குரு புஷ்ய யோகம், ரவி புஷ்ய யோகம் என்று யோகங்களை கேள்விப்பட்டிருக்கிறோம். இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய புனர்பசு பூச நட்சத்திரமும் பூச நட்சத்திரம் சேர்ந்து வரக்கூடிய நாள். இன்றைய நாள் புஷ்ய யோகம் நிறைந்த நாளாக இருக்கிறது. மேலும் இன்றைய நாள் நவமி திதியும் சேர்ந்து வருவதால் ராமநவமி கொண்டாட்டமும் சிறப்பாகவே நடைபெறும். இவ்வளவு சிறப்பு மிகுந்த நாளில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தரித்திரத்தை நீக்கி செல்வ கடாச்சத்தை நிலையாக பெற்றுத் தரும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
பூச நட்சத்திரம் வியாழக்கிழமையோடு சேர்ந்து வரும் பொழுது அதை குரு புஷ்ய யோகம் என்று கூறுவோம். அதுவே ஞாயிற்றுக்கிழமை அன்று வந்தால் அதை ரவி புஷ்ய யோகம் என்று கூறுவோம். இன்றைய தினத்தில் ஞாயிற்றுக்கிழமையோடு பூச நட்சத்திரம் சேர்ந்து வருகிறது. மேலும் காலையில் ராமபிரான் அவதரித்த புனர்பூச நட்சத்திரம் இருக்கிறது. இன்று நவமி திதி ராமர் அவதரித்த ராமநவமி இன்று தான். ஞாயிற்றுக்கிழமையோடு வருவதால் இது கூடுதல் சிறப்பை தருகிறது. இப்படி பல அற்புதமான பலன்களை தரக்கூடிய இந்த நாளில் நாம் லட்சுமி கடாட்சம் பெறுவதற்கு செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த பரிகாரத்தை இன்றைய நாள் முழுவதும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். அனைவரின் இல்லங்களிலும் கண்டிப்பான முறையில் வெள்ளி குங்குமச்சிமிழ் என்பது இருக்கும். அந்த வெள்ளி குங்குமச்சிமிழ் என்பது மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியதாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட வெள்ளி குங்குமச்சிமிழில் இன்று கருமஞ்சளை வாங்கி வந்து வைக்க வேண்டும். கருமஞ்சள் என்பது குரு பகவானுக்குரிய ஒன்றாக திகழ்கிறது. இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதை வேரம் பேசாமல் வாங்கி வந்து வெள்ளி குங்குமச்சிமிழுக்குள் வைத்து அதை மூடி பணம் நகை வைக்கும் இடத்தில் வைத்து விடலாம் அல்லது பூஜையறையில் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக வைத்து விடலாம்.
அடுத்த ரவி புஷ்கர யோகம் வரும்பொழுது இதில் இருக்கக்கூடிய கருமஞ்சளை எடுத்துப் பாருங்கள். அது நன்றாக இருக்கும் பட்சத்தில் அது அப்படியே இருக்கட்டும். ஒருவேளை பூச்சி ஏதாவது வைப்பது போல் இருந்தால் புதிதாக கருமஞ்சளை வாங்கி வந்து வைக்க வேண்டும். பழைய கரு மஞ்சளை கால்படாத இடத்தில் போட்டு விட வேண்டும். ஒருவேளை வெள்ளி குங்குமச்சிமிழ் இல்லை என்பவர்களும் வெள்ளி குங்குமச்சிமிழ் வாங்க இயலாது என்று கூறுபவர்களும் ஒரு சாதாரண சின்ன டப்பாவில் கருமஞ்சளை போட்டு வைத்தால் கூட அதற்குரிய பலன் என்பது கிடைக்கும். முழுமையான பலனை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் வெள்ளி குங்குமச்சிமிழில் கருமஞ்சளை போட்டு வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நாளில் இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை நாம் செய்வதன் மூலம் லட்சுமி கடாட்சம் நம் வீட்டில் நிரந்தரமாக நிலைத்து இருக்கும். மேலும் சுக்கிர பகவானின் அருளும் குரு பகவானின் அருளும் சூரிய பகவானின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். வீட்டில் எந்தவித தங்கு தடையும் இல்லாமல் பணமும் நகையும் சேர ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே:அதிசக்தி வாய்ந்த ராமநவமி வழிபாடு
லட்சுமி கடாட்சத்தை பெறுவதற்கு இந்த பரிகாரத்தை செய்வதோடு மட்டுமல்லாமல் நம்முடைய பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான முயற்சிகளை செய்யும்பொழுது தான் இந்த பரிகாரத்தின் பலனை நம்மால் முழுமையாக பெற முடியும். பரிகாரத்தை மட்டும் செய்துவிட்டு பணம் வரும் என்று அமைதியாக இருக்காமல் பண வரவிற்குரிய முயற்சிகளையும் மேற்கொண்டு செல்வ செழிப்புடன் சிறப்பான வாழ்க்கையை வாழ்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.