- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசுவாமி கயிறை கையில் கட்டிக் கொள்ளும் சரியான முறை

சுவாமி கயிறை கையில் கட்டிக் கொள்ளும் சரியான முறை

- Advertisement -

ஆன்மீக ரீதியாக சில பேருக்கு சில நம்பிக்கை ஆழமாக இருக்கும். அதில் ஒரு நம்பிக்கை தான் கையில் கயிறு கட்டும் வழக்கம். நிறைய பிரசித்தி பெற்ற கோவிலுக்கு செல்கின்றோம். நிறைய சின்ன சின்ன கோவில்களுக்கு எல்லாம் செல்கின்றோம். அந்த கோவிலில் வாசலில் விற்கும் சுவாமி கயிறை வாங்கி கையில் கட்டிக் கொள்வது நிறைய பேருக்கு பழக்கம் இருக்கும். சுவாமி டாலர் போட்ட செயின், இதுபோல வழக்கம் உங்களுக்கு இருந்தால் இனிமேல் இந்த தவறை பண்ணாதீங்க.

சாமி கயிறு கட்டும் முறை

கோவிலில் சுவாமி கும்பிட்டு விட்டு தரிசனத்தை எல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்பும் போது கயிறை வாங்கி அப்படியே கையில் கட்டிக் கொள்ளும் வழக்கம் உங்களிடம் இருந்தால் அதை இனி மாற்றிக் கொள்ளுங்கள். கோவிலுக்கு உள்ளே செல்லும்போது, அந்த கயிறை வாங்கி சொல்லுங்கள்.

- Advertisement -

அர்ச்சனைக்கூடையில் அந்த கயிறை வைத்து சுவாமியின் பாதத்தில், அந்த கயிறை வைத்து, அர்ச்சனை செய்து, மீண்டும் அந்த கயிறை வாங்கி குறிப்பிட்ட அந்த கோவிலிலேயே அமர்ந்து, அந்த கயிறை உங்கள் கையில் கட்டிக் கொண்டால் அதீத சக்தி கொண்ட கயிறாக மாறிவிடும். மாறாக கடையில் இருந்து வெறும் சாமி கயிறை வாங்கி கையில் கட்டிக் கொள்வதன் மூலம் எந்த ஒரு பலனும் நமக்கு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

உங்களுடைய சொந்த பந்தங்களுக்கு சுவாமி கயிறு வாங்கி தருவதாக இருந்தாலும் சரி, சுவாமி பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து எடுத்துக் கொண்டு வந்து, நண்பர்களுக்கு சொந்த பந்தங்களுக்கு அந்த கயிறை கொடுப்பதும் நன்மை தரக்கூடிய விஷயமாக அமைகிறது. இது ஒரு சின்ன ஆன்மீகம் சார்ந்த குறிப்புதான். ஆனால் நம்மில் பலபேர் இதை பின்பற்றுவதே கிடையாது.

- Advertisement -

அதேபோல இன்னொரு முக்கியமான விஷயம். எந்த ஒரு கயிறுக்கும் 48 நாள் தான் பவர் இருக்கும். அதற்கு மேலே அந்த ரக்ஷைக்கு சக்தி என்பது இருக்காது. 48 நாட்களுக்கு ஒரு முறை பழைய கயிறை மாற்றிக் கொள்வது நல்லது. அதேபோல சக்தி வாய்ந்த அம்மன் கோவிலில் இதுபோல கயிறை வைத்து கையில் கட்டிக் கொள்வது அதீத பலனை தரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: லட்சுமி கடாட்சம் தரும் புஷ்ய யோகம்

உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இனி இதுபோல கயிறு வாங்கி கையில் கட்டிக் கொள்ளுங்கள். இறைவனது சக்தி எப்போதும் உங்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்