டுதல்கள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. இந்த நான்கு விதமான வேண்டுதல்களை நான்கு பிரியாணி இலைகளில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வேண்டுதல் என்ற வீதம் எழுதி தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். நான்கு பிரியாணி இலைகளை கையில் வைத்துக்கொண்டு இந்த ஒரு மந்திரத்தை 44 முறை கூற வேண்டும். அப்படி கூறி முடித்த பிறகு இந்த நான்கு பிரியாணி இலைகளையும் எரித்து விடுங்கள். பிறகு தானியம் அல்லது இனிப்பு வகைகள் இவை இரண்டில் ஏதாவது ஒன்றை உங்களுடைய கைப்பட பறவைகளுக்கு தானமாக தர வேண்டும். இப்படி தருவதன் மூலம் தேவதையின் அருளால் உங்களுடைய வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

மந்திரம்

“ஓம் சகல தேவத வசிய பசிய சகல தோஷ நிவர்த்தியத்தம் தனசக்தி காரியசக்தி ப்ராதத்தம்”

- Advertisement -

இதையும் படிக்கலாமே:பண தேவை பூர்த்தி அடைய முருகன் மந்திரம்

முழு மனதோடு இந்த மந்திரத்தை குறிப்பிட்ட இந்த நேரத்தில் கூறுபவர்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான தோஷங்களும் நிவர்த்தி ஆகுவதோடு அவர்களுடைய காரியத்தில் வெற்றிகளும் உண்டாகும், தேவதையின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்