- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபங்குனி உத்திர நாளன்று வாங்க வேண்டிய பொருட்கள்

பங்குனி உத்திர நாளன்று வாங்க வேண்டிய பொருட்கள்

- Advertisement -

முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு பலவிதமான நாட்கள் இருக்கின்றன. பலரும் பலவிதமான விரத முறைகளை மேற்கொண்டு முருகப்பெருமானின் அருளை பெற வேண்டும் என்று வழிபாடு செய்வார்கள். அப்படி முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களில் ஒன்றாக திகழ்வதுதான் பங்குனி உத்திர நாள். இந்த பங்குனி உத்திரம் என்பது முருகப் பெருமானுக்கு மட்டும் உகந்த நாள் கிடையாது. இந்த நாள்தான் பல தெய்வங்களின் திருமண நாளாகவும் திகழ்கிறது. அப்படிப்பட்ட நாளில் அந்த தெய்வங்களை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு நல்ல வாழ்க்கை அமையும் என்று கூறப்படுகிறது.

மேலும் திருமணத்திற்காக காத்திருப்பவர்களும் சரி திருமண வாழ்க்கை சிறப்பாக நடக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் கண்டிப்பான முறையில் பங்குனி உத்திர நாளன்று விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும். அந்த வகையில் முருகப்பெருமானின் அருளை பெறுவதற்கு பங்குனி உத்திர நாள் அன்று வாங்க வேண்டிய பொருட்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான பொருட்கள் சிறப்பு மிகுந்ததாக திகழும். அந்த பொருட்களை அந்த தெய்வத்திற்குரிய நாளில் வாங்கி வந்து பூஜையறையில் வைத்து வழிபாடு செய்வதன் மூலம் அந்த தெய்வத்தின் அருளை நம்மால் பெற முடியும். மேலும் செல்வ செழிப்புடன் வாழ்வதற்குரிய யோகமும் உண்டாகும். அந்த வகையில் முருகப்பெருமானுக்கு உகந்த சில பொருட்கள் இருக்கின்றன. அந்த பொருட்களை பங்குனி உத்திர நாளன்று நாம் வாங்கி வைத்து வழிபாடு செய்யும்பொழுது முருக பெருமானின் அருளோடு செல்வ செழிப்பும் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த பொருட்களை அன்றைய தினம் அருகில் இருக்கக்கூடிய கடைக்கு சென்று நம் கைப்பட காசு கொடுத்து வாங்கி வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முதலாவதாக திகழக்கூடியது முருகப்பெருமானின் வாகனமாக இருக்கக்கூடிய மயிலின் இறகு தான். இதை அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திலோ அல்லது காதிபவன், நாட்டு மருந்து கடை போன்ற இடங்களில் இருந்தோ வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் முருகப்பெருமானின் படத்திற்கு அருகில் வைத்து வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்வில் இதுவரை இருந்து வந்த எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கி நேர்மறை ஆற்றல்கள் மிகுந்ததாக திகழும்.

- Advertisement -

அடுத்ததாக முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த ஒரு பிரசாதமாக திகழ்வதுதான் பஞ்சாமிர்தம். இந்த பஞ்சாமிருதத்தில் சேர்க்கக்கூடிய பொருட்களாக திகழ்ந்தவை தான் கற்கண்டு, பேரிச்சை, வாழைப்பழம். இவை மூன்றுமே முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த பொருளாகவே திகழ்கிறது. டைமண்ட் கற்கண்டை வாங்கி வந்து வைக்காமல் பெரிய கற்கண்டை வாங்கி வர வேண்டும். இவை அனைத்தையும் நாம் தனித்தனியாக கூட வைக்கலாம் அல்லது இவற்றை பஞ்சாமிர்தமாக தயார் செய்து வைத்தும் வழிபாடு செய்யலாம்.

அடுத்ததாக முருகப் பெருமானுக்கு வாசனை மிகுந்த பொருட்கள் என்பது மிகவும் பிடிக்கும். மேலும் அவர் அபிஷேக பிரியராகவும் திகழக்கூடியவர். அதனால் அன்றைய தினத்தில் முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்தமான சந்தனம், பன்னீர் போன்ற பொருட்களை வாங்கி வந்து வீட்டில் இருக்கக் கூடிய முருகப்பெருமானின் சிலைக்கு அல்லது வேலுக்கு அபிஷேகம் செய்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒருவேளை அபிஷேகம் செய்யும் முறை இல்லை என்பவர்கள் அதை முருகப்பெருமானுக்கு முன்பாக வைத்து வழிபாடு செய்வதும் நல்ல பலனை தரும்.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால் மகாலட்சுமிக்குரிய கல் உப்பு, மஞ்சள் தூள் சுக்கிர பகவானுக்குரிய வெள்ளை மொச்சை போன்றவற்றையும் வாங்கி வந்து வைத்து வழிபாடு செய்வதன் மூலம் முருகப் பெருமானின் அருளோடு மகாலட்சுமி மற்றும் சுக்கிர பகவானின் அருளையும் நம்மால் பரிபூரணமாக பெற முடியும்.

இதையும் படிக்கலாமே:காமதா ஏகாதசி வழிபாடு

மேற் சொன்ன பொருட்கள் அனைத்தையும் வாங்கி வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது. நம்முடைய பொருளாதார வசதிக்கேற்ப முழு மனதோடு மன மகிழ்ச்சியோடு ஒரு சிறிய அளவாவது ஏதாவது ஒரு பொருளை வாங்கி வைத்து வழிபாடு செய்தாலும் முருகப்பெருமானின் அருளை நம்மால் பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்