முருகப்பெருமானை வழிபாடு செய்யாத நபர்களே இருக்க முடியாது என்று கூட கூறலாம். அப்படி அனைவருக்கும் அருளை வழங்கக்கூடிய முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்குரிய தினமாக தான் சஷ்டி திதி வரக்கூடிய தினம் திகழ்கிறது. அன்றைய நாளில் நம் முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபாடு செய்தாலும் சாதாரணமாக வழிபாடு செய்தாலும் முருகனின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அந்த வகையில் பங்குனி மாதத்தின் வளர்பிறை சஷ்டி அன்று அவசர பண தேவைகள் பூர்த்தியடைய செய்ய வேண்டிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பண தேவை பூர்த்தி அடைய மந்திரம்
முருகப்பெருமானுக்கு உகந்த தினங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் சஷ்டி திதி வரக்கூடிய தினம். சஷ்டி திதி என்பது வளர்பிறை சஷ்டி தேய்பிறை சஷ்டி என்று மாதத்தில் இரண்டு முறை வரும். அதிலும் குறிப்பாக வளர்பிறை சஷ்டியில் நாம் செய்யக்கூடிய வழிபாடும் பரிகாரமும் நம்முடைய வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ள உதவும். அந்த வகையில் ஏப்ரல் மாதத்தின் மூன்றாம் தேதியான இன்று காலை 4:00 மணியிலிருந்து நாளை விடியற்காலை 3:46 மணி வரை சஷ்டி திதி என்பது இருக்கிறது. வியாழக்கிழமையோடு சேர்ந்து வருவதால் இந்த சஷ்டியை குபேர சஷ்டி என்று கூறுவது உண்டு.
அப்படிப்பட்ட இந்த குபேர சஷ்டி நாள் அன்று முருகப்பெருமானை நினைத்து இந்த ஒரு மந்திரத்தை கூறி வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய அவசரமான பணத் தேவைகள் பூர்த்தி அடைவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. இந்த வழிபாட்டை மாலை 6:00 மணியிலிருந்து இரவு 12 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம்.
வீட்டு பூஜை அறையில் இருந்து கொண்டு தான் செய்ய வேண்டும் என்று இல்லை. அன்றைய தினம் சுத்தமாக இருக்கும் பட்சத்தில் முகம் கை, கால்களை கழுவி விட்டு இந்த வழிபாட்டை செய்யலாம். அசைவம் சாப்பிட்டு இருந்தால் திரும்பவும் குளித்துவிட்டு வழிபாடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டு பூஜை அறையாகவும் இருக்கலாம் அல்லது வேறு ஏதாவது ஒரு இடமாகவும் இருக்கலாம் தரையில் அமர்ந்து இந்த மந்திர வழிபாட்டை செய்வதாக இருக்கும் பட்சத்தில் ஏதாவது ஒரு விரிப்பை மட்டும் விரித்துக் கொள்ளுங்கள். எந்த திசையை பார்த்து வேண்டுமானாலும் இந்த வழிபாட்டை நாம் செய்யலாம்.
இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு ஆறு ஒரு ரூபாய் நாணயம் வேண்டும். 6 என்பது முருகப்பெருமானுக்கு உகந்த எண் என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆறு எண்ணிக்கையில் இருக்கக்கூடிய ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தமாகக் கழுவி ஈரம் இல்லாமல் துடித்துக் கொள்ளுங்கள். பிறகு அதை உங்களுடைய வலது உள்ளங்கையில் வைத்து மடியில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு முழுமனதோடு முருகப்பெருமானை மனதார நினைத்துக் கொண்டு “ஸ்ரீம் சரவணபவ” என்னும் மந்திரத்தை குறைந்தபட்சம் 10 நிமிடத்தில் இருந்து அதிகபட்சம் 30 நிமிடம் வரை கூறலாம்.
முழுமனதோடு முருகப்பெருமானை மட்டுமே நினைத்துக் கொண்டு வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் கையில் ஆறு ஒரு ரூபாய் நாணயங்களை வைத்துக்கொண்டு யார் ஒருவர் கூறுகிறார்களோ அவர்களுக்கு இருக்க கூடிய எப்பேர்பட்ட பண தேவையாக இருந்தாலும் அந்த பண தேவை பூர்த்தியடையும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு இந்த மந்திரத்தை கூறி முடித்த பிறகு உங்களுக்கு அவசரமாக எவ்வளவு பண தேவை இருக்கிறதோ அது கிடைக்க வேண்டும் என்று முருகப்பெருமானிடம் வேண்டுதலை வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு வெள்ளை, மஞ்சள், பச்சை, சிவப்பு என்று ஏதாவது ஒரு நிறத்தில் இருக்கக்கூடிய துணியில் இந்த ஆறு ஒரு ரூபாய் நாணயங்களையும் வைத்து மூட்டையாக கட்டி பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். நீங்கள் வேண்டிய அந்த பணத்தேவை எப்பொழுது பூர்த்தி அடைகிறதோ அப்பொழுது இந்த ஆறு ரூபாய் நாணயங்களையும் எடுத்து அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்தில் இருக்கும் உண்டியலில் சேர்த்து விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே:4-4-2025 நாளை வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரும் அதிசக்தி வாய்ந்த பிரபஞ்ச நாள்.
இந்த முறையில் குபேர சஷ்டியான இன்று இரவுக்குள் முருகப்பெருமானை நினைத்து இந்த மந்திர வழிபாட்டை செய்பவர்களுக்கு முருகப்பெருமானின் அருளால் அவர்களுடைய பணத்தேவைகள் அனைத்தும் பூர்த்தி அடையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.